சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Friday, June 20, 2025

கருப்பு பணம் பிரட்ச்சனை - ஸ்விஸ் பேங்க்














அது 2011ம் வருடம், கருப்பு பணம் பிரட்ச்சனை கொழுந்துவிட்டெரியும் ஒரு தீவிரமான பிரச்சனையாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முக்கியமாக ஸ்விஸ் பேங்கில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம்.

ஸ்விஸ் பேங்கில் வைத்திருக்கும் பணம் மிக ரகசியமானது, அது அவர்களது ஆர்டிகிள் 47 ல் பாதுகாக்கப்பட்டது. எனவே அதை அந்த அரசாங்கமே மீறமுடியாது, எந்நிலையிலும் அந்த ரகசியத்தை பாதுகாப்பார்கள். எனவே ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை பெறுவது எளிதல்ல. ஆனால் பிஜேபியின் பிரச்சாரத்தால் எழுந்த பிரச்சனையின் தீவிரத்தால் அப்போது இருந்த காங்கிரஸ் அரசு தனது தூதரக உறவு வழி நீண்டகாலம் போராடி, பெரும் முயற்சிக்கு பின் ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை பெற்றது. அவர்களது திட்டம், அந்த விவரங்களைக் கொண்டு அந்த குறிப்பிட்ட நபர்கள் சட்டத்துக்கு புறம்பான தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்களா என்று அவர்களை கண்காணிப்பதும், அவர்களது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களுக்கான நடவடிக்கை, வருமானவரி வசூலித்தல் போன்றவற்றை செய்வது. ஆனால் எல்லாமே அரசு அமைப்புகளுக்குள் ரகசியமாக செய்ய முடியுமே தவிர பொதுவெளியில் ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் விபரங்களை வெளியிட முடியாது, அந்த ஒப்பந்தத்தில்தான் ஸ்விஸ் நாட்டிடம் இருந்து இந்த விவரங்கள் பெறப்பட்டன. ஒரு நாடாக இந்தியா அந்த ஒப்பந்தத்தை மீற முடியாது.



ஆனால் இதை வைத்து பிஜேபி எப்படி அரசியல் செய்ய முடியும்??? எனவே ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் தகவல்களை பொதுவில் வெளியிட வேண்டும் என்று போராட்டம் நடத்தியது. தகவல்கள் சார்ந்த நடவடிக்கையைவிட அந்த அறிக்கையை பொதுவில் வெளியிட வேண்டும் என்பதில் அரசை நெருங்கியது. அந்த பணம் எல்லாம் ஊழல் செய்த பணம், அவர்கள் தகவல்களை வெளியிடாததன் மூலம் ஊழல்வாதிகளை அரசு பாதுகாக்கிறது என்று தீவிரமாக பிரச்சாரம் செய்தது. போராட்டம் நடத்தினார்கள். நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் முடக்கினார்கள். கட்சி ஆதரவாளர்கள் வழக்கம் போல் வாட்ஸப்பில் எதிர்க்கட்சி பெருந்தலைகள் பெயரெல்லாம் போட்ட டாக்குமென்ட்களை போட்டோஷாப் செய்து, தமக்கு விருப்பமான எண்களை போட்டு பரப்பினார்கள். குழுக்களில் தேசபக்தி மிளிர விவாதித்தார்கள். ஆனால் எதிர்க்கடசி அரசின் எந்த சமரசத்துக்கும் செவிசாய்க்கவில்லை. பிரணாப் முகர்ஜி எதிர்க்கட்சி தலைவர்களுடன் மதிய உணவு பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தியும் எந்த சமரசமும் ஏற்படவில்லை.

அந்த பாராளுமன்ற தேர்தலில் அது ஒரு பெரும் பிரச்சாரமாக இருந்தது. கருப்பு பணத்திற்கு எதிரான இந்தியர்களின் உணர்ச்சி, அதை செய்த ஊழல் பேர்வழிகளை, குற்றவாளிகளின் பெயரை வெளியில் சொல்லாமல் "காப்பாற்றும்" காங்கிரஸ் மீது திருப்பப்பட்டது. அந்த பணத்தை இந்தியா கொண்டுவந்தால் ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடலாம் என்று ஆசைவார்தைகள் மூலம்தான் மோடி ஆட்சிக்கே வந்தார், (இன்றும் 15 லட்சம் அவரை துரத்திக்கிட்டு இருக்கு)

ம்ம்ம்ம்ம்.... எல்லாம் முடிஞ்சிடுச்சு, ஆட்சிக்கு வந்தாச்சு ....

2013 - "India vows tough punishments, including jail terms of up to 10 years for those who hide undeclared cash outside the country." - Arun Jaitley, Finance Minister, Parliament.

2017 - ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் 50% அதிகரிப்பு 3 ஆண்டுகளில் முதல்முறையாக உயர்வு -செய்தி

2018 - "Stupid To Presume That All Swiss Money Is Black": Arun Jaitley (அஃப் கோர்ஸ், அப்படி presume பண்ணி உங்களுக்கு ஓட்டு போட்டவர்களை நீங்கள் முட்டாள்கள் என்றே சொல்லலாம், ஒன்னும் தப்பில்லை😃)

2019 - The Union Finance Ministry has refused to reveal the Swiss bank accounts details of Indians saying it is covered under “confidentiality provisions” of a tax treaty signed between India and Switzerland - News

2019- why it’s being assumed all the money in Swiss banks is illegal -Finance Minister, Piyush Goyal.

2021 - ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் மேலும் 50% அதிகரிப்பு, 14 வருட உச்சம்- செய்தி

2022- சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல. -நிர்மலா சீத்தாராமன், நிதியமைச்சர்.

2024 - சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ஒரே வருடத்தில் மூன்று மடங்காக உயர்வு. Indian Money In Swiss Banks Tripled In 2024 To Nearly ₹37,600 Crore, Highest Since 2021





“This is sheer hypocrisy and dishonesty with the public of India and at least you should have the courage to tell the public that reality in governance is different from rhetoric from the pulpit when you seek to mislead the people to get votes," - Abhishek Manu Singhvi, Congress spokesperson.

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home