"அறிவியல் கதை" "அறிவியல் புனைக்கதை"
"அறிவியல் கதை" "அறிவியல் புனைக்கதை"
இவற்றை "அறிவியல் கதை" "அறிவியல் புனைக்கதை" என்று இரண்டாக பிரித்துக்கொள்கிறேன். "அறிவியல் கதை" என்பது அறிவியலை ஒரு கதையில் ஏற்றி சொல்வது அல்லது கதை போல் சொல்லுவது. சிறுவயதில் "நிலவுக்கு போகலாம் வா" "வியக்கவைக்கும் விண்ணகம்" என்று நிறைய கதைகளை படித்திருக்கிறோம், இல்லையா?. அங்கு முதன்மைப்படுத்தப்படுவது அறிவியல், கதை என்பது அறிவியலை ஏற்றி சொல்வதற்கான ஒரு ஊர்தி மட்டும்தான். எனவே அங்கு சொல்லப்படுபவை அறிவியலை மீறி செல்லாது. நீங்கள் கேட்பது அங்கு கிடைக்கும்.
ஆனால் அறிவியல் புனைக்கதை என்பது "அறிவியல்" இல்லை, அது அறிவியலை "தாண்டி" செல்லுவதற்கான ஊர்தி/யுக்தி. It is fictionalized thought experiment.... அங்கு அறிவியல் என்பது அதன் அடிப்படை கட்டுமானத்துக்கு மட்டும்தான், புனைவு அதன் மேல் கட்டி எழுப்பப்பட்டு அறிவியலை தாண்டி செல்வதற்கான நோக்கத்தை கொண்டது. அது அடிப்படை அறிவியலை ஒட்டி இருக்கும்தான், ஆனால் அறிவியலை மீறி.... நம் சிந்தனையை மேலேற்றி பறக்க செய்யும்..... ஒரு பாய்சசல்..... நோக்கமே அதுதான்...,. Science fiction is to describe what science cannot yet describe..... but may eventually. That eventuality lies with the fictitious mind, not with the science what we know.
அறிவியல் புனைவு என்பது அறிவியல் இன்னும் சென்று பார்க்காத அறிவியலின் வீச்சை அதன் பரப்பை நமது சிந்தனை மூலம் முன் சென்று பார்க்க எத்தனிப்பது, a thought experiment அதற்க்கு அந்த இலக்கியம் அறிவியலையும் ஒரு கச்சா பொருளாக எடுத்துக்கொள்கிறது, அவ்வுளவுதான். ஆனால் அதன் நோக்கம் அறிவியலை சொல்வது அல்ல. ("இது என்னங்க அடிப்படை அறிவியலே தெரியாமல் .... அது ஸ்ரோடிஞ்சருடையதாகவே இருந்தாலும் பூனை எப்படி ஒரே நேரத்தில் இறந்தும் உயிருடனும் இருக்கும்" ஹாஹாஹா ) The aim of science fiction is to reveal the philosophical insights into the event horizon between what is known and what is not. நமக்கு தெரிந்தது அல்லது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டதுதான் வேண்டும் என்றால் "அறிவியல்கதைகளை" படிக்கலாம் அல்லது டாகுமெண்டரிகள் பார்க்கலாம், அவற்றின் நோக்கம் அதுதான்.
அறிவியல் புனைக்கதை ஒரு இலக்கிய வகைமை, அதன் நோக்கம் இலக்கியத்தின் நோக்கம்தான், அதில் சுத்த அறிவியலை தேடாதீர்கள். அதன் முதன்மை நோக்கம் அது அல்ல. இலக்கியத்தின் நோக்கம் புரிந்தால் இந்த அறிவியல் இலக்கியவகைமையின் நோக்கமும் புரியும். இலக்கியம் என்பது எளிமையாக சொல்வது, புரியும்படி சொல்வது, நேரடியாக சொல்வது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் என்றால் நீங்கள் டேக் டைவர்சன் எடுத்து "நிலவுக்கு போகலாம் வா" புத்தகங்கள் படிக்கலாம், அது உங்களுக்கு சரியாக வரும்.
இலக்கியத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு அறிவியல் புனைக்கதையின் நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடியாது. சொல்லி புரிய வைக்க முடியாது. போகன் முன்னாடி ஒருமுறை சொன்னாரு, "இவங்களும் பண்ணி பண்ணி சொல்லி புரியவைக்க முயற்சிக்கிறாங்க, அவங்களுக்கும் புரிய மாடடேங்குது, சரி, அவங்களுக்குத்தான் புரிய மாட்டேங்குதேன்னு இவங்க விட்டுத்தொலையவும் மாடடேங்குறாங்க" என்று பொருள்வரும்படி ....
"பாக்டிரியா செடிகளில் ஒட்டி இருந்ததை பார்த்தாள்" என்பதை வைத்து பாக்டிரியாவை எப்படி வெறும் கண்ணால் பார்க்க முடியும், அப்புறம் எதற்கு மைக்ராஸ்க்கோப் என்று சிரிக்கிறார்கள். அதை படித்தபோது உண்மையிலேயே நான் சிரித்துவிடடேன். ஒவ்வொருநாளும் பாக்டிரியாக்களை வெறும் கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறேன். BL21 DE3, DH5 Alpha போன்ற பாக்டிரியாக்கள் எல்லாம் தோஸ்துகள், பிரசண்டேஷனில் அக்நாலெட்ஜ்மெண்ட் சிலைட் போடும் அளவுக்கு. அறிவியல் புனைகதைக்கு ஒரு சிறு அறிவியல் தகவல் போதும். நீரை நேரடியாக அருந்தாமல் காற்றில் இருக்கும் ஈரப்பதம் அல்லது உணவு பொருட்களில் இருக்கும் நீர்சத்தை எடுத்து உயிர்வாழும் எவ்வளவோ உயிரினங்கள் இந்த பூமியில் உண்டு, நீர் குறைவாக இருக்கும் ஒரு இடத்தில் உயிரினங்கள் வாழ்கின்றன என்று புனைவதற்கு. ஆக்சிஜன் இருந்தால் மட்டுமே உயிர் வாழமுடியும் என்பது நீங்கள் அறிந்த அறிவியல், ஆனால் மற்ற வாயுக்களை சுவாசித்து வாழும் உயிரினங்கள் இருக்கின்றன, அது போதும் ஆக்சிஜன் இல்லா இடத்தில் உயிரினங்கள் வாழ்கின்றன என்று புனைவதற்கு.
முக்கியமாக இலக்கியப்படைப்புக்கு ஒரே ஒரு யதார்த்தம் மட்டும்தான் உண்டு. அந்த படைப்பு அதற்குள் உருவாக்கி அளிக்கும் யதார்த்தம். அது உணர்த்த விரும்பும் ஒன்றிற்கு ஏதுவான ஒரு எதார்த்தத்தை உருவாக்கி, அந்த களத்தில் கதையை நிகழ்த்தி, ஒன்றை உணர்த்த முயல்கிறது. அது ஒன்றை சுட்டுகிறது, நீங்கள் அதன் கையையே பார்த்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
(நண்பர் ஒருவரின் பதிவில் விவாதித்ததை தொகுத்து )
Count The Moments |
0 Comments:
Post a Comment
<< Home