சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Wednesday, January 08, 2025

விபஸ்ஸனா



இன்று விபஸ்ஸனா ஆரம்பிக்கிறேன்.

விபஸ்ஸனா பண்ண வேண்டும் என்ற எண்ணம் 2016 போல் தோன்றியது. விபஸ்ஸனா மூலம் என்னை நான் confront பண்ண முடியும் என்ற எண்ணமே அதை செய்வதற்கான எனது முதல் ஆர்வம் மற்றும் உந்துதலாக இருந்தது. ஆனால் 12 நாட்கள் இதற்கு செலவழிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. வெளிநாடுகளில் வாழ்கையில் இது ஒரு சூழ்நிலை. அதிகபட்ஷ விடுமுறை எடுப்பதே ஊருக்கு சென்று உறவுகளை/ நண்பர்களை சந்திப்பதற்குத்தான் எனும்போது, அதைத்தாண்டி இன்னொரு 12 நாட்கள் விடுமுறை எடுப்பது சிரமமாக இருந்தது.

கடைசியாக விபஸ்ஸனா செய்தே ஆகணும்னு முடிவு பண்ணி ஸ்ரீலங்கா, கண்டி தம்மா சென்டரில் பதிவு செய்தேன், அது 2019 வருட கடைசி. கோவிட் ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் முன்னாடி. எல்லா ஏற்பாடும் ரெடி ஆகி இருந்த சமயத்தில், கோவிடால் வெளி நாட்டினர்களுக்கு அனுமதியை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று கிளம்புவதற்கு சற்று முன்பு சொல்லிவிட்டார்கள்.

S.N. கோயங்காவின் தம்மா-விபஸ்ஸனா உலகம் முழுவதற்கும் ஒரே ரிஜிஸ்ட்ரேஷன் போர்டல்தான். மொத்தம் 380 செண்டர்ஸ் உலகமுழுவதும் உண்டு. ஆனால் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மட்டும்தான் ரிஜிஸ்டர் பண்ண முடியும். அங்கு அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆச்சு எனில், அதை கேன்சல் பண்ணிவிட்டுதான் வேறு ஒரு இடத்திலோ அல்லது இன்னொரு ஒரு நாட்டிலோ மறுபடி ரிஜிஸ்ட்டர் பண்ண முடியும். இரு இடங்களில், இருவேறு தேதிகளாக இருந்தாலும் ரிஜிஸ்ட்டர் பண்ண முடியாது.

ஸ்ரீலங்காவில் சாத்தியமில்லை என்று முடிவாகியதால், சரின்னு உடனே மலேசியா சென்டரில் புக் பண்ணினேன், அப்பிளிக்கேஷன் புராஸஸ் எல்லாம் முடிந்து, அப்ரூவல் எல்லாம் ஆனபின், அவர்களிடம் இருந்தும் அதே பதில் வந்தது, "கோவிடை முன்னிட்டு ஃபாரினர்களுக்கு இப்போது அனுமதி இல்லை". விடக்கூடாதுன்னு Dhamma-Igatpuri (Bombay ) வில் பதிவு செய்தேன். Application Approved- after a week- Rejected. அப்புறமும் விடாம Dhamma- Bodhi (பீகார்) செண்டர் பதிவுசெய்தேன், அப்ளிகேஷன் அப்ரூவ்ட்-ஒரு வாரம் கழித்து - சென்டர் குளோஸ்ட்...

எல்லா இடங்களிலும் நான் அப்ப்ளிகேஷன் புராஸஸ் பண்ணும்போது open ஆக இருந்து, எல்லா புராஸஸ்ம் முடிய, அதே நேரத்தில் கோவிடின் தீவிரமும் அதற்கேற்ப அதிகரிக்க, ஒவ்வொரு செண்டராக மூடிக்கொண்டே வந்தார்கள். கடைசியாக தம்மா-போதியும் மூடிவிட... அவ்வளவுதான் அதன் பின் எங்கும் அதற்குமேல் முயலவில்லை. பின் கோவிட் ஊரடங்கு- புது வேலை- தலைமை பதவி- புது ஆராய்ச்சி - பொறுப்புகள் அதிகம் - பிசி, சாத்தியமில்லாமல் போய்விட்டது .

2024 - இந்த முறை டிசம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கும் 10-நாள் பயிற்சி மலேசியா சென்டரில் இருந்தது, டிசம்பர் 5 ஒரு மிக சிறந்த நாள். அன்பானவர்களாகவும் அதேநேரத்தில் அறிவார்ந்தவர்களாகவும் இருக்கும் உன்னதமான மனிதர்(கள்) அவதரிக்கும் நன்நாள் அது என்பதால் அன்று விபாஸன்னா ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்று மூன்றாம் சரவணவர்மன் கால கல்வெட்டு குறிப்பு ஒன்று இருக்கிறது. ஆனால் இந்த முறை அப்ளிகேஷன் போடும்போதே எல்லா செண்டர்களிலும் வெயிட்டிங் லிஸ்ட்தான். முதலில் மலேசியா செண்டர், அது சாத்தியமில்லாமல் போனபின், வியட்நாம் தலைநகர் ஹோ சி மின் செண்டருக்கு அப்ளிகேஷன், பின் இந்தோனிஷியா, மறுபடி மலேசியா செண்டர், அதிலும் கடைசி நாள் வரை காத்திருந்து இடம் கிடைக்காமல் போக, இப்ப கடைசியா இந்த ஜாவா தீவில் சாத்தியமாகி இருக்கிறது.

நல்ல இடம்., காடு மற்றும் காடு சார்ந்த இடம். அருகில் Ciliwung என்ற ஆறு, ஓடிக்கொண்டேயிருக்கிறது…..

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home