The partner in crime...
சிறு வயதில் தொடங்கி, 30 வருடங்களுக்கும் மேலான நட்பு. "உண்மையிலேயே" The partner in crime... அவனில்லாமல் நான் ஏதாவது தப்பு செய்துவிட்டேன் என்று அறிந்தால், அதற்காக நாள் குறித்து, அந்த தவறை தானும் செய்து, கணக்கை எப்போதும் பேலன்சில் வைத்திருக்க துடிப்பவன், Seriously... I am not joking ... ஆனால் தவறுகளின் தராசுத் தட்டு எப்போதும் என் பக்கம் கொஞ்சம் கீழேயே இருப்பதாக பார்த்துக் கொள்வது நானாகவும் அதை சமன் செய்ய துடிப்பது அவனாகவும் இன்றுவரை இருக்கிறது.
காடு, கரை, கம்மாய், பொட்டல் காடு என்று திருப்பத்தூரில் ஊர் சுற்றத் தொடங்கினோம்..., சிராவயல் மஞ்சுவிரட்டில், மாடுகளை துரத்தி சென்று பின் அதனிடம் இருந்து தப்பிக்க, புழுதியில் நான் ஒரு பக்கம் உருண்டு தப்பிக்க முயன்றதை அந்த வீடியோவில் பார்த்தால் கூட இன்னொரு பக்கம் அதே புழுதியில் உருண்டு கொண்டிருந்தவனாக அவன் இருப்பான்...... சிங்கப்பூரிலும் அது தொடர்ந்தது நாங்கள் திட்டமிடாதது...
எதிர்கால வாழ்வின் கனவுத் திட்டமிடல்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பவன். 60, 70 வயதுகளில் திருப்பத்தூரில் நாங்கள் என்ன செய்து கொண்டு இருக்க வேண்டும் என்பதை இருபதுகளில் இருந்தே பேசிக் கொண்டிருப்பவன். அவனின் கனவுகள் மாறும், ஏறும், இறங்கும், கூடும், குறையும், ஆனால் அதை பேசும் அவன் உற்சாகம் மட்டும் இன்றுவரை குறைந்ததில்லை... திட்டங்களின் சாத்திய அசாத்திய அரித்மேட்டிக்களுக்கு அப்பால் தன்னை எப்போதும் வைத்துக்கொள்பவன். அப்போதுதான் எழுந்த அவனது கனவு திட்டத்தை அவன் விவரிக்க, கொஞ்சம் கூட மறுகருத்தில்லாமல் அதை நான் ஆமோதித்து கேட்டுக் கொண்டிருப்பதை கேட்கும் மூன்றாம் நபருக்கு எங்கள் இருவரை பற்றிய கருத்துக்களும் கொஞ்சம் "வேறு விதமாக"த்தான் இருக்கும். 😀
அந்த குன்றாத மன ஆற்றல் அவனது வலிமை, அது அதன் உச்சியில் என்றென்றும் நீடித்திருக்க என் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா தினேஷ்.... Jeyaraman Dinesh Raja
Count The Moments |



0 Comments:
Post a Comment
<< Home