சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Monday, September 21, 2020

"படைப்பாளியையும் விட ஞானம் மிக்கது படைப்பு"

"விஷ்ணுபுரம் – இந்துத்துவம்" எனும் பதிவை
D.i. Aravindan
எழுதியிருக்கிறார். அது இந்துதுவ பிரதியா இல்லையா என்று அரவிந்தன் அதை பற்றி என்ன நினைக்கிறார் என்பது எல்லாம் பொருட்டில்லை, அது அவரது கருத்து, அவ்வளவுதான். ஒருவர் ஒரு கருத்தை முன் வைக்கும் போது அவர் தன்னையும்தான் முன்வைக்கிறார். தன்னை பற்றியும் உலகிற்க்கு அறிவிக்கிறார். அரவிந்தனே இப்படி அறிவித்துக்கொள்ளும்போது மற்றவர்கள் அதில் மேற்கொண்டு சொல்ல ஒன்றும் இல்லை.
ஆனால் அதில் // நாவலை மிகவும் பாராட்டிய விமர்சகர் சி.மோகன் நாவலைப் பற்றி ஜெயமோகனிடம் பேசினார். அதன் பிறகு நண்பர்களிடம் அவர் சொன்னதை மேற்படிக் கடிதத்தின் உள்ளடக்கம்போலவே மறக்க முடியாது:
“இந்த நாவலை இவர்தான் எழுதினாரா என்ற சந்தேகம் வருகிறது.” //
என்று எழுத்தாளர் சி.மோகன் சொன்னதாக ஒரு ஒற்றைவரியை மட்டும் சேர்த்து ஒரு தவறான புரிதலை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முயன்றிருக்கிறார். இது மிக விஷமத்தனமானது என்று கருதுகிறேன். எழுத்தாளர் சி.மோகன் அதை எப்ப சொன்னார், எந்த அர்த்தத்தில் சொன்னார் என்ற எந்த தகவலும் கொடுக்காமல், அதை மறைத்து ஒரு பெரும் பேச்சின் இடையில் வரும் ஒற்றை வரியை மட்டும் கோட் பண்ணி இன்னொரு எழுத்தாளரையும் தனது அவதூறுக்கு துணை சேர்த்துக்கொள்ளும் செயல் இது. அரவிந்தத்தின் பெரும் முயற்சியின் பலனாய் இங்கேயே ghostwriter என்று ஜெயமோகனை விளித்து சில பதிவுகளை பார்த்தேன். இதில் அரவிந்தன் அவதூறு செய்வது அந்த இன்னொரு எழுத்தாளரையும் சேர்த்துதான். இது ஒரு எழுத்தாளர் சொன்னதை திரித்து தனது அனுகூலத்துக்கு பயன்படுத்திக்கொள்வது.
எந்த ஒரு விவகாரத்தையும் verifiable facts இல்லாமல் சொல்லுவது விவாதமே அல்ல. இதில் அப்படி verifiable ஆக இருப்பது எழுத்தாளர் சி.மோகன் சொன்னதாக சொல்லியிருப்பது மட்டும்தான். எழுத்தாளர் சி. மோகனிடமே நேரடியாக பேசினேன்.



"எனது வாசிப்புப் பழக்கத்திலிருந்து தமிழில் ஜெயமோகனின் "விஷ்ணுபுரம்" படித்தபோது மிகச்சிறிய வயதிலேயே வலுவான படைப்பை உருவாக்கியிருக்கிறார், முக்கிய படைப்பாளியாக அவர் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இப்படியொரு படைப்பை உருவாக்கியதற்கான எந்த அடையாளமும் அவரிடம் அப்போது இல்லை. நாவலைப் படித்துவிட்டு அவரைச் சந்தித்து உரையாடியபோது உரையாடல் உற்சாகமற்றதாக இருந்தது. இவரா இந்தப் படைப்பை உருவாக்கினார் என்று நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் படைப்பின் விருப்பத்திற்கும் ஞானத்திற்கும் இடமளிக்கும்போது படைப்பு தன்னை உருவாக்கிக் கொள்கிறது.
"புயலிலே ஒரு தோணி" படித்துவிட்டு ப. சிங்காரத்தை சந்தித்தபோதும் இப்படித்தான் இருந்தது. சிங்காரத்தைவிடவும் ஞானம் மிக்கது அவருடைய படைப்பு. இதற்க்கு மாறாக, தன்னுடைய படைப்புகளை விடவும் புத்திசாலியாக சுந்தர ராமசாமி இருக்கிறார். இது துரதிஷ்டமானது."
என்று எழுத்தாளர் சி.மோகன் சொன்னார். நான் சொன்னதற்கு நேர்மாறாக அரவிந்தன் எழுதியிருக்கிறார் என்றார்.
(ஒரு கேள்விக்கான பதிலாக சி.மோகனின் "அங்கிகரிக்கப்படாத கனவின் வலி" என்ற அவரது நேர்காணல் தொகுப்பு புத்தகத்திலும் இதே பதில் இருக்கிறது. அந்த நேர்காணலை நடத்தியது
Lakshmi Manivannan
லட்சுமி மணிவண்ணன்)
ஒரு படைப்புக்கும் படைப்பாளியின் மனநிலைக்குமான இடைவெளியை, ஒரு படைப்பு தன்னை உருவாக்கிக்கொள்ள இடமளிக்கும்போது அது எப்படி படைப்பாளியின் கையை மீறி வளர்கிறது என்ற மேஜிக்கை விளக்கி, விஷ்ணுபுரத்தில் எப்படி ஜெயமோகன் தன்னை முன்னிலைப்படுத்தாமல் படைப்புக்கு இடமளித்திருக்கிறார் என்று சொன்னதை அவதூறு செய்வதற்காக திரித்து கூறுவது என்பது மிகவும் தவறானது.
a book that writes itself என்று சொல்வார்கள், இலக்கியத்திற்கும் இலக்கியமல்லாததற்குமான வித்தியாசமாகவே அதை சொல்லலாம். சி. மோகனின் வார்த்தைகளில் "படைப்பாளியையும் விட ஞானம் மிக்கது படைப்பு" என்பது மிகச் செறிவானது. இந்த ஒரு புரிதலை எப்படி மடைமாற்றி , நேர் எதிராக ஒரு எழுத்தாளனை அவதூறு செய்ய அரவிந்தன் பயன்படுத்தினார் என்று எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கிறது.



FB Comments
  • Saravanan Vivekanandan
     
    Mohan Chellaswamy
     திரு. மோகன் அவர்களின் கூற்றில் ஒற்றை வரியை மட்டுமே நான் தந்தேன். அது ஒற்றை வரியாக வர் கருத்தைச் சுருக்க அல்ல. படைப்பாளியின் நோக்கங்கள், கற்பனைகள், உரிமைகோரல்கள், சுயமதிப்பீடுகள் ஆகியவற்றைத் தாண்டிப் படைப்பு மேலெழும் என்னும் பொருளில்தான் அதை மேற்கோள் காட்டினேன். அதற்கு முந்தைய பத்தியில் ஜெயமோகனே சொன்னாலும் அதை இந்துத்துவப் பிரதி என நாம் கருத வேண்டியதில்லை என்று சொல்லியிருப்பதோடு இதைச் சேர்த்துப் பார்த்தால் நான் அதை எதிர்மறையாகப் பயன்படுத்த உத்தேசிக்கவில்லை என்பது புரியும்.
    1
    • Like
    • Reply
    • 6d
    • D.i. Aravindan
       அரவிந்தன் தவறை நியாயம் செய்ய முயலாதீர்கள்
      அரவிந்தன் ,இரண்டு நோக்கங்கள் உங்கள் பதிவில் மோசமானவை.முதலாவது,விஷ்ணுபுரம் இந்துத்துவ நாவல் என்று, பராதியைத் தூசு கிளப்புவது.நீங்கள் நேரடிக் கூற்றாக உங்கள் பதிவில் இப்படிச் சொல்லவில்லை ஆனால் தூசு கிளப்புகிறீர்கள்.சொல்வதைக் காட்டிலும் தூசு கிளப்புவதே அசிங்கமானது.சொல்வீர்களாயின் உங்கள் தரப்பிற்கு ,ஏதேனும் ஒரு கருத்து இருக்கும் என நம்பலாம்.ஒரு கருத்தும் இல்லாதவர்கள் தமிழ் நாட்டில் இதுபோல தூசு கிளப்புவது புதிதொன்றும் இல்லை.
      அதற்கு அனுசரணையாக, உங்கள் பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள் பலவும் கிளப்பிய தூசுக்கு பிறந்து உதித்தவையே.அவற்றில் நாலாந்தரமான பின்னூட்டங்களைக் கூட நீங்கள் முடக்கவில்லை.ஏனென்றால் உங்கள் பதிவு அவர்களிடம் காட்டித் தரும் தன்மையில் பேசுகிறது. என்னைப் போன்றவர்கள் அங்கு வந்தது தற்செயல்.
      நீங்கள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லையென்றால்,நீங்கள் இந்துத்துவம்,ஆ.எஸ்.எஸ் போன்ற சொற்களின் ,கைவிலங்குகளோடு பேசத் துணிய வேண்டியதில்லை.ஒரு நாவலைப் பேசும் தொனியோடு அதனைப் பேசலாம்.அது உங்கள் நோக்கமில்லை.
      இரண்டாவதாக கண்ணனுக்குத் துணை போவது.அது தவறு ஆகாது. குடும்ப விஷயமாக நீங்கள் துணை போனால் எவருமே கேட்கப் போவதில்லை.அல்லது சமூகம் சார்ந்த ஒரு விடயத்தில் நீங்கள் துணை நின்றால் ஒன்றுமில்லை.உங்கள் அகமும் இவ்வளவு வெளிப்படை ஆகியிராது.தமிழின் மிக முக்கியமான படைப்பாளி ஒருவருக்கு எதிராக அவருக்குத் துணை போகிறீர்கள்.இலக்கிய விஷயங்களையோ ,ஜெயமோகன் சார்ந்த விஷயங்களையோ ,சூழலை பயன்படுத்தி ;கண்ணனுக்குத் துணை போக முயற்சிப்பது சிக்கலானது.
      கண்ணன் இலக்கியத்தில் ஒரு சிறு மதிப்பும் இல்லாதவர்.அவருடைய பேச்சுகள் ,திண்ணைப் பேச்சுகள் அளவிற்கு மட்டுமே செல்லத்தக்கவை.மேற்கொண்டு அவற்றில் ஒன்றும் கிடையாது.ஆனால் அவருடைய அப்பாவின் குரல் அப்படியல்ல.அது மிகவும் முக்கியமான படைப்பாளியின்,ஒரு காலகட்டத்தின் குரல்.விஷ்ணுபுரம் நவீன காலகட்டத்திற்கு வெளியில் இருந்து தமிழில் வந்த முதல் படைப்பு.படைப்பின் ஞானம் தன்னியல்பானது என்னும் சிந்தனையே,நவீன காலகட்டத்தைச் சார்ந்தது அல்ல.பின்னர் உருவாகி வந்தது.
      ஓகே இதுவெல்லாம் இருக்கட்டும்,செய்த தவறை மீண்டும் மீண்டும் நியாயம் செய்ய முயலாதீர்கள்.அங்குதான் அதே தவறு மீண்டும் மீண்டும் உர்ஜிதம் ஆகிறது.அது தேவையில்லை.ஏனென்றால் இங்கே இருப்போர் அனைவருக்குமே உங்களுக்கு இருப்பது போலவே ஒரு மூளை உண்டு.அந்த நம்பிக்கை முதலில் நம் அனைவருக்குமே முக்கியம்.ஒருவேளை உங்களைக் காட்டிலும் பிறருக்கிருப்பவை அதிகம் வேலை செய்து கொண்டுமிருக்கலாம்.😂
      7
      • Like
      • Reply
      • 6d
      • Edited
    • D.i. Aravindan
       இப்போது நீங்கள் சொல்லும் நோக்கத்தில்தான் அந்த பதிவு இடப்பட்ட்தாக நினைக்க அந்த பதிவு தூண்டவில்லை, அரவிந்தன். சி.மோகன் என்ன அர்த்தத்தில் அதை சொன்னார் என்று அந்த பதிவுக்கு கீழேயே ஒருவர் கேட்ட விளக்கத்திற்கு கூட நீங்கள் சி.மோகன் சொன்னதையே வேறு வார்த்தைகளில் ஒற்றைவரியில் சொல்லி சென்றிருக்கிறீர்களே தவிர அதன் உண்மையான விளக்கத்தை சொல்லவில்லை.
      ஒரு செய்தியை பூடகமாக, எல்லா சந்தேகத்திற்கு இடமான வகையிலும் சொல்லி, அதை வாசிப்பவர்கள் தவறாக புரிந்துகொள்ள ஏதுவாக விட்டுவிடுவது மிகவும் வசதியானது, ஒருவேளை அது உரியவர்களால் கேள்வி கேட்கப்படடால் "நான் அந்த அர்த்தத்தில்" சொல்லவில்லை மறுதலித்துவிடலாம். விளக்கம் கேட்ட ஒருவருக்கு நீங்கள் விளக்கி இருந்தால் கூட இந்த பதிவுக்கு அவசியமில்லாமல் போயிருக்கும்.
      9
      • Like
      • Reply
      • 6d
    • அவருக்குச் சொன்ன பதிலில் நான் இதைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
      3
      • Like
      • Reply
      • 5d
    • D.i.Aravindan பெந்தகொஸ்தே சர்ச் பாஸ்டர் மாதிரியே இருக்கிங்க டூட்.
      1
      • Like
      • Reply
      • 5d
  • "அந்தப்படைப்பு வெளிப்படுத்தும் விரிவும் வீச்சும் அவர் பேசிய விதத்தில் வெளிப்படவில்லை" என்றுதான் மோகனின் கூற்றாக குறிப்பிடப்படுவதை நான் விளங்கிக் கொண்டேன்.
    Implied as ghost writing ங்கிறதெல்லாம் ரொம்ப far fetched.
    Saravanan Vivekanandan, உங்களுக்கு சுந்தர ராமசாமியின் எழுத்தை குப்பை என்று சொல்லித்தான் ஜெயமோகனைப்பற்றி நிறுவும் கருத்துக்கு பலம் சேர்க்க வேண்டியிருப்பதென்பது தமிழ் இலக்கியப் பரப்பு எவ்வளவு சீர்கெட்ட நோக்கங்களுக்குள் செயல்படுகிறது என்று தெளிவு படுத்துகிறது.
    1
    • Like
    • Reply
    • 5d
    • Edited
    • Non sense,தொடர்ந்து சுந்தர ராமசாமி பற்றியும் ,அவர் எங்களின் குரு என்பதை நினைவூட்டியும் எழுதுபவர்களில் ஒருவர் நான்.இந்த அம்மையாருக்கு ஏதேனும் பேய்பிடி உண்டா ? சுராவின் எழுத்து குப்பை என்று எங்கே சொல்லியிருக்கிறேன் ? சுரா என்னுடைய சாரம்.எங்களின் குரு.சுரா பற்றி அதிகம் நினைவூட்டி எழுதிக் கொண்டிருப்பவர்கள் நானும்,ஜெயமோகனும் மாத்திரமே.தனிப்பட்டமுறையில் நான் அவரை நினையாத நாட்கள் இல்லை. சுரா வேறு ,அவர் பையன் வேறு என்று சொல்வது ,சுராவின் படைப்புகள் குப்பை என்பதாக அர்த்தமாகுமா ? இந்த அம்மிணி எங்கிருந்து வருகிறார்?.இத்தகைய முட்டாள்களால் நிறைந்திருக்கிறது தமிழ் சூழலின் தூசி கிளப்புதல்.ஒரு தூசி கிளப்புதலுக்குப் பதில் சொல்லப்போனால் அடுத்த தூசி கிளப்புதலோடு மற்றொருவர் நுழைகிறார்.கன்றாவி
      1
      • Like
      • Reply
      • 5d
    • Lakshmi Manivannan
       மன்னிக்கவும். "இதற்கு மாறாக தன்னுடைய படைப்புகளை விடவும்...சுந்தர ராமசாமி" என்ற பதிவிலிருந்த வாக்கியத்தை அவர் பெயரையும் உள்ளீடாக்கி எழுத வேண்டியதில் அது உங்களுக்குப் போய் விட்டது.
      • Like
      • Reply
      • 5d
    • Prasanna Ramaswamy
       இந்தப் பதிவைக்கூட சரியாக வாசிக்காமல் ஆவேசப்படுவது என்ன மாதிரியான விவாதமுறையோ தெரியவில்லை.
      3
      • Like
      • Reply
      • 5d
    • Mohan Chellaswamy
       ஆமாம். எனக்கு வாசிப்பு அனுபவம், விவாதத்திறமை இரண்டும் இல்லைதான், உங்கள் எல்லோரையும் போல.
      • Like
      • Reply
      • 5d
  • Non sense,தொடர்ந்து சுந்தர ராமசாமி பற்றியும் ,அவர் எங்களின் குரு என்பதை நினைவூட்டியும் எழுதுபவர்களில் ஒருவர் நான்.இந்த அம்மையாருக்கு ஏதேனும் பேய்பிடி உண்டா ? சுராவின் எழுத்து குப்பை என்று எங்கே சொல்லியிருக்கிறேன் ? சுரா என்னுடைய சாரம்.எங்களின் குரு.சுரா பற்றி அதிகம் நினைவூட்டி எழுதிக் கொண்டிருப்பவர்கள் நானும்,ஜெயமோகனும் மாத்திரமே.தனிப்பட்டமுறையில் நான் அவரை நினையாத நாட்கள் இல்லை. சுரா வேறு ,அவர் பையன் வேறு என்று சொல்வது ,சுராவின் படைப்புகள் குப்பை என்பதாக அர்த்தமாகுமா ? இந்த அம்மிணி எங்கிருந்து வருகிறார்?.இத்தகைய முட்டாள்களால் நிறைந்திருக்கிறது தமிழ் சூழலின் தூசி கிளப்புதல்.ஒரு தூசி கிளப்புதலுக்குப் பதில் சொல்லப்போனால் அடுத்த தூசி கிளப்புதலோடு மற்றொருவர் நுழைகிறார்.கன்றாவி
    2
    • Like
    • Reply
    • 5d
  • Prasanna Ramaswamy
     1. சுராவின் எழுத்தை குப்பை என்று பதிவில் எங்கேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று தேடி பார்த்தேன். அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. ஒரு விவாதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன் அடிபடையிலேயே விவாதத்தை எடுத்து செல்லலாம். சொல்லப்பட்டதிலிருந்து அதன் அதீத உணர்ச்சிக்கு எடுத்துக்கொண்டுபோய்தான் விவாதத்தை நிகழ்த்தவேண்டும் என்று அவசியமில்லை.
    2. சொல்லப்பட்டதை “கோட்” க்குள் கொடுத்திருக்கிறேன். எனவே அதை சொன்னது நான் இல்லை. சி.மோகனின் கருத்து அது.
    3. சி.மோகன் இதை பற்றிய அவரது கருத்துக்களை விரிவாக அவரது புத்தகங்களில் எழுதியிருக்கிறார். அதை படித்து எந்த அடிப்படையில் அதை சொல்லியிருக்கிறாரோ அதே அடிப்படையில் அதை மறுக்கவும் செய்யலாம், அது ஒரு நல்ல விவாதமாகவும் இருக்கக் கூடும்.
    4. அந்த புத்தகங்களில் சி.மோகன் சுராவை மட்டுமல்ல, ஜெமோவின் புத்தகங்களிலும் எதிலெல்லாம் படைப்பை மீறி படைப்பாளி தெரிகிறான் என்ற அவரது அவதானிப்பையும் சொல்லியிருக்கிறார்.
    5. ஆனால் அந்த புத்தகங்களிலும் எதையும் அவர் குப்பை என்று சொன்னதாக ஞாபகம் இல்லை.
    7
    • Like
    • Reply
    • 5d
    • Saravanan Vivekanandan
       உங்களுடைய மிகத் தெளிவான அணுகுமுறையும் பார்வையும் மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது.
      4
      • Love
      • Reply
      • 5d
  • //உங்களுக்கு சுந்தர ராமசாமியின் எழுத்தை குப்பை என்று சொல்லித்தான் ஜெயமோகனைப்பற்றி நிறுவும் கருத்துக்கு பலம் சேர்க்க வேண்டியிருப்பதென்பது//
    They level of cognitive jump made in this statement is mind boggling. 🙄இந்தப்பதிவிலோ வேறேங்குமோ குப்பை என்று பொருள்படுபடி எதுவுமோ சொல்லப்படவில்லை.
    இங்கு சுட்டப்பட்டது படைப்பாளியின் வெளிப்பாட்டிற்கும் படைப்பின் வெளிப்பாட்டிற்கும் இடையேயான வேறுபாடு மட்டுமே .
    மேலும் ghost writing என்பது திரு அரவிந்தன் அப்படி சொன்னார் என்பதற்காக சுட்டப்படவில்லை அதை முன் வைத்து வேறு சிலர் இடும் கமெண்டை குறிப்பதே அது . மேலும் அது வெறுமனே imply செய்யப்பட்டதல்ல நானே அப்படி ஒரு கமெண்டை பார்த்திருக்கிறேன்
    5
    • Like
    • Reply
    • 5d
  • “இந்த நாவலை இவர்தான் எழுதினாரா என்ற சந்தேகம் வருகிறது” என்று சொன்ன ஒரு பதிவு சார்ந்து எந்த விமர்சனமும் இல்லை, சந்தேகம் இல்லை, ஒரு கேள்வி இல்லை. உடனே லைக் போட்டு ஆதரவு, ஆனால் எந்த எழுத்தைப்பற்றியும் குப்பைன்னு சொல்லாத ஒரு பதிவில் வந்து "சுந்தர ராமசாமியின் எழுத்தை குப்பை" என்று ஏன் சொல்லுறிங்கன்னு விதண்டாவாதம்..... நல்ல வேடிக்கை....😃
    1
    • Like
    • Reply
    • 4d


Labels:

Count The Moments
Count The Moments