சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Monday, September 20, 2021

"பேஸ்புக் விவாதச்சிக்கல்கள்"




நண்பன் Kay Vee எழுதிய "பேஸ்புக் விவாதச்சிக்கல்கள்" பதிவில் என் பின்னூட்டம்... (அந்தப் பதிவு கமெண்டில்)

இங்கு, சோசியல் மீடியாவில் இருப்பது முற்றிலும் அரசியல்தான். அரசியல்கட்சி சார்ந்த விஸ்வாசம் அல்லது இன்னொரு கட்சி சார்ந்த அலர்ஜி, நாட்டு நலன் என்பது எல்லாம் வெளியே சொல்க்கொள்வதற்கான காரணம். விவாதிப்பதில் ஏன் இவ்வளவு தடுமாற்றங்கள் எனில், சமூகநலனை மீறி கட்சி விஸ்வாசமும்/வெறுப்பும் ஓவர்டேக் பண்ணுவதால்தான்.

இவர்களை மூன்றாக சொல்லலாம் என்று தோணுகிறது.

குருப் 1-

இவர்களுக்கு எதை விவாதிப்பது, எதை விவாதிப்பதில்லை என்பது சார்ந்து தெளிவு உண்டு. ஒரு பிரட்சனையை அதற்க்கான உழைப்பை போட்டு முற்றிலும் தெரிந்து கொண்டு விவாதிப்பார்கள். வலுவற்ற பிரட்சனைகளை விவாதிக்கவே மாட்டார்கள். அதன் உள்ளேயே நுழைய மாட்டார்கள். ஆனால் எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்து நிலைபாடு எடுப்பார்கள், ஆனால் எது விவாதிக்கபட வேண்டும் என்பது அவர்கள் முடிவுதான்.

இவர்களுக்கு அந்த பிரட்சனையை போலவே “தன் மதிப்பும்” முக்கியம். எனவே ஒரு விவாதத்தில் தவறான ஒரு தகவலை சொல்லுவதோ, மொக்கையாக ஒரு விவாதத்தை முன்வைப்பதோ தமக்கான இழுக்காக உணர்வார்கள். சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து எனும் வகையில் தர்க்கபூர்வமானதை மட்டுமே முன்வைப்பார்கள்.

குருப்2

இந்த குருப்க்கு தன் கட்சி பாசமும் எதிர்கட்சி சார்ந்த ஒவ்வாமையும் இணையாக உண்டு. தன் கட்சிக்கு கெட்டபெயர் உருவாவதோ அல்லது தனது எதிரி கட்சிக்கு நற்பெயர் ஏற்படுவதோ இவர்களை பதட்டப்பட வைக்கும். அறிவார்ந்த தன்மை இவர்கள் நிலைபாட்டை குலைக்கும் என்பதால் அது தம்மை தீண்டிவிடாமல் தற்காத்துக்கொள்வார்கள். எனவே முயன்று தகவல்கள் அறிதல், அதற்க்கான உழைப்பை கொடுத்தல், தர்கத்துக்குள் வைத்து சிந்தித்து முரண்பட்டு தெளிதல் போன்ற எதுவும் இருக்காது. தன் கட்சி பாசமும் எதிர்கட்சி சார்ந்த ஒவ்வாமை மட்டும்தான்.

இவர்களுக்கு விவாதம் என்பது மேலோட்டமாக தான் கேள்விபட்டதை அல்லது பதிவில் இருக்கும் தகவல்களை வைத்து எதிராளியை குறுக்கு கேள்வி கேட்பது. அதார்க்கான தனது தகவல் அறிவு, தர்க்கம் என்பது இவர்கள் அறியாதது. அதனாலேயே தன் மதிப்பு குறைவு. கிரிக்கெட் பேட்டை எடுத்துக்கொண்டு டென்னிஸ் கோர்ட்க்கு வந்து, பந்தை அடித்து வெளியே அனுப்பிவிட்டு அதற்க்கு நாம் “சிக்ஸர்” கொடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்பார்கள்.

குருப் 3 -

இவர்கள் “வருத்திக்கொண்ட” நடுனிலையாளர்கள். தனக்கு உகந்த கட்சியை குருப் 1 ல் சொன்னதுபோல் அறிவார்ந்து தற்காப்பார்கள், அதற்க்கான உழைப்பை கொடுப்பார்கள், அதில் தெளிவு இருக்கும். தனக்கு ஒவ்வாமை இருக்கும் அரசியல் தரப்பை குருப் 2 ல் சொல்லி இருப்பதுபோல் தர்க்கமே இல்லாமல் விவாதிப்பார்கள், அதில் இருக்கும் தகவல் பிழை, தர்க்கமற்ற தன்மை எல்லாம் தனது நம்பகத்தன்மைக்கான இழுக்கு என்பதை உணரமாட்டார்கள். தனது ஒவ்வாமைக்கு பொதுவெளியில் அவர்கள் பலி கொடுப்பது தனது ரெபுடேஷன், கிரெடிபிலிட்டி என்ற தன்னுணர்வு இருக்காது. எதிர்கட்சிக்கு எதிரான எல்லா பால்களையும் அடிக்கனும் என்று அடித்து ஆடி கேலிக்குள்ளாவார்கள்.

இந்த தனக்கு விருப்பமான விஷ்யத்தை விதந்தோத அல்லது புத்திசாலிதனமாக தற்காக்க தூண்டும், தனக்கு எதிரான விஷ்யத்தை லாஜிக்கே இல்லை என்றாலும் அதை கீழ்மைபடுத்த அல்லது கேலி செய்ய தூண்டும் அந்த “உள அழுத்தத்ம்”தான் ஃபாசிசத்தின் ஆரம்ப புள்ளி. அதை கவனத்தில் கொள்வது உண்மையில் மிக முக்கியம் என்று நினைக்கிறேன்.

இதை நமக்கே நாம் validate செய்வதற்கான ஒரு வழியாகவே "தகவல்கள்", "தரவுகள்" இரண்டையும் முன்வைத்த "தர்க்கங்கள்" இருக்கிறது. நம் மனதின் மாயவிளையாட்டில்/ ஏமாற்றுதலில் இருந்து "நம்மை" நாமே தர்காக்க.

"புள்ளிவிபரம்" என்பதன் மேல் ஒரு சந்தேகத்தன்மை நமக்கு உள்ளது. ஒருவிதத்தில் அது உண்மையும் கூட. Statistical deception உண்டுதான், ஆனால் சரிபார்க்க இயலும் விபரங்கள் (Verifiable facts) இல்லாத எந்த ஒரு விவாதமும் விவாதம் இல்லை. சமூக வலைத்தளங்கள் முழுவதும் அந்த மாதிரி "கருத்துக்கள்"தான் கிடக்கிறது. யாரு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும், என்ன கருத்தை வேண்டுமானாலும் சொல்ல்லிவிட்டு போகலாம். தனிமனித கருத்து என்பதைத் தாண்டி அதற்க்கு என்ன பயன் உண்டு?

சரிபார்க்க இயலும் விபரங்கள் முன்வைத்து ஒரு நிலைப்பாட்டுக்கு ஏன் வந்தேன் என்று ஒருவர் சொல்லும்போது, அந்த விபரங்கள் மூலம் அது ஏன் தவறு என்று மற்றவர் மறுப்பதர்க்காவாவது ஒரு வழி இருக்கிறது. அதை முன்வைப்பவர் அந்த முடிவுக்கு வந்ததற்கு ஒரு அறிவார்ந்த காரணத்தையாவது முன்வைக்கிறார், அப்படி இல்லாத எந்த கருத்தும் கற்பிதங்கள், மனாசாய்வுகள் வழி வந்தவைதான், அவற்றுக்கு ஒரு “விவாதத்தில்” எந்த மதிப்பும் இல்லை.

தகவல்கள், தரவுகள், புள்ளிவிபரங்கள் போன்றவை அறிவுத்துறை சார்ந்தது. ஒரு தகவலை ஒருவர் சொல்லும்பதே அவர் அதில் "மறைக்கும்" அல்லது "துருத்தி நிற்கும்" ஒரு தகவல் சார்ந்த அடிப்படை கேள்வி அந்த விபரங்களை கண்ணோக்கும் ஒருவர் மனதில் எழுந்துவிடும், ஏமாற்றிவிட முடியாது.You can have your own opinion but not your own facts. தகவல்கள், தரவுகள், புள்ளி விபரங்கள் முதலில் நமது அறிவார்ந்த தன்மையை நாமே Validate செய்து கொள்வதற்குத்தான். எனவே அவற்றுக்கு எதிரான அனைத்தும் அறிவெதிர்ப்பே.

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home