‘அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்து
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’வின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா, “உலக அளவில் அனைவருக்கும் போடும் அளவுக்கான கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைக்க 2024ஆம் ஆண்டின் இறுதி வரை ஆகலாம்,” என்று எச்சரித்துள்ளார்.
“மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை. கொரோனாவுக்கு இரண்டு ‘டோஸ்’ தடுப்பூசி தேவை என்றால் உலகம் முழுவதும் 1,500 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படும்,” என்று குறிப்பிட்ட அவர், “35 வகையான தடுப்பூசிகள் சோதனை நிலையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆனால் அவை பயன்பாட்டுக்கு வந்து அனைவருக்கும் கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகலாம்,” என்று கூறியுள்ளார். கொரோனா பாதிப்பானது, அதற்கான தடுப்பு மருந்து உற்பத்தித் திறனைவிட அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு இந்திய நகரமான புனேவை மையமாகக் கொண்டு செயல்படும் சீரம் நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க 'ஆஸ்ட்ராஸெனகா', 'நோவாவேக்ஸ்' உள்ளிட்ட ஐந்து அனைத்துலக மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 100 கோடி ‘டோஸ்’ அளவிலான கொவிட்-19 தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய உறுதிபூண்டுள்ளது. அதில் பாதி அளவை இந்தியாவுக்கு அளிக்க அது உறுதியளித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Count The Moments |
0 Comments:
Post a Comment
<< Home