இங்க ஏற்கனவே இருந்த மெய்யியலோட வளர்ச்சியும் நீட்சியுமா அவங்க வந்தாங்க. காந்தி ஜைன மரபோட நீட்சி. "அடிகள்"னு அவரை தமிழ் மனசு நினைச்சது அதனாலேதான். பெரியார் இங்க உள்ள சித்தர் மரபோட நீட்சி”
“இங்க தமிழ்நாட்டு கிராமங்கள் ஒவ்வொண்ணிலும் கிட்டத்தட்ட பெரியாரை மாதிரி ஒரு கிழடு உக்காந்திட்டிருக்கும். ஞானமும், கிறுக்குத்தனமும், அக்கறையும், வாய்த்துடுக்குத்தனமும் எல்லாம் கலந்த ஒண்ணா இருக்கும் அது. அந்த கிழடுகளோட ஒரு பொதுவடிவம்தான் பெரியார்.
"அவர் தமிழகச் சித்தர்களோட நீட்சி. சித்தர்களிட்ட்ட இருக்கிற எகிறி அடிக்கிறதன்மை, நிலையில்லாம அங்கங்க அப்பப்ப தோணுறமாதிரி வெளிப்படுற தன்மை எல்லாமே அவர்ட்ட இருக்கு. பெரியார் இந்த மண்ணிலே ஆதிநாள்முதல் இருந்திட்டிருக்கிற ஒரு மெய்யியலோட சமகால வெளிப்பாடு”
“முரண்பாடுகளை வைச்சு பெரியாரை மதிப்பிட்டா போய்ச்சேரமுடியாது. முரண்பாடுகளை வைச்சு காந்தியைக்கூட மதிப்பிட முடியாது. பெரியாரை அவரோட எதிர்ப்பை வைச்சு மதிப்பிடுங்க. அவரோடது எதிர்ப்பின் மெய்யியல்”
விமர்சனங்களைக் கடந்து இந்தியாவில் இதுவரையிலான தலைவர்களில் மகத்தான இடதுசாரித் தலைவர் என்று யாரைச் சொல்வீர்கள்?
காந்தி, அம்பேத்கர், பெரியார்.
கொடிய சமத்துவ எதிரியான, ஒவ்வொரு இந்திய உடலுக்குள்ளும் உறைந் திருக்கும் தீண்டாமையின் ஆகிருதியை நமக்கு உணர்த்துகிறார் அம்பேத்கர்.
அந்தத் தீண்டாமையைத் தத்துவமாக மாற்றும், இந்தியாவின் வலிய எதிரியான பிராமணியத்தை எதிர்ப்பதற்காகவே ஒரு இயக்கத்தை உருவாக்கியதன் மூலம் அதனுடைய ஆகிருதியை உணர்த்துகிறார் பெரியார்.
எந்த அநீதிக்கும் எதிரான போராட்ட வடிவமான சத்தியாகிரகத்தை நமக்குத் தருகிறார் காந்தி. நாம் அத்தனை பேரும் சாகத் துணிந்து சாத்வீகமாக உட்கார்ந்துவிட்டால், எப்படியான அதிகாரமும் பணிந்துதான் ஆக வேண்டும். ஒரு சாமானிய இந்தியனுக்கு இவர்களைக் காட்டிலும் கைக்கொள்ளப் பற்றுக்கோல்கள் இல்லை.
- கோவை ஞானி
Count The Moments |
0 Comments:
Post a Comment
<< Home