சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Friday, August 23, 2019

சிங்கை இலக்கிய தனி வகைமை 3

சிங்கை இலக்கிய தனி வகைமை சார்ந்த முன்னெடுப்புகள், செயல்திட்டங்கள் பற்றி சில தோழர்கள் தமது சந்தேகங்களை உள்பெட்டியில் தெரிவித்திருந்தார்கள். இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ், சும்மா அடிச்ச்சுக்கிட்டே இருப்பாங்ஞ, அதர்க்காக தோழர்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது.
First they ignore you,
then they laugh at you,
then they fight you,
then you win என்ற அப்துல்கலாமின் பொன்மொழிகளை நினைத்துப்பார்த்துக்கொள்ள வேண்டும்.
இலக்கியம் என்பது ஒவ்வொருவரின் அகம் சார்ந்ததுதான். ஆனால் அது ஒரு அறிவுச் செயல்பாடும் கூட. எது இலக்கியமாகிறது, எப்படி அது இலக்கியமாகிறது, அதன் தனித்த கூறுகள் எவை, அவை எப்படி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு பரவி ஒரு வகைமையின் தனித்த அடையாளமாகிறது, அந்த மண் மற்றும் சமூக சூழ்னிலைகளை எப்படி தொடர்ந்து அந்த வகைமை இலக்கியம் பிரதிபலிக்கிறது என்று பல்வேறு கூறுகளை அதன் நிலைத்த அடையாளமாக நிறுவிவிட்டால் போதும், அது ஒரு தனித்த வகைமையாக நிலைபெற்றுவிடும்.
அதற்க்கு முதலில் நாம் அதை நம்ப வேண்டும். முதலில் கொஞ்சம் கடினம்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன், கொஞ்சம் சிரமம் பார்க்காமல் தோழர்கள் அதை நம்ப தொடங்கிவிட்டால், ஒரு கட்டத்துக்கு மேல் அதை நம்புவதை தவிர நமக்கு வேறுவழியில்லாமல் போய்விடும், அப்புறம் சுலபமாய்விடும். Ignore, laugh எல்லாம்தாண்டி, fight க்கு வந்துவிட்டோம் இந்த இடம் கொஞ்சம் முக்கியமான இடம். “ஒரு வேளை உண்மைதானோ” என்று நம் மாற்றுதரப்புகளும் யோசிக்க தொடங்கும் இடம் இது, இப்போது நம் தோழர்கள் குரலை கொஞ்சம் உயர்த்தி சொல்லிவிட்டால் போதும், அப்புறம் அவர்களுக்கும் அதை நம்புவதை வேறுவழி இல்லாமல் போய்விடும். then we won 💪 எனவே தோழர்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். நமது உரிமையை வென்றெடுக்கும் தூரம் தொலைவில்லை.
#நமது இலக்கியம், நமது உரிமை💪

Labels:

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home