சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Friday, August 23, 2019

சிங்கை இலக்கிய தனி வகைமை 1

ஒரு படைப்பை அதன் தளத்தில் வைத்தது புரிந்து கொள்ள முயலுங்கள்..... அதை உங்கள் இடத்திற்கு இழுத்து வராதீர்கள்..... இலக்கியப்படைப்புக்கு ஒரே ஒரு யதார்த்தம் மட்டும்தான் உண்டு. அந்த படைப்பு அதற்குள் உருவாக்கி அளிக்கும் யதார்த்தம். வேறு எந்த யதார்த்ததை வைத்தும் அதை அளவிட முடியாது. உங்கள் கிணற்று வாழ்க்கை யதார்த்தத்தை முன்வைத்தது அல்ல இலக்கியம் என்ற கடல்...... அதை ஒரு குடுவைக்குள் அடைத்து வைக்க முயலாதீர்கள்.... முடிந்தால் உங்களை கடந்து சென்று அந்த படைப்பை அடையாளம் காண முயலுங்கள்.... அந்த படைப்பாளன் விட்டிருக்கும் இடைவெளிக்குள் உங்களை நிரப்பி இன்னும் இன்னும் என்று உங்களை விருத்தி செய்யுங்கள்.... படைப்பாளன் ஹோட்டல் சர்வர் அல்ல, உங்களுக்கு வேண்டியதை அல்லது உங்க சுவைக்கு பரிமாற.....
எது இலக்கியம்னு முடிவு செய்ய அது உங்கள் வீட்டு சொத்து இல்ல... உங்களுக்கு எது இலக்கியமாக தெரிகிறதோ அதை நீங்கள் படையுங்கள், எங்கள் இலக்கியத்தை நாங்கள் படைக்கிரோம். உங்களுக்கான இலக்கியத்தை படைப்பது எங்கள் வேலையில்லை. இலக்கியம் உங்களுக்கு உயிர் மூச்சாக இருக்கலாம், ஆனால் அதை எங்கள் மேல் விடாதிர்கள்......
உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.....

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home