சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Saturday, May 18, 2013

ஜெயமோகன்

அஞ்ஞானத்தை மதில்கட்டித் தேக்கி அதில் நம் குழந்தைகளை நீச்சல்கற்க விடுகிறோம். ஞானம் கையில் தோல்பையுடன் தெருவில் அமைதியாக நடந்துசெல்கிறது.-ஜெயமோகன்


சரியான, மனிதாபிமானமுள்ள, ஒழுக்கமான, அழகான, சிறந்த விஷயங்களாலானதல்ல வாழ்க்கை. அது உண்மைகளால் ஆனது. எந்த மனிதருக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளும் மனவிரிவு அல்லது களங்கமின்மையே அதை உணர்வதற்கான முதல் தகுதி.-ஜெயமோகன்
வாழ்க்கை என்பது எந்த எளிமையான சூத்திரங்களுக்குள்ளும் நிற்பதல்ல, அது எளிமைப்பாடுகளுக்கு நேர் எதிரானது, அதன் பரப்பு எப்போதுமே கிரேஃபீல்ட் எனப்படும் பகுதிகளால் ஆனது.தெளிவு அல்ல, தெளிவின்மையே அதன் இயல்பு. அர்த்தம் அல்ல, அர்த்தங்களே அதன் இயல்பு. அது சொல்வதில்லை, உணர்த்துகிறது. அது சிந்தனையின் விளைவல்ல சிந்திக்கவைக்கும் ஒரு களம் மட்டுமே.!!!
-ஜெயமோகன்


 "இலக்கியப்பிரதி என்பது ஆழ்மனதுக்கும் மொழிக்குமான ஒரு நுட்பமான பரிமாற்றம். ஒரு ஆடல். அந்த மொழிவடிவமே நமக்குக் கிடைக்கிறது. அம்மொழிவடிவம் நம் ஆழ்மனதை சீண்டவும் விழிப்புறச்செய்யவும் பழக்கிக்கொள்வதற்குப் பெயரே வாசிப்பு என்பது. நம்மில் வாசகர்கள் என முன்னிற்பவர்களில் பெரும்பாலானவர்கள் எழுதப்பட்டவற்றை, கூறப்பட்டவற்றை மட்டுமே வாசிப்பவர்கள். மொழிவடிவம் அதன் குறியீடுகள் மூலம் நம் கனவுத்திரையில் உருவாக்கும் விளைவுகளே உண்மையான இலக்கியப்படைப்பு. அதை வாசிப்பவர்களே இலக்கியத்தை உண்மையில் வாசிக்கிறார்கள்." -ஜெயமோகன்

                        நித்யாவின் பிரியமான சொற்றொடர் ஒன்றுண்டு. ”ஒரு புதிய கருத்தை கேட்கும்போது அது புதியது என்பதனாலேயே மனஎழுச்சி கொள்ளாமலிருப்பதே தத்துவ சிந்தனையின் முதற்படி”
என் நோக்கில் தத்துவக் கருத்துக்களின் பெறுமதியை அறியும் மதிப்பீடுகள் சில உள்ளன. அவற்றை பத்து விதிகளாகவே சொல்கிறேன்.
1. தர்க்கபூர்வமாக சரியாக இருப்பதனாலேயே ஒரு கருத்து உண்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை. அது தருக்கபூர்வமான உண்மை மட்டுமே.
2 ஒரு சரியான கருத்து அதற்கு நேர் எதிரான கருத்தை தவறாக ஆக்க வேண்டும் என்பதில்லை. இரண்டுமே சரிகளாக இருக்கலாம். அவை வெவ்வேறு தளங்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்
3. இலக்கியம் ஒருபோதும் தத்துவத்தை முன்வைப்பதில்லை. தத்துவத்தின் சாயலையே அது முன்வைக்கிறது. தத்துவ சிந்தனையை உருவாக்கும் மனநிலைகளை வாசகனில் அது எழுப்புகிறது
4 ஓர் இலட்சியவாதக் கருத்து நடைமுறைத்தளத்தில் ஓரளவேனும் செல்லுபடியாகவேண்டும். முற்றிலும் இலட்சியவாதத்தனமாக உள்ள கருத்து என்பது பெரும்பாலும் பயனற்றதே
5 ஒரு திட்டவட்டமான கருத்தை அருவமாக்கியும் ஓர் அருவமான கருத்தை திட்டவட்டமாக ஆக்கியும் அதன் உண்மைமதிப்பை ஊணர முடியும்
6 ஓர் நடைமுறைக்கருத்து ஒருபோதும் திட்டவட்டமாக – முடிவானதாக இருக்கலாகாது. அது சற்றேனும் ஐயத்துக்கும் மாறுதலுக்கும் இடமளிக்கும்போது மட்டுமே அது நேர்மையானதாக இருக்க முடியும்
7 ஒரு மீபொருண்மைக் [மெட·பிஸிகல் ] கருத்து  கவித்துவம் மூலம் நிலைநாட்டப்படாமல் அதிகாரம் அல்லது நம்பிக்கை மூலம் நிலைநாட்டப்படுமென்றால் அதை முற்றாக நிராகரிப்பதே முறை.
9 தத்துவத்துடன் எப்போதுமே நேரடியான அதிகாரம் தொடர்புகொண்டுள்ளது. பெரும்பாலும் தத்துவ விவாதங்கள் அதிகாரங்கள் நடுவே உள்ள விவாதங்களே. ஆகவே நட்பான தளம் இல்லாவிட்டால் ஒருபோதும் தத்துவ விவாதம்செய்யலாகாது. அது உடனடியாக தத்துவத்தின் தளத்தை விட்டு வெளியே சென்றுவிடும்
10 அன்றாடவாழ்க்கைக்கு எவ்வகையிலேனும் பயனளிக்குமா என்ற கேள்வி தத்துவத்தின்  பெறுமதியை புரிந்துகொள்ள மிகமிக உதவியானது
-ஜெயமோகன்

மதங்களின் மெய்ஞானம்

"மதங்களின் மெய்ஞானம் ஒரு பெரும் பிரவாகமாக மக்களை இணைத்துக்கொண்டு முன்செல்கிறது. அதே சமயம், மதங்களின் அமைப்புகள் அதிகாரவர்க்கத்தால் தங்களுக்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. நான் இரண்டையும் பிரித்தே பார்ப்பேன். மதங்களை அதிகாரக்கருவிகளாகக் கையாள்பவர்களை வைத்து அம்மமதங்களை மதிப்பிட மாட்டேன்.
நாஜி கொலைமுகாம்களை நிகழ்த்தியவர்களைக் கொண்டு கிறித்தவ மதத்தை அளக்க மாட்டேன். இஸ்லாமிய தீவிரவாதிகளைக்கொண்டு இஸ்லாமை மதிப்பிட மாட்டேன். மதக்கலவரங்களை நிகழ்த்தும் இந்து மதவெறியர்களைக்கொண்டு இந்து மதத்தைப் புரிந்துகொள்ள மாட்டேன். என் நோக்கில் அதே வழிமுறைதான் பௌத்ததுக்கும்."-ஜெயமோகன்

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home