"மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் Vs வெளிப்படையான ஊழல்: அறவீழ்ச்சியின் புதிய வடிவம்"
So many things happened are clear evidence that there is a dedicated team around Trump focused on identifying every possible earning opportunity and leveraging the presidency for maximum personal profit. In the past, there was a distance between politicians and lobbyists who wanted to act in favour of businessmen, acted as intermediaries, try hard to reach politicians using different links and picture politicians that this is good for people and his presidency, and justify it and if succeed, taking their commissions quietly. Now that line disappeared…. The benefit flows directly and openly to the president himself and just to convince President that it it profitable for him is enough….
The troubling part is not the profit, but the normalization of it. In the past, even if politicians had personal interests, there was an expectation that they would maintain the appearance of public service and some boundaries for the sake of position he hold. Now, that restraint completely disappeared. It feels openly transactional…
இதில் இன்னொரு perspective உள்ளது. மக்கள் ஒருபோதும் அரசியல்வாதிகளை முழுமையாக நம்பியதில்லை. அவர்களின் ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் தனிப்பட்ட லாபம் ஒளிந்திருக்கும் என்ற சந்தேகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் பொது நலனுக்கான ஒரு செயலையே செய்கிறார்கள் என்று சொன்னாலும், அது உண்மையாகவே இருந்தாலும், மக்கள் அதில் மறைமுக ஊழல் இருப்பதாகவே “கற்பிதம்” செய்துகொள்கின்றனர், அது அவர்களின் ஒரு உளவியல் தேவையாக இருக்கிறது. அவர்கள் அரசியல்வாதிகள் முற்றிலும் சுயநலமானவர்கள் என்று நம்முகிறார்கள், அதற்கு எதிரான எந்த ஒரு கருத்தும் அவர்களை பதட்டமடய செய்கிறது. ஏனெனில் அது அவர்கள் நம்பிக்கைக்கு எதிரானது. இதில் எந்த அரசியல்வாதி எந்த ஆதரவாளர்கள் என்பது மட்டுமே மாறுகிறது, அந்த “நம்பிக்கை இன்மை” என்ற அடிநாத எண்ணம் அல்லது அப்படி நம்ப வேண்டியதான் உளவியல் தேவையில் மாற்றம் இல்லை.
மக்களின் இந்த அவநம்பிக்கை, Cynicism ஒரு பெரிய செயலை இங்கு செய்கிறது.
"ஒபாமா அல்லது கிளிண்டன் எல்லாவற்றையும் சுயநலமின்றி செய்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்கள் அதை மறைத்துச் செய்தார்கள். மற்றவர்கள் ரகசியமாகச் செய்ததை டிரம்ப் வெளிப்படையாகச் செய்கிறார், அவ்வளவுதான்."
எனவே அவர்களைப் பொறுத்தவரை, இதில் எந்தத் தார்மீக வேறுபாடும் இல்லை, நீ, நாம் மனம் மருகலாம், ஆனால் மக்களை பொறுத்தவரை “பாணியில்” மட்டுமே வித்தியாசம் உள்ளது. இது 'மறைமுக ஊழல்' மற்றும் 'சுத்தமான நிர்வாகம்' இடையிலான பிரட்சனை அல்ல…. மாறாக 'மறைக்கப்பட்ட' மற்றும் 'வெளிப்படையான' ஊழலுக்கு இடையிலான வேறுபாடு மட்டுமே.
டிரம்ப் துல்லியமாக மக்களின் இந்த நம்பிக்கையின்மையைதான் அறுவடை செய்கிறார்.
இதில் அடுத்த லெவலில் மீடியாவையும் எடுத்துக்கொள் … ஒவ்வொரு அதிபரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டேதான் வந்துள்ளனர், இல்லையா?. ஃபாக்ஸ் நியூஸ் ஒபாமாவை எல்லா விஷயங்களிலும் தாக்கியது, அவர் செய்த எல்லாவற்றிலும் சந்தேகங்களை கிளப்பியது, விமர்சித்தது, அவர் ஒரு நிகழ்வுக்கு tan suit அணிந்து வந்ததை கூட பெரும் கான்றவர்சியாக்கியது, அமெரிக்க அதிபர் என்ற பெயருக்கு இழுக்கு என்று விமர்சித்தது. CNN அல்லது மற்ற மீடியாக்கள் புஷ்ஷைத் தாக்கியது. இப்படி ஒவ்வொரு தரப்பும் மற்ற தரப்பின் மீதான சந்தேகத்தை தொடர்ந்து வளர்த்தன. அதை அவற்றின் கடமையாகவும் உருவகித்தோம்.
எனவே காலம் முழுவதும் அரசியல்வாதிகள் மீதான சந்தேகமும், சதி கோட்பாடுகளும் எப்போதும் காற்றில் கலந்துதான் இருக்கிறது இல்லையா?. ஆதரவாளர்கள் இரு பகுதி, அந்த அந்த பகுதி தங்கள் தரப்பிற்கு எது பொருந்துகிறதோ அதை மட்டுமே நம்பினர்.
அந்த வரலாற்றுப் பின்னணியில் இருந்து டிரம்ப் பயனடைவதை அணுகுகிறேன். “ஏற்கனவே அனைத்தும் ஊழல் நிறைந்தது” என்று சித்தரிக்கப்படும்போது, விதிமுறைகளை வெளிப்படையாக மீறுவது மக்களை அந்த அளவிற்கு அதிர்ச்சியடையச் செய்வதில்லை. இது 'சுமத்தப்பட்ட ஊழல்' மற்றும் 'வெளிப்படையான ஊழல்' இடையிலான கோடு மட்டுமே… மக்களின் மனதளவில் இரண்டுமே ஒன்றுதான். ஊழல் நடந்தது, ஊழல் நடக்கிறது. அவ்வளவுதான்.
இது கிட்டத்தட்ட ஒரு மதவாதிக்கும் நாத்திகவாதிக்கும் இடையிலான வேறுபாடாக சொல்லலுவோம் இல்லையா அது போல….. ஒரு மதவாதி 3780 கடவுள்களை நம்பவில்லை, ஒன்றை மட்டும் நம்புகிறார். ஒரு நாத்திகவாதி மதவாதியைவிட கூடுதலாக ஒரு கடவுளை (3781) நம்பவில்லை, அவ்வள்வுதான் வித்தியாசம்….. இந்த இடைவெளிதான் பெரியது என்றாலும், தர்க்கரீதியாக இது மிகச் சிறியது.
இது ஒரு பெரும் கவலை கொள்ளும் அளவுக்கு பெரும் முறைகேட்டுமாற்றம் அல்ல, ஏற்கனவே அவர்கள் கருதிய ஒன்றில் விழுந்த இன்னும் ஒரு கூடுதல் அடி, அல்லது அவர்கள் நம்பிக்கைக்கு ஒரு கூடுதல் வெளிப்படை ஆதாரம் அவ்வளவுதான்.
Count The Moments |


0 Comments:
Post a Comment
<< Home