"சிவகங்கா க்ளஸ்டர்" - மலேசியா
--------"சிவகங்கா க்ளஸ்டர்" - மலேசியா --------------
சிவகங்கையில் இருந்து மலேசியா வந்த ஒரு உணவக முதலாளியால், (வீட்டில் தனித்திருக்கும் உத்தரவை அவர் கடைபிடிக்கவில்லை) மலேசியாவில் கொரோனா தொற்று பரவல் அதிவேகமெடுத்திருக்கிறது. மலேசியா இந்த "கொத்துத் தொற்றை" (Cluster) "சிவகங்கா க்ளஸ்டர்" என்றே பெயரிட்டிருக்கிறது. இதுவரை இவர் ஒருவர் மூலம் 31 நபர்கள் கோவிட் பாஸிட்டிவாகவும், 2000 பேர்கள் பரவ சாத்தியமுள்ளவர்களாகவும் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். இது கொரோனா மரபணுவில் ஏற்படும் திடீர் மாற்றத்தில் Genome 614 (G614) எனும் ஒரு வகை என்று மலேசியா கண்டறிந்துள்ளது. இது இருப்பதிலேயே மிக அதிகமாக பரவக்கூடிய கொரோனா வகைமை. ஐரோப்பாவிலும், நியூயார்க்கிலும் பரவிய கொரோனா இந்த வகைமைதான்.
இந்த மரபணு திடீர்மாற்றம் கொரோனா வைரசின் மேல் பகுதியில் இருக்கும் ஸ்பைக் ப்ரோட்டின் (spike protein) னின் 1300 அமினோ அமிலங்களில் ஒரு அமினோ அமிலத்தில் நிகழ்ந்திருக்கிறது. 614 வது இடத்தில் அஸ்பார்டிக் அமிலம் மாக இருக்க வேண்டியது கிளைசின் என்ற வேறொரு அமினோ அமிலமாக மாற்றம் அடைந்திருக்கிறது. D614G.
இந்த சிறு மாற்றம் அதன் ஸ்பைக் புரோட்டினில்தான் நிகழ்ந்திருக்கிறது என்பதால் நமது செல்லுக்குள் நுழையும் வைரஸின் திறனை இது அதிகரிக்கிறது, வைரஸின் உற்பத்தி (Viral Load) அதிகரித்திருக்கிறது, அதன் மூலம் பரவுதல் எளிமையாகி இருக்கிறது. ஆனால் நோயின் தன்மையில் வேறு எந்த மாறுதலும் இருக்க சாத்தியமில்லை.
கடந்த ஜூன் மாதத்திலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்தி மிக குறைந்த அளவாக மாற்றி, பள்ளி, வழிபாட்டுத்தலங்களை எல்லாம் மீண்டும் திறந்த மலேசியாவுக்கு இந்த "சிவகங்கை கொத்து பரவல்" மற்றொரு சவால்தான்.
மலேசியாவுக்கு வந்த இந்த ஒரு G614 கொரோனவால் இந்தனை பேருக்கு பரவிக்கொண்டிருக்கிறது என்றால், இது முதலில் இருந்த இடமான சிவகங்கை அல்லது ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் எவ்வளவு பரவ சாத்தியம் உண்டு என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். எனவே பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்.
Labels: Covid
Count The Moments |
0 Comments:
Post a Comment
<< Home