சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Friday, August 07, 2020

பாபர் மசூதி

ஒரு நில உரிமையியல் வழக்கு அரசியல் மயப்படுத்தப்பட்டு, இந்தியாவின் பேரழிவின் உறைந்த இரத்தத்தின் வீச்சத்தின் மேல் நாம் நம்பும் இறைவனுக்கு ஆலயம் எழுப்புதல் என்பது மெய்யியல் தளத்திலும் ஜனநாயக உணர்விலும் வெட்ககரமான விஷயம்.. இந்த வெட்கத்தை, நாணுதலை நான் ஒரு இந்துவாக வெளிப்படையாக முன்வைக்கிறேன்.. நான் அதை மட்டுமே இப்போது செய்ய இயலும்.
- முருகானந்தம் ராமசாமி



Comments in FB
  • சரண், பராமரிப்பற்ற கைவிட பட்ட மசூதியைதான் கைப்பற்றுகிறார்கள்,
    நியாமான கோரிக்கையை மறுக்கும் பொழுதுதான் அல்லது அதற்க்கு பிறகுதான் கைப்பற்றுகிறார்கள், அதுவும் பிறகு நீதி மன்றத்திற்கு போகிறது.
    இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றிருந்தால் ஏன் கலவரம் வர போகிறது.
    மேலும் இந்த பதிவு அபத்தமான ஒரு பொய், ராமர் கோவில்க்காக நிலத்தை மீட்கும் பணியின் விளைவாகவே கலவரம் நிகழ்கிறதே தவிர இஸ்லாமியர்களை கொன்று குவித்தெல்லாம் அந்த நிலம் அடையப்பட வில்லை, கோர்ட் தீர்ப்பின் வழியாக கொடுக்கப்பட்ட நிலம் அது, .
    ஒரு நியாயமான கோரிக்கை, அதுவும் பயன்பாடற்று இருந்த மசூதி, இதை தர முடியாது என என்னும் மனநிலையில் உருவான சிக்கல் இது, இஸ்லாமியர்களுக்கு நிகராக இந்த பதிவுகளை எழுதியவர்களை போன்ற இந்து எதிர்ப்பு வாதிகளுக்கும் இதில் பங்கு உள்ளது, வெறும் இந்துக்கள்தான் காரணம் என்பதும், ரத்தத்தின் மீது கோவில் காட்டப்படுகிறது என்பதெல்லாம் மிகை கற்பனைகள்.
    இதை எழுதியவரின் உணர்ச்சி, உங்களின் உணர்ச்சி இவை நேர்மையானவையாக இருந்தாலும் இப்படியான மிகைபார்வைகள் உங்களை தவறான பார்வையை கொண்டவர்களாக மாற்றி விடுகின்றன
    3
    • Like
    • Reply
    • 7w
    • Edited
  • ராதா, இந்திய திருநாட்டின் உச்சபட்ஷ நிதி மன்றத்திடம் இவர்கள் "உறுதிமொழி" கொடுத்தபின்தான் நீதிமன்றம் அங்கு "பூஜை செய்ய மட்டும்" அத்தனை கட்டுப்பாடுகளை அவர்களுக்கும் அரசுக்கும் விதித்து அனுமதி வழங்கியது. அதை ஏற்று சென்று அது அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டுதான் மசூதியை உடைக்கிறார்கள். இன்று வந்து "ஜனநாயக வழி", "கோர்ட் தீர்ப்பின் படி" என்றல்லாம் பேசுவது காமெடியா இருக்கு.....
    😀
    கோர்ட் தீர்ப்பை தூக்கி எறிந்துவிட்டுதான் 1992 இந்த பிரட்ச்சனைக்கு அடிக்கல்லே நாட்டினார்கள். இன்று எப்படி "கோர்ட் தீர்ப்பின் படி... எல்லாம் வந்தது என்று தெரியவில்லை.... நமக்கு வேணும் பொது அதை எடுத்து யூஸ் பண்ணிக்கிட்டு அப்புறம் தூக்கி எறிந்துவிடலாம் போல ....
    முஸ்லிம்களோடு சமரசம் பேசி காந்திய வழியில் இந்த கோயில் கடடபடுகிறதா?? வாவ்..... பாஸ், அதை மசூதியை இடிக்கிற முன்னாடி பண்ணி இருக்கணும், அதுக்கு பேருதான் பேசசுவார்த்தை.... நீதிமன்றத்தை கூட மதிக்காம மசூதியை இடித்துவிட்டு தரமடடமாக்கிவிட்டு 30 வருஷம் இந்து-இஸ்லாமிய நல்லுறவை முடிந்தவரை அதன் பாதாளத்துக்கு கொண்டு செல்லும் எல்லா வேளையும் செய்துவிட்டு இன்று இஸ்லாமியர்களோடு சாமரம் பேசினோம் என்கிறார்கள்.... வாவ்...
    3
    • Like
    • Reply
    • 7w
    • Edited
  • /மேலும் இந்த பதிவு அபத்தமான ஒரு பொய், ராமர் கோவில்க்காக நிலத்தை மீட்கும் பணியின் விளைவாகவே கலவரம் நிகழ்கிறதே தவிர இஸ்லாமியர்களை கொன்று குவித்தெல்லாம் அந்த நிலம் அடையப்பட வில்லை, /
    இது அவரது ஒரு கட்டுரையின் ஒரு சிறு பகுதி. இது நேரடியாக அந்த ராமர் கோயில் "நிலத்தை" குறிப்பிடவில்லை. இங்கு பேசப்படுவது "ஒட்டு மொத்தம்". மசூதி இடிப்பு என்ற பேரவலத்துக்கு பின்னாடிதான் இந்தியா முழுவதுமான இந்து-இஸ்லாமிய பிரட்ச்சனை மிக பெரும் பிரட்ச்சனையாக உருவெடுத்தது. இந்த 30 ஆண்டுகளில் இந்த நாட்டில் மதத்தின் பெயரால் சிந்தபட அத்தனை ரத்தத்துக்கும் 1992 ல் இங்குதான் அடிக்கல் நாட்ப்படடது. இஸ்லாமியர்கள் பாதுகாப்பின்மையை அன்றிலிருந்துதான் உணர தொடங்கி இருப்பார்கள், இன்று இந்த கோயில் அவர்களுக்க அதை என்றும் ஞாபகபடுத்திக்கொண்டே இருக்கும். அன்று இங்கு தொடங்கிய இந்து-இஸ்லாமிய பிரிவினையை ஒவ்வொருநாளும் அதிகரித்துக் கொண்டேதான் சென்றிருக்கிறார்களே தவிர அதை செப்பனிட ஒரு செங்களையும் எடுத்துவைக்கவில்லை. இவர்களின் அரசியலின் அடித்தளமே அதுதான் எனும்போது அதை "செப்பனிட" எப்படி முன்வருவார்கள்?
    2
    • Like
    • Reply
    • 7w
    • Edited
  • "இந்துத்துவம்" என்பது ஒரு கான்செப்ட்... அப்படின்னா என்ன, அது என்ன சொல்கிறது, அதன் நோக்கம் என்ன என்று மக்களிடம் பரப்புரை செய்து, விவாதத்தளத்துக்கு கொண்டுவந்து, இன்றைய நவீன காலத்துக்கு ஒவ்வாத விஷயங்கள் அதிலிருந்து நீக்கி, மக்களிடம் ஒரு நேர்மறையான புரிதலை கொண்டுவந்திருக்கலாம். ஜனநாயகத்தில் ஒன்றை அப்படிதான் பிரதிசாரத்தின் மூலம் மக்கள் ஏற்பை கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் இந்த "அரசியல் இந்துத்துவார்கள்" "இந்துத்துவம்" என்ற வார்த்தை அறிமுகமாகும்போதே காட்டுமிராண்டிகள் போல இன்னொரு வழிபாட்டுத்தளத்தை இடித்து "இதுதான் இந்துத்துவம்" என்று "செயல்முறை விளக்கம்" அளித்துவிடடார்கள்... இதற்க்கு மேல் "இந்துத்துவம்" என்ற கான்செப்ட் எந்த விதத்திலும் நல்லமுறையில் விவாதத்தளத்துக்கு கூட வராது.... இனி "அரசியல் இந்துத்துவம்" மட்டும்தான் நிதர்சனம்....
    1
    • Like
    • Reply
    • 7w
    • Edited
  • இதில் மிகை உணர்ச்சியெல்லாம் ஒன்றும் இல்லை. பக்தி சார்ந்த என் அம்மா, அக்கா உடைய உணர்சிகளெல்லாம் கூட இதுதான். ஒரு மசூதியை இடித்துவிட்டு அவர்களை கஷடப்படுத்தி அங்கு கோயில் கட்டி அதிலிருந்து என்ன பெறப்போகிறோம் என்றுதான் கேட்க்கிறார்கள். ஒரு நல்ல காரியத்தின் போது சிறு அமங்கல சொல் கூட கேட்கக்கூடாது என்றுதானே "கெட்டிமேளம்" என்று சத்தமாக மேளம் கொட்டுகிறார்கள், ஒரு கோயில் இவ்வளவு அமங்கல உணர்சிகளோடா கடடபடனும்? என்றுதான் கேட்க்கிறார்கள்?
    இது யாரோ ஒருவருடைய வெற்றி சின்னம், பல்லாயிரம் "தோல்வியுற்றவர்களின்" பாதுகாப்பின்மை உணர்சிகள் சூழ்ந்தே இருக்கும். நான், என் அக்கா, அம்மா, அண்ணன் போல் பல்லாயிரக்கணக்கானவர்கள் இதை அப்படிதான் பார்க்கிறோம். இதில் விவாதிக்க ஒன்றும் இல்லை.
    1
    • Like
    • Reply
    • 7w
  • நிரம்ப சந்தோஷம்.
    அதிருப்திக் குரல்களை ஏற்கும் ஜனநாயகத்தன்மை இந்துத்துவத்துக்கு உண்டு.
    3
    • Like
    • Reply
    • 7w
  • சரண், இடித்தது தவறு, ஆனால் அந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்து கொண்டு அங்கு கோவில் வர கூடாது என்பதை நான் ஏற்க வில்லை.
    இந்துத்துவர்கள் செய்த செயல்கள் சரி என்று வாதிடவில்லை, ஆனால் கண்டிப்பாக மசூதி இடிக்க படாமல் இருந்தால் கட்ட துவங்கும் இந்த இடத்தை அடைந்திருக்க முடியாது, இந்திய சிறுபான்மை மக்கள் சார்ந்து நிகழும் இந்திய அரசியல் சதுரங்கத்தில் கண்டிப்பாக இடிக்கும் இடம் நோக்கி நகர்ந்திருக்க வாய்ப்பே இல்லை.
    ஏன் இடிக்க வேண்டும், இடிக்க கூடாது என்பதும் ஒரு நியாயமான வாதம்தான், ஆனால் என்னளவில் அதற்கான நியாயமான காரணம் இருந்தால் இடிக்கலாம், இந்துக்களிடம் அத்தகைய நியாயமான காரணம் உண்டு.
    உதாரணத்திற்கு காந்தியின் நினைவிடத்தை தரைமட்டமாக்கி வேறொரு நினைவு சின்னத்தை உருவாக்கி இருந்தால் கண்டிப்பாக அது எவ்வளவு சிறந்த கலைபடைப்பாக இருந்தாலும் இடித்து அங்கு மீண்டும் காந்தியின் நினைவிடமாக மாற்றவே நான் ஆதரிப்பேன், இன்னொரு உதாரணம் புத்த கயா அது ஆக்கிரமிக்க பட்டு மாற்ற பட்டிருந்தால் மீண்டும் பழைய நிலைக்கு வருவதையே நான் ஆதரிப்பேன், அது போல ஒன்றுதான் ராம ஜென்ம பூமி பிரச்னை.
    பிஜேபி இதை அரசியலாக்கியது, பயன்படுத்தி கொண்டது எல்லாம் உண்மைதான், நான் மறுக்கவில்லை, நாம் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் செய்யும் ஈழ அரசியல், ஹிந்தி எதிர்ப்பு அரசியல் என எல்லாம் இவ்வாறுதான், ஒரு பிரச்சனையை வைத்துதான் கட்சிகள் அரசியல் செய்யும், இதை நான் தவறாக பார்க்க வில்லை.
    இந்த 92 பிறகுதான் இந்து முஸ்லீம் பிரச்னை உருவானது என்று நான் எண்ண வில்லை, முஸ்லீம் மதம் எனபதே ஒரு ஒருங்கிணைந்த மக்கள் குழு தான் ஆரம்பத்திலிருந்தே, 92 பிறகுதான் அதை இந்துக்கள் உணர்ந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம், அந்த உணர்தலின் தாக்கமே பிஜேபி யின் வளர்ச்சி.
    ஆனால் சாதாரண இஸ்லாமியர்கள் 92 பிறகு பாதுகாப்பற்ற உணர்வை அடைந்தார்கள் என்பது உண்மைதான், அது துயரம் தரும் விஷயம், ஆனால் ஆரம்பத்திலிருந்து இணக்கமாக சென்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று எண்ணுகிறேன், நிலத்தை அளிக்க முடியாது எனும் நிலைப்பாட்டை எடுத்துவிட்ட பிறகு உருவானதுதான் இந்த பிரச்சனைகள் எல்லாம்,
    கண்டிப்பாக முக்கியமில்லாத இடத்தில் இருக்கும் மசூதியை இடித்து அங்கு கோவில் கட்டுவதை நான் மட்டுமல்ல எந்த இந்துவும் ஆதரிக்க மாட்டான், ஆனால் அது ராமர் பிறந்த இடம், மேலும் அங்கு முன்பே கோவில் இருந்திருக்கிறது, அதனாலேயே அங்கு அந்த கோவிலை இடித்து கட்டப்பட்ட நினைவு சின்னத்தை நீக்கி மீண்டும் கோவில் கட்ட முயற்சிக்கிறார்கள், இதில் என்ன தவறு இருக்கிறது.
    அப்பறம் முஸ்லிம்களை வருத்தி அங்கு கோவில் கட்டப்பட்டது எனும் வாதத்தையும் நான் ஏற்க வில்லை, அவர்களது வருத்தம் தவறானது, தேவை இல்லாதது,
    3
    • Like
    • Reply
    • 7w
    • Edited
  • மிக சாதாரண விஷயம் இது, பழையதை மறந்து ராமர் கோவில் வருவதன் நியாயத்தை உணர்ந்து இஸ்லாமியர்கள் ஆதரவாக வருவார்கள் என்றால் மீண்டும் இந்து முஸ்லீம் ஒற்றுமை நிகழ்ந்து விடும், ஆனால் அப்படி அவர்கள் வர வாய்ப்பில்லை, அவர்களை பிடித்திருக்கும் அரசியலும் அதற்கு விடாது, உங்களை போன்றவர்களும் அதற்கு விட மாட்டீர்கள், உங்களை போன்றவர்களின் பதிவுகளை பார்க்கும் ஒரு இஸ்லாமியர் கண்டிப்பாக இந்து எதிர்நிலைக்குத்தான் போவார், உங்கள் பதிவுகள் செய்வது அது மட்டும்தான்.
    இந்துக்கள் அளவுக்கு இஸ்லாமியர்கள்களுக்கு ராமர் மீதும் ராமர் கோவில் மீதும் உரிமை உள்ளது, ராமர் கோவில் அவர்களுக்கு எதிரானதல்ல.
    ராமர் கோவில் மீதிருக்கும் அரசியல் என்பது தற்காலிகமானது.
    மீண்டும் சொல்கிறேன், அனுமதி பெறாமல் இடித்தது தவறு, ஆனால் என்னளவில் அந்த பிழை நல்ல விளைவை உருவாக்கியது என்று நினைக்கிறேன்.
    இந்து அரசியல் ஆதிக்கம் சமகால இந்தியாவிற்கு அவசியம் என்று நினைக்கிறேன், அது மற்ற மத ஆதிக்கங்களை கட்டுப்படுத்தும், சமநிலையை உருவாக்கும் என்பதால் ஆதரிக்கிறேன்.
    கலவரம் நிகழ்வது, அதன் காரணங்கள் பற்றி ஓரளவு அறிவேன், இந்துக்கள் எப்போதும் கலவரத்தை விதைக்கும் இடத்தில் இருந்ததில்லை என்பது என் புரிதல்.
    ஏன் மசூதி இடிப்பு மனநிலை உருவானது என்றால் நியாயமான கோரிக்கையை ஏற்க வில்லை எனும் நிலை வரும் பொழுதுதான் அந்த மனநிலைக்கு இந்துக்கள் செல்கிறார்கள், அனுமதி கிடைக்கும் எனும் நம்பிக்கை அப்போது பொது தளத்தில் இருந்திருந்தால் இடிக்கும் இடத்திற்கு வந்திருக்க மாட்டார்கள்.
    ஆனால் இந்துத்துவர்கள் இதை அரசியல் ஆக்கினார்கள் என்பது உண்மை, ஆனால் அதேசமயம் இந்த இந்துத்துவார்களால்தான் இவ்வளவு விரைவில் அங்கு கோவில் உருவாக இருக்கிறது, கண்டிப்பாக இது இவர்களின் சாதனைதான்.
    உண்மையில் இஸ்லாமியர்கள் மனம் புண்படும் எனும் வருத்தம் எனக்கும் உண்டு, உங்களின் வருத்தம் அளவுக்கே எனக்கும் அது வருத்தம் தான், அந்த உணர்வை புரிந்து கொள்கிறேன், அதனால்தான், என் fb பக்கத்திலும் இங்கும் இந்துக்கள் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை விளக்க முயல்கிறேன், ஏற்பார்கள் எனில் வருத்தம் இல்லாமலாகும் என நம்புவதால்தான் இதை செய்கிறேன்.
    2
    • Like
    • Reply
    • 7w
  • இந்த ராமர்கோவில் பிரச்னை பொறுத்தவரை விட்டு கொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் இஸ்லாமியர்கள், இந்துக்களால் அந்த இடத்தை விட்டுக்கொடுக்க இயலாது, அதற்க்கு ஈடாக வேறொன்றை தருகிறார்கள், எனவே இதில் அபகரிப்பு என்று எதுவும் இல்லை.
    இந்தியாவில் இஸ்லாமியர் பாதுகாப்பு இன்மை மனநிலைக்குள் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும், இந்து அடையும் பாதுகாப்பு சுதந்திரம் இஸ்லாமியனுக்கும் இருக்க வேண்டும், பாதுகாப்பற்ற உணர்வு எந்த இந்தியனும் வர கூடாது. இதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.
    சரண், இந்துக்கள் தாங்கள் பாதுகாப்பற்ற சூழலுக்குள் இருக்கிறோம் என உணர்வதால்தான் இந்து அரசியல் நோக்கி நகர்கிறார்கள், இந்துக்களின் இந்த உணர்வு பிழையானதல்ல, யதார்த்த அனுபவம் வழியாக இந்த உணர்வை அடைகிறார்கள், எனவே பாதுகாப்பற்ற உணர்வு என்பது இருபக்கமும் உண்டு.
    என்னளவில் இஸ்லாமியர்கள் கொஞ்சம் இறங்கி வந்தால் போதும், இந்த பாதுகாப்பற்ற உணர்வு என்பது சற்றும் இல்லாத ஒன்றாக ஆகிவிடும், ஆனால் அவர்கள் அப்படி இறங்கி வருவதில்லை என்பதே என் புரிதல். இணக்கம் வேறு, இறங்கி வருதல் வேறு, இந்துக்கள் சாதாரணமாக இறங்கி வருவார்கள், ஆனால் இஸ்லாமியர்கள் விட்டுக்கொடுத்து நான் பார்த்ததே இல்லை.
    இதையெல்லாம் சொல்வதால் நான் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை கொண்டவன் அல்ல, என்னளவில் இந்துக்களுக்கு இணையாகவே இஸ்லாமியர்களையும் நான் நேசிக்கிறேன், எல்லோரும் மனிதர்கள், அவ்வளவுதான்.
    கடைசியா எனக்கும் நேர்மையாக அந்த இடத்தை( ராம ஜென்ம பூமி ) அடைகிறோமா என்ற உறுத்தல் இருக்கிறது, ஆனால் இந்த இடித்த தவறு, இந்த கோவில் அரசியல் எல்லாம் ஒரு வரலாற்று தேவையாக பார்க்கிறேன், அதாவது இப்போதைய சூழலில் இந்தியாவிற்கு பிஜேபி அரசியல் தேவைப்படுகிறது, எனவே அது நிகழ்கிறது.
    அப்பறம் நீங்களோ நானோ இந்த விஷயத்தில் நம் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பில்லை என்பதால் மேலே உள்ளதையெல்லாம் என் சார்பு விளக்கமாக முன்வைத்தேனே தர விவாதத்திற்க்காக அல்ல 
    🙂
    2
    • Like
    • Reply
    • 7w
  • //உதாரணத்திற்கு காந்தியின் நினைவிடத்தை தரைமட்டமாக்கி வேறொரு நினைவு சின்னத்தை உருவாக்கி இருந்தால் கண்டிப்பாக அது எவ்வளவு சிறந்த கலைபடைப்பாக இருந்தாலும் இடித்து அங்கு மீண்டும் காந்தியின் நினைவிடமாக மாற்றவே நான் ஆதரிப்பேன், //
    ராதா, இங்கு நீ ஒன்றை மறந்துவிடுகிறாய், அங்கு முன்பிருந்த கோயில் இடிக்கப்ட்டு மசூதி கட்டப்பட்டதுதான் உனக்கு இப்போது அங்கு மசூதியை இடிக்க நியாயமாக இருக்கிறதென்றால், அதை செய்தது யார்? எப்போது இடிக்கப்பட்டது???
    ஒரு மன்னர் காலத்தில் ஒரு மன்னரால் இடிக்கப்பட்டது. அதுதான் அந்த காலத்தின் நியதியே. மன்னர்தான் அப்போது சட்டமே. ஒரு மன்னர் காலத்தில் அவர் ஒன்றை இடித்தார் என்பதற்காக நவீனகால சிந்தனை உள்ள ஒரு ஜனனாயக காலத்தில், அரசியல்சாசன அமைப்புகளை தூக்கி எறிந்துவிட்டு கும்பலாக போய் அந்த மசூதி இடிக்கப்பட்டதுக்கான எந்த நியாயமும் இல்லை.
    இது எப்படி இருகின்றதென்றால் சாலுக்கிய மன்னன் புலிகேசி தமிழகதின் மீது படையெடுத்தார் என்று சொல்லி இப்ப போய் கர்னாடகா மேல நாம் படையெடுப்பதற்க்கு சமமானது. இரண்டின் காலகட்டமும் வேறு வேறு, சிந்தனை வேறு வேறு ...
    3
    • Like
    • Reply
    • 7w
    • Saravanan Vivekanandan
       சரண், நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால் அங்கு கோவில் வருவதற்கான நியாயம் உண்டு என்று நினைக்கிறன், ஏனெனில் அது ஒருவர் பிறந்த இடம், அந்த இடம் அவருக்கானது, அதை அவருக்குரியதாக்குவதே நியாயம், அதே சமயம் அந்த இடத்தில்தான் அவர் உறுதியாக பிறந்தாரா என்று கேட்டால் அது அபத்தம், ஒரு தொன்மத்தை அப்படியெல்லாம் நிருபணம் கேட்பது சரிவராது, அது மக்களின் நம்பிக்கை, அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.
      கும்பலாக போய் இடித்தல் / இதை இன்றைய ஜனநாய யுகத்தில் தவறு என்று சொல்லிவிட்டேனே, இஸ்லாமியர்களின் ஆதரவை பெற்றுத்தான் அதை இடித்திருக்க வேண்டும் (இடிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை ), ஆனால் மத அரசியல் இஸ்லாமியர்களை இடிக்க சம்மதிக்க விடாது, மேலும் இந்து அரசியல் தரப்பு அது கோவில்நிலம் என்றாதாலேயே இடிக்க சென்றதே தவிர ஒரு மசூதியை இடிக்க வேண்டும் என்ற நோக்குடன் அல்ல, அப்படி இருந்தால் அது பெரும் தவறு, இப்போதும் இடித்ததும் தவறுதான், ஆனால் என் வாதம் இடிப்பதற்கு காரணம் இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலை அல்ல, கோவில் வர வேண்டும் என்ற ஆர்வமே, அதே சமயம் இதை இஸ்லாமிய ஆதிக்கத்தின் முறியடிப்பு எனும் நோக்கிலும் பார்த்தார்கள் என்று ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் கண்டிப்பாக இஸ்லாமியர்களின் மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. ஆனால் இந்த எண்ணங்கள் மறைமுகமாக இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையையும், அந்த மனநிலை இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பற்ற மனநிலையையும் உருவாக்கியது என்பதை ஏற்கிறேன்.
      2
      • Like
      • Reply
      • 7w
  • //உங்களை போன்றவர்களின் பதிவுகளை பார்க்கும் ஒரு இஸ்லாமியர் கண்டிப்பாக இந்து எதிர்நிலைக்குத்தான் போவார் //
    இந்து எதிர்நிலைக்கு போகமாடடார், ஏனெனில் அவர்கள் பக்கம் இருந்து பேசும் நாங்களே இந்து அடையாளத்தை கொண்டவர்கள்தான். எங்களை போன்றவர்கள்தான் அவர்களுக்கான கடைசி நம்பிக்கையும். இன்றைய நிலையில் இந்த நாட்டின் மீதான அவர்கள் நம்பிக்கையே எங்கள் மீதான நம்பிக்கைதான்.
    இந்த ராமர் கோயில் பிரட்சனையை தனித்த ஒரு பிரட்சனையாக பார்கிறாய். அது அப்படி அல்ல. அது பிஜேபியின் இஸ்லாமிய வெறுப்பு அரசியலின் ஒட்டு மொத்த உருவம். அவர்கள் அரசியலை அதிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அதன் பின் அவர்களின் மந்திரிகள், எம்பிக்களில் இருந்து தொண்டர்கள்வரை இஸ்லாமிய வெறுப்பை பொதுவெளியில் பரப்புவதில் எந்த நாணமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் என்றோ தம்மை முற்றிலும் இஸ்லாமியர்களுக்கு எதிர்திசையில் வைத்துக் கொண்டார்கள். அதில் அவர்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. எனக்கு தெரிந்து அந்த கடசியில் 90% இருவர்தான் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களை முடிந்த இடங்களில் எல்லாம் சீண்டும் இஸ்லாமிய வெறுப்பு கொண்டவர்கள், அந்த வெறுப்புக்கு நியாயம் பூசி அதை பரப்பும் ஒரு வகை, இன்னொருவகை அது சரிதான் என்று அவர்களை எதிர்த்து எங்கும் confront பண்ணாமலே அமைதியாக கடந்து செல்லும் வகை. இதை நான் தொடந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், எனவே இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
    1
    • Like
    • Reply
    • 7w
    • இந்த வகையில் எனக்கு உடன்பாடு இல்லை, என்னளவில் இந்து ஆதரவு அரசியல் என்பது எந்த பிற மக்களுக்கும் எதிரானதல்ல, அப்படியான எதிர்ப்புணர்வை முன்வைக்கும் அரசியலில் எனக்கு உடன்பாடில்லை, அப்படி செயல்படுபவர்களை நான் ஏற்பதும் இல்லை, இந்து மதம் இன்னொரு மதத்திற்கு எதிரானதல்ல,
      அதேசமயம் இந்து அரசியல் என்பது இந்து மத பாதுகாப்பிற்காக உருவானது, எனவே அபாயம் தரும் ஒன்றை அந்த அரசியல் எதிர்க்கும், அது இஸ்லாமிய அரசியலை அபாயமாய கருதுகிறது, ஆனால் இஸ்லாமியர்களை அல்ல, இஸ்லாமியர்கள் வழியாக நிகழ்த்த படும் அரசியலை மட்டுமே அப்படி பார்க்கிறது, அதை தவறு என்று நினைக்க வில்லை, ஏனெனில் இந்த இஸ்லாமியர்கள் வழியாக நிகழ்த்தப்படும் அரசியல் வழியாகவே பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்தது.
      அதேசமயம் சாதாரண இஸ்லாமியர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வளர்க்கும் எந்த செயல்பாட்டையும் உறுதியாக எதிர்க்கிறேன்
      • Like
      • Reply
      • 7w
  • தி.க சார்ந்த விமர்சனம் இப்பவரைக்கும் அதுதானே? ஒரு சமூகத்துக்கு எதிரான, ஒரு குறிப்பிடட மக்களுக்கு எதிரான ஒரு வெறுப்பு பிரட்சாரத்தை எப்படி முன்வைக்க முடியும் என்பதுதானே? தி.கவின் எல்லாவற்றையும் ஏற்க முடிகிறது, மத எதிர்ப்பு, சடங்கு சம்பிரதாய எதிர்ப்பு, சாதீய எதிர்ப்பு, இடஒதுக்கீடு, என்று கிடடதடட எல்லாவற்றையும். அது சமூக அரசியல் செயல்பாடுகள், ஒரு குறிப்பிடட சமூகத்திடம் திரண்டிருந்த அதிகாரத்தை பரவலாக்கம் செய்வது மிக முக்கியம். ஆனால் அது ஒரு குறிப்பிடட மக்களுக்கு எதிரான பேச்சுகளாக எப்போதும் இருக்க முடியாது. அதனுடைய வலியை இன்றும் அவர்களால் கடந்து வர முடியவில்லை.
    "பிராமணியம்" என்ற வார்த்தைதையே பயன் படுத்தக்கூடாது என்று காரணங்களை அடுக்கி இங்கு நான் விவாதித்தது அதனால்தான். தி.க வின் பிராமண வெறுப்பின் வெப்பத்தை எதிர்கொண்டவர்களுக்கு, இஸ்லாமிய சமூகத்தின் மீதான வெறுப்பு ஒரு பொருட்டாகவே இல்லை என்பது ஆச்சர்யமானது.
    எழுத்து பிரசுரம் அலெக்ஸ் பற்றி, அவரிடம் மற்ற சமூகம் சார்ந்த வெறுப்பு இல்லை என்பதை சொல்லும்போது ஒருமுறை ஜெமோவிடம் அவர் சொன்னாராம், "ஒரு சமூகத்தின் மீதான வெறுப்பை ஃபிரண்ட் லைனில் இருந்து அனுபவித்தவர்கள் நாங்கள், அதையே இன்னொரு சமூகத்துக்கு எதிராக நான் செய்ய முடியாது". இன்று இந்த இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக கொடுக்கும் குரல்களில் தொடர்ந்து, உரத்து ஒலிக்க வேண்டியது பிராமணர்களின் குரல்.. ஏனெனில் அவர்களுக்கு தெரியும் அந்த வெறுப்பின் சூடு எப்படிபட்டது என்று. அனால் அதை இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்யப்படும்போது அவர்கள் எப்படி அதை அமைதியாக கடந்து சொல்கிறார்கள் என்பது எனக்கு இப்பவும் ஆச்சர்யம்தான்.
    2
    • Like
    • Reply
    • 7w
    • Edited
    • Saravanan Vivekanandan
       நான் இந்த இணை வைத்தது தவறு, இந்து அரசியலுக்கு எதிராக இஸ்லாமிய அரசியலை இணை வைத்திருக்க வேண்டும் !
      திராவிட அரசியல் வெறும் அரசியலுக்காக பிராமண வெறுப்பை முன்வைத்ததே தவிர அதை ஒரு வெளிப்பாடாக முன்வைக்க வில்லை என்று நினைக்கிறேன், அரசியலுக்கு மட்டும் அதை பயன்படுத்தி கொண்டது, பிராமண எதிர்ப்பு அரசியல் என்பது ஒரு பாவனைத்தான் ! அதை ஏற்கிறேன்.
      ஆனால் இஸ்லாமிய ஆதரவு அரசியல் அப்படியல்ல, அது இந்து ஆதரவு அரசியலை விட கீழ்தளத்தில் வன்முறை இயல்பு கொண்டது.
      பிராமணர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை எதிர்க்க வில்லை என்பது இயல்பானதே, ஏனெனில் பிராமனர்கள் தங்களை இந்து மதத்தை சேர்ந்தவர்களாகவே பார்க்கிறார்கள், மற்ற சாதிகளை விட ஒருபடி அதிகமான பற்றாளர்கள் மற்றும் இந்துமதத்தின் பொறுப்பாளர்கள் இடத்தில் இருக்கிறார்கள், எனவே இந்து ஆதரவு நிலைக்காக இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை அவர்கள் எதிர்க்க வில்லை.
      எனக்கு தெரிந்து பிராமனர்கள் அளவுக்கு பொறுமையானார்கள் வேறு இல்லை, திராவிட அரசியல் மற்றும் பிற அரசியல்கள் இவ்வளவு வெறுப்பை கொட்டியும் அவர்களுக்கு எதிரான பிராமணர்கள் பெரிய அளவில் ஏதும் எதிர்ப்பை தெரிவிக்க வில்லை.
      உண்மையில் திராவிட அரசியல் கொலைகள் நிகழ்த்தாத சாத்வீக இயக்கம் என்று இருப்பதற்கு காரணம் இவர்களது எதிர்பின்மைதான், இதே திராவிட இயக்கம் வேறு ஏதாவது வலுவான சாதியையோ, மதத்தையோ எதிர்க்கும் சித்தாந்தமாக இருந்திருந்தால் இந்நேரம் இரு தரப்பிலும் கொலைகளும் கலவரங்களும் நிகழ்ந்திருக்கும், திராவிட அரசியல் மீது வன்முறை சாயம் இருந்திருக்கும், அந்த அளவில் திராவிட அரசியல் அதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம் !
      • Like
      • Reply
      • 7w
  • Radha Krishnan
     ராதா, தி.க எதிர்த்தது, பிரட்சாரம் பண்ணியது, கேலி செய்தது எல்லாம் நீ சொல்லும் இந்த மற்ற வலுவான சாதிகளின் மதத்தைத்தான்.... நேரடியாகவே அதைத்தான் செய்தது. ஆனால் எந்த வன்முறையும் எழவில்லை.
    திருமணம் என்ற இந்த சடங்கு பெண்களை கட்டிப்போட்டு அவர்களை மேலெழவிடாமல் வைத்திருக்கிறது என்று பெரியார் தமிழக மக்கள் அதீத உணர்ச்சிகளோடு இணைத்துக்கொண்டிருக்கும் தாலியை கழட்டி எறியும் நிகழ்வுகளை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருந்தார். வன்முறையா வந்தது??? என்ன, இன்று மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று அவர்களை அடித்து கொல்லுவது போல் அன்று ரொட்டில் செல்லும் எவரது தாலியையும் கழட்டி தி.க இயக்கம் எறியவில்லை. அப்படி செய்திருந்தால் வன்முறை வந்திருக்கும். ஆனால் அதை பிரட்சார வடிவில் மட்டுமே பண்ணினார்கள். தெரு தெருவாக போய் பேசினார்கள், வீதி நாடகம் போடடார்கள். அதை ஏற்றவர்கள் மேடையேறி தமது தாலியை கழட்டினார்கள்.
    அவர் இஸ்லாமிய மதத்தையும் இதே அளவு விமர்சித்துக்கொண்டுதான் இருந்தார். ஒரு ஞாபகம் வருகிறது, ஒரு முறை ஒரு இந்துத்துவர் பெரியார் இந்து மதத்தை மட்டுமே விமர்சித்தார் என்று அங்கலாயித்துக் கொண்டிருந்தார், அப்படி இல்லங்க அவர் இஸ்லாமியர்களையும் விமர்சித்தார் என்று அவரது இஸ்லாமிய விமர்சனங்களை காண்பித்தேன், அதை பார்த்தவர், ரொம்ப சந்தோஷமாகி அடுத்தநாள் பேஸ்புக்கில் "பாருங்கள் இஸ்லாமிய நண்பர்களே உங்களை எப்படி எல்லாம் பெரியார் சொல்லி இருக்கிறார்" என்று நான் சொன்ன பதிலை ஒரு போஸ்ட்டாக போட்டிருந்தார். 
    😀
    பெரியார் இஸ்லாமியர்களையும் கடுமையாகவே விமர்சித்தார். எந்த வன்முறையும் இல்லை.
    • Like
    • Reply
    • 6w
  • இதில் இரண்டு வித்தியாசம் மிக முக்கியமானது.
    1. தி.க அடிப்படையிலேயே தேர்தலில் போட்டி இடுவதற்கு எதிரானது, எனவே ஆட்சிஅதிகாரத்துக்கு வரவே வராது. ஆனால் பிஜேபி தன் மக்களின் ஒரு பகுதியை வெறுக்கும் பிரட்ச்சாரத்துடனேயே பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவுடன் மூன்றாம்முறை ஆடசியில் இருக்கிறது... அதிகாரத்தில் இருக்கும் ஒருவனின் வெறுப்பின் எல்லை மிக அபாயகரமானது.
    2. தி.க அடிப்படையில் ஒரு பிரட்சார இயக்கம், எனவே வன்முறை அதன் செயல்பாட்டில் இல்லை. ஆனால் மூன்றாம்முறைதான் ஆடசி அதிகாரத்தில் இருக்கிறார்கள் ஆனால் அயோத்தி கலவரம், குஜராத் கலவரம், பாம்பே கலவரம், சூரத் கலவரம், போபால் கலவரம் இதெல்லாம் குறைந்தபட்ஷம் 200 பேருக்கு மேல் இறந்தவர்கள் கலவரம், 200 க்குள் இருப்பது தனி. இதுமாதிரி ஒரு 10, 15 கலவரத்தை சொல்ல முடியும். இதைத்தவிர கௌரி லங்கேஸ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் என்று எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பேசப்படடதாலேயே கொல்லப்படடது. மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று கொல்லப்பட்டதே 50 பேருக்கும் மேல். எவ்வளவு வன்முறையான சித்தாந்தம்??
    பொதுவெளியில் இயங்கும் எந்த பிஜேபியர்களாவது இதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்களா என்று பார். அப்படி குரல் கொடுத்தாலே முதல் எதிர்ப்பு அவர்கள் சகாக்களின் இருந்தே வரும். ஒன்று அமைதியாக இதை கடந்து செல்வது, அல்லது இதை "பொங்கல்", உணர்சிவசப்படுகிறார்கள் என்று சொல்லிவிட்டு, அந்த பக்கம் விநாயகர் சதுர்த்திக்கு திமுக வாழ்த்து சொல்லவில்லை என்று பொங்கி எழுவது. உங்களுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது தலை போகும் விஷயம், எங்களுக்கு உண்மையிலேயே அவன் இவ்வளவுகாலம் சாப்பிட்டுக்கொண்டிருந்த இறைச்சியை இன்று சாப்பிடுவதற்காக அவன் தலை போவது பெரிய விஷயம், அவனை எப்போதும் பாதுகாப்பின்மையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது அவர்களின் அடிப்படை அரசியல், அதை ஆடசி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து ஒவ்வொன்றிலும் நிறைவேற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தை, இந்தியாவை பலம் பொருந்திய நாடாக ஆக்குவது என்று சொல்லித்தான் வந்தார்கள், ஆனால் இவர்கள் இதுவரை நிறைவேற்றியது எல்லாம் அவர்கள் அஜெண்டா மட்டுமே. அது மட்டுமே நடந்திருக்கிறது.
    1
    • Like
    • Reply
    • 7w
    • Saravanan Vivekanandan
       பிஜேபி நிகழ்த்திய அஜெண்டாக்கள் எல்லாமே முன்பே அவர்களது கொள்கை திட்டங்களாக முன்வைக்க பட்டவைதான், அவைகள் நிறைவேற்ற பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே !
      நிர்வாகம் சார்ந்து குறைகள் உள்ளது, அதை ஏற்கிறேன்.
      எந்த எதிர்ப்பு அரசியலையும் நான் எதிர்க்கிறேன், நான் முன்வைக்கும் இந்து ஆதரவு அரசியல் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல, அவர்களையும் இந்திய இஸ்லாமியர்கள் எனும் வகையில் உள்ளடக்கிய இணைத்து கொண்ட அரசியலாகவே என் இந்து ஆதரவு அரசியலை முன்வைக்கிறேன்.
      மோடியிடம் நான் இந்த விஷயத்தில் சிக்கலாக பார்த்தது, பிரதமர் என்பது ஒரு பொதுவான பதவி, அவர் அந்த பதவியில் இருந்து கொண்டு, ஒன்று எல்லா மதங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து பங்கேற்றிருக்க வேண்டும், அல்லது எல்லா வற்றிலும் இருந்து சமமாக விலகி நின்றிருக்க வேண்டும், அவர் இந்து மத விஷயங்களில் ஈடுபாடு கொள்வதும், இஸ்லாமிய விஷயங்களில் புறக்கணிப்பதும் (நிகழ்ச்சிகள், பங்கேற்பு போன்றவை மட்டும் ) ஒரு பிரதமராக இருந்து கொண்டு செய்வது தவறு.
      ஆனால் அதே சமயம் ஆட்சி ரீதியில் அவர் புறக்கணிப்பு ஏதும் செய்யவில்லை, மாறாக அதிக அக்கறையே இஸ்லாமியர்கள் மீது எடுத்து கொள்கிறார்
      • Like
      • Reply
      • 7w
  • //நான் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை கொண்டவன் அல்ல, என்னளவில் இந்துக்களுக்கு இணையாகவே இஸ்லாமியர்களையும் நான் நேசிக்கிறேன்/
    அந்த நம்பிக்கை உன் மேல் எனக்கு உள்ளது. ஒவ்வொரு உண்மையான இந்துவும் பிஜேபியை/ அவர்களின் இஸ்லாமிய வெறுப்பை எதிர்க்க வேண்டும். அதை தொடர்சியாக, பொதுவெளியில் செய்ய வேண்டும். ஏனெனில், அவர்கள் இஸ்லாமிய எதிர்ப்பை இந்துவின் பெயரால் செய்கிறார்கள், இந்துமதத்தை முன்வைக்கும் அவர்கள் அரசியலில் செய்கிறார்கள், என் அடையாளத்தை முன் வைத்து செய்கிறார்கள். இந்து என்பதை என் அடையாளமாகவும் நான் கொண்டால், அதை முன்வைத்து செய்யும் அவர்கள் அரசியலை எதிர்ப்பது என் கடமையாகவும் ஆகிறது.
    1
    • Like
    • Reply
    • 7w
  • இந்த ராமர் கோயில் என்பது தனிப்படட ஒரு நிகழ்வு அல்ல, பெரும்பான்மை பலத்துடன் இந்தியாவின் ஆடசி அதிகாரத்தில் இருக்கும் ஒரு கடசியின், இந்த நாட்டுமக்களின் ஒரு பகுதியாக இருக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒட்டுமொத்த நிலைப்பாட்டின் தூல வடிவம்... இன்று அது எப்படி இருக்கின்றதென்றால், மந்திரிகள், கவர்னர் எல்லாம் பங்குபெறும் ஒரு பெரிய பள்ளிக்கூட நிகழ்வில் மாணவர்கள் எல்லாம் பாபர் மசூதியை இடிப்பதுபோன்ற "கலை" நிகழ்ச்சி வைப்பதும், அதனுடைய அபத்தம் அங்கு இருக்கும் ஒருவருக்கு கூட உரைக்காத அபாயம், அதை இந்த மந்திரிகள், கவர்னர் கண்டுகளிப்பதும் என்று சாதாரணமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய நிலையில் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை எங்களை போன்ற இந்துக்கள்தான். இந்த நாட்டின் மீதான அவர்கள் நம்பிக்கைக்கும் எங்கள் மீதான அவர்கள் நம்பிக்கைக்கும் தூரம் அதிகம் இல்லை. பிஜேபி எந்த காலத்திலும் அவர்கள் மீதான நம்பிக்கையை பெறுவதற்கு ஒரு துரும்பையும் அசைக்க போவதில்லை. மோடி பக்ரீத்துக்கு வாழ்த்து சொன்னாலே அவரை டிவிடடரில் அன்-பாலோ பண்ணும் டிரெண்டை முன்னெடுக்கிறார்கள் அவர் தொண்டர்கள். இன்றைய நிலையில் தார்மிக ரீதியிலும் இஸ்லாமியர்கள் பக்கம் நிற்பதே அறம். அதை மீண்டும் மீண்டும் அவர்களுக்கு உறுதிப்படுத்திக்கொண்டே இருப்பது என் போன்றவர்களின் கடமை. இந்த ராமர் கோயிலை வெற்றியாக கொண்டாடும் ஒரு மனதுக்கு முற்றிலும் எதிரான நிலையில் என் மனதை வைத்துக்கொள்வதுதான் எனது தனிப்படட ஆன்மிகம் சார்ந்தும் சரியானது, இவர்களின் கொண்டாடத்தில் நான் இல்லை....
    1
    • Like
    • Reply
    • 7w
    • இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையின் தூல வடிவம் ராமர்கோவில் / மசூதி இடிப்பு -- இதை நான் ஏற்கவில்லை, எந்த சாதாரண இந்துவும் அப்படி பார்க்க வில்லை,
      சில ஆர்வ கோளாறுகள் அப்படி முன்வைக்கலாம், ஆனால் பொதுவான மனநிலை அப்படியானதல்ல, இதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்.
      அதிகபட்சம் இதை போலாம் பிற இடங்களில் இருக்கும் இந்து கோவில்களை இடித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து மீண்டும் அங்கு கோவில்கள் கட்டவேண்டும் என்று சொல்வதை பார்த்திருக்கிறேன், அதுவும் மிக சிலர்தான்
      • Like
      • Reply
      • 7w
  • இஸ்லாமியர் கொள்ளும் அச்ச உணர்வு குறித்து பேசுகிறீர்கள். சரி. காஷ்மீர் பண்டிட்கள் இனப்படுகொலை , மும்பை - கோவை குண்டுவெடிப்பு , கோத்ரா ரயில் எரிப்பு - யாகூப் மேமனுக்கான பெரும் ஆதரவு - இதெல்லாம் என்ன?
    இதில் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை பாபர் கும்மட்டம் இடிப்பதற்கு 2-3 வருடங்களுக்கு முன்பு. காஃபிர்களுடன் சேர்ந்து வாழ முடியாது என நாட்டை துண்டாடியது 1947ல். உண்மையில் யார் யாரிடம் அச்ச உணர்வு கொள்ள வேண்டும்? திருபுவனம் ராமலிங்கம் நிகழ்வை எப்படி எடுத்துக் கொள்வது?
    1
    • Like
    • Reply
    • 7w
    • Edited
  • பிஜேபி அடிப்படையிலேயே ஜனநாயகத்துக்கு விரோதமான கட்சி என்றே நினைக்கிறேன். இவர்களுக்கு அடிப்படையிலேயே பிரட்சாரம், மக்கள் ஏற்பு, சமரசம் பேசுதல் என்பதில் எல்லாம் நம்பிக்கையே இல்லை. அதனால்தான் சொல்கிறேன் இந்துத்துவம் என்ற வார்த்தையை இவர்கள் பெரும்வாரி மக்களுக்கு அறிமுகப்படுத்துனதே மசூதி இடிப்பு என்ற செயல்முறை விளக்கத்தின் மூலம்தான். அதுக்கு முன்னாடி இந்துத்துவத்தை காந்தியை சுட்டுக் கொன்றதன் மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருப்பார்களாக இருக்கும்.
    இந்தியாநாட்டில் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவு வன்முறையை கையில் எடுத்து இந்த அளவு வெறியாட்டம் நிகழ்த்திய இன்னொரு மக்கள் அமைப்பு இல்லை என்றே நினைக்கிறேன். இவர்கள் அதை பெரும்பான்மையின் மத அடையாளத்தை முன்வைத்து நிகழ்த்துவதால் இந்த மக்களின் தன்-அடையாள சார்பு அதை மிக எளிதாக கடந்து செல்ல வைக்கிறது. மதத்தை அரசியலில் கொண்டுவந்தது அவர்கள் செய்யும் எல்லா தவறுகளையும் இந்த மக்கள் எளிதாக கடந்து செல்ல வழிவகித்திருக்கிறது. மிக அபாயகரமானது.
    அரசியல் அதன் தளத்தில் இன்னொரு அரசியல் நடவடிக்கையினால்தான் எதிர்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இவர்கள் அரசியலை மதத்தால் எதிர்கொண்டு, எல்லா தவறுகளுக்கும் மதம் சார்ந்த இந்த பெரும்பான்மை மக்களின் உடனடி மன்னிப்பை பெற்று தொடர்ந்து அந்த வெற்றி ஃபார்முலாவை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாற்று மதத்தின் சிறு சிறு நிகழ்வுகளைக் கூட கவனத்துக்கு கொண்டுவந்து விவாதிக்கும் இவர்கள் இந்துத்துவர்களின் வன்முறை செயல்பாடுகளை மிக எளிதாக கடந்து செல்லுகிறார்கள். இவர்களின் கவனத்துக்கு அது வருவதே இல்லை. அப்படி சென்றுதான் அதன் குற்ற உணர்வில் இருந்து தப்பிக்கவும் முடியும் என்பதையும் ஏற்கிறேன். Ethical Amnesia. ஒரு பிப்ரவரி 14 வந்தாலே இந்தியா முழுவதும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
    மத அரசியல் மூலம் பண்பாட்டு அடையாளங்களையும் உணர்ச்சிபூர்வமான குறியீடுகளாக ஆக்கி, அதையும் ஒற்றைப்படையாக்கி, தன்-அடையாளமாக பெரும்பான்மை மக்களை அதன் கீழ் தொகுத்து, அதன் மீதான எந்த விமர்சனத்தையும் இந்திய பண்பாட்டை எதிர்பவர்களாக முத்திரை குத்தி விவாதமே இல்லாமல் தீர்ப்புகளை வழங்க ஆரம்பித்துவிடடார்கள்.
    1
    • Like
    • Reply
    • 6w
  • View 7 more replies
    • இப்படி ஒன் சைடுஆக தீர்ப்பு சொல்லி ஓடினா சரிவராது, இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சி மீதம் இருக்கிறது, எனவே பொறுத்திருந்து தீர்ப்பு சொல்லவும் 
      🙂
      ஆட்சி சரியில்லை என்றால் மக்கள் கண்டிப்பாக இறக்கி விடுவார்கள், மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் ஆட்சி சரியில்லை என்றால் மட்டுமே.. 
      🙂
      ஓகே, நன்றி சரண்
      1
      • Like
      • Reply
      • 6w
  • அதனால்தான் “ஆட்சியை” மட்டுமே அரசியலில் முன்வைக்க வேண்டும் என்கிறேன்... அப்போதுதான் அது சரியில்லை என்றால் அதிலிருந்து இறக்க முடியும். அரசியலின் தகுதியை நிர்ணயிப்பது அரசியல்ரு், ஆட்சி, நிவாகமாக மட்டுமே இருக்கட்டும் என்கிறேன். இங்கு இருப்பது பெரும்பாண்மையினரின் மதம். எனவே அவர்களுக்கான பயத்தை உறுதிசெய்வது மட்டுமே ஆட்சியை தக்க வைப்பதற்க்கு போதுமானது. நிர்வாக சீரழிவுகளை தற்காக்க மனம் தொடர்ந்து காரணங்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்... தொடர்ந்து... அதுக்கு அழிவிருக்காது.
    1
    • Like
    • Reply
    • 6w
  • மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்பது உன் எண்ணமா, மக்களிடம் போ, அதன் தீமைகளாக நீ நினைப்பதை சொல்லு. பிரட்சாரம் பண்ணு, ஒரு ஜனநாயக நாட்டில் அதற்கான எல்லா வசதிகளும் உள்ளன. அதில் ஒரு குறையும் இல்லை. அதுவும் ஒரு பெரிய நாட்டின் ஆடசி பொறுப்பில் இருக்கிறார்கள், கோடி கோடியாய் பணம் இருக்கிறது, எல்லா ஆடசி அதிகாரங்களும் உள்ளது, மக்களிடம் வீதி வீதியாய் போங்கள், பிரட்சாரம் பண்ணுங்கள், யார் வேண்டாம் என்பது. அப்படி ஜனநாயக வழிமுறைகள் எதையும் நான் இவர்களிடம் பார்க்கவில்லை.
    இவர்களின் ஜனநாயகத்துக்கு எதிரான இந்த அடிப்படை குணம்தான் இவர்களது ஆட்ச்சிப்பணியிலும் எதிரொலிக்கிறது, இவர்களது எல்லா தோல்விக்கும் அதுதான் ஆதாரகாரணமாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு, GST அமல்படுத்தியது, ஸ்வச் பாரத், ஸ்மார்ட் சிட்டி என்று இவர்கள் எந்த திடடமும் தோல்வியாவதற்கு அதுதான் காரணம். இவர்கள் இவர்களின் தோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். மக்களுக்கு விடிவு இல்லை.
    1
    • Like
    • Reply
    • 6w
  • ஜெமோ இன்று இதையே சொல்லி இருக்கிறார்.
    //இந்த விவகாரம் தொடங்கப்பட்ட நாள் முதலே நான் சொல்லிவருவது ஒன்று உண்டு, ராமர்கோயில் விவகாரம் இங்கே நிற்காது. இது பிற ஊர்களுக்கும் தொடரும். இதேபோல இவர்கள் பிரச்சினை செய்யக்கூடிய பல இடங்கள் உண்டு. இது அரசியல் லாபத்தை உருவாக்குகிறது என்பதனால் இதை முழுமூச்சாக தொடர்வார்கள். விளைவாக அடுத்த ஒருதலைமுறைக்காலம் இந்தியாவை நிரந்தரமான பதற்றநிலையில் வைத்திருப்பார்கள். மதவாதம் வழியாக அரசியலதிகாரத்தையும் மத அதிகாரத்தையும் அடைவார்கள். அரசியலதிகாரத்தை அடைவதனால் பொருளியலில் சமூகவியலில் இவர்கள் அழிவுகளை உருவாக்குவார்கள். ஆனால் மதஅதிகாரத்தை அடைவதனால் நீண்டகால அளவில் ஆன்மிகமான பேரழிவை உருவாக்குவார்கள்
    உலகம் முழுக்க எங்கெல்லாம் மதவாதிகளிடம் அரசியலதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் பொருளியலழிவு உடனடியாக நிகழ்ந்திருக்கிறது- உலக அளவில் ஒரு விதிவிலக்குகூட கிடையாது. இந்தியாவும் அந்த திசைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இச்சூழலில் மதத்தை கடந்து அரசியலைப் பார்க்கவேண்டிய கடமை இங்கே பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களிடம் உள்ளது. இந்துமத எதிர்ப்பாளர்களான சிறுகூட்டத்தின் சீண்டலால் சீற்றமடைந்து மறுதிசைநோக்கிச் சென்று நீண்டகாலப் பார்வையோ, ஒருங்கிணைப்பு நோக்கோ,பொருளியல் திட்டங்களோ இல்லாத இவர்களிடம் அதிகாரத்தை அளித்தால் அழிவை நம் தலைமுறைகளுக்கு கொடுத்துச் செல்கிறோம் என்றே பொருள்.//


  • Labels:

    Count The Moments
    Count The Moments

    0 Comments:

    Post a Comment

    << Home