ஆண்ட இனம் மாண்டழிந்த காலம் ......
மீண்டும் ..... மீண்டும்.... ஈழதினுள் நம்மை இழுத்துச் செல்லும் பாடல் .... ஆண்ட இனம் மாண்டழிந்த காலம் ... நாமெல்லாம் மௌன சாட்சிகளாக இங்கு ......
தொடங்கி ... தொடங்கி ... முடிந்த எல்லா வெற்றிகளும் "உன்னோடு" முடிந்துபோயினவா?
".......... தாழ்ந்தாலும்.... சந்ததிகள் வீழ்ந்தாலும்....
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்....."
"...... களங்களும் அதிர... களிறுகள் பிளிர.... ஈழம் (சோழம்) அழைத்துப் போவாயோ...?"
"தங்கமே என்னைத் தாய் மண்ணில் சேர்த்தால் புரவிகள் போலே புரண்டிருப்போம்.....
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை அருவிகள் போலே அழுதிருப்போம்...."
எப்படி ஒரு மிகப்பெரிய ஜனசமுத்திரத்தின் அத்தனை கனவுகளும்... ஏக்கங்களும் ... உன் ஒருவனை மட்டுமே மையம் கொண்டு பின்னப்பட்டது?
இன்று உன் ஒருவனுடைய அழிவு, எல்லா சாத்தியங்களையும், அபிலாசைகளையும் நிராசைகளாக ஆக்கிவிட்டு சென்றிருக்கிறது ...
இன்று எல்லாவற்றையும் தாண்டி எம்மக்கள் இழந்தது ....ஆயிரம் .... ஆயிரம்.... ஆயிரமாயிரம்.... பெற்றது என்ன?
..... நினைக்க... நினைக்க.... மேலும் மேலும் ஒரு முடிவில்லா சூனியத்திற்குள்லேயே செல்கிறது....மனம்.
பொம்மானே.. - ஆயிரத்தில் ஒருவன்
பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
வெய்யோனே என்புருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே
சோறில்லை சொட்டுமழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் உருவழிந்து முடமானோம்
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம் உடையகோனே
நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலும் சேறாகி போகமாட்டோம்
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்
பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே
இன்னோர் தோல்கருதி நீ எம்தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழுநஞ்சுண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ
பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்டஇனம் மாண்டழிய அருள்வாயோ...
Count The Moments |
0 Comments:
Post a Comment
<< Home