சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Wednesday, July 08, 2020

“நாடக காதல்”

“நாடக காதல்”
ராஜன் குறை கட்டுரைக்கு எதிரா இந்த வன்னியர் சங்கம் ஏதும் கருத்து தெரிவித்திருக்கிறார்களா??? இல்ல, என் பார்வைக்கு இன்னும் அது வரவில்லை, அதுதான்... முந்தாநாள்வரை “நாடக காதல்” என்று என்னிடம் நேரடியாக பேசி விவாதித்தவர்கள், நேற்றுவரை திரெளபதி படத்தின் நியாயத்தை நான் பார்க்க மறுப்பதை சுட்டிகாட்டியவர்கள், லவ்ஜிகாத் என்று நான் அறியும் நாளிலிருந்து பேசிக்கொண்டிருப்பவர்கள் எல்லோரும் இன்று அந்த கட்டுரைக்கு எதிராக பேஸ்புக்கில் சீற்றம் கொண்டாகிவிட்டது... வன்னியர் சங்கம் ஏன் இன்னும் தாமதிக்கிறது என்றுதான் புரியவில்லை, அதுதான்... ஒரு ஜெனரல் நாலெட்ஜுக்கு கேட்டேன் 😊 FB Comments
  • அந்த கட்டுரையை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், நாடக காதலை அந்த மக்களின் இயல்புகளில் ஒன்றாகவா அந்த கட்டுரை சொல்கிறது?
    ஆனால் நான் பார்த்த வரைக்கும் நாடக காதல், லவ் ஜிகாத் இரண்டையும் எதிர்த்தவர்கள் அதை அந்த மக்களின் இயல்பாக சொல்லவில்லை, விடுதலை சிறுத்தைகள் மற்றும் சில முஸ்லீம் அமைப்புகளை தங்கள் மக்களை அப்படி பயன்படுத்தி கொள்கின்றனர் என்றே சொன்னார்கள், மாறாக அந்த மக்களின் இயல்பாக முன்வைக்க வில்லை, திருமா மற்றும் விடுதலை சிறுத்தைகள் மீதுதான் எதிர்ப்பு வைத்தார்களே தவிர அந்த மக்கள் மீது அல்ல.
    இது நான் சொல்வது விவாதித்தவர்களை, பேசியவர்களை, முன்வைத்தவர்களை பற்றி, கள யதார்த்தம் பற்றி அல்ல.
    இந்த கட்டுரை இந்த மக்களின் இயல்புகளில் ஒன்றாக நாடக காதல் விஷயத்தை சொல்வதாக அறிகிறேன், ஒருவேளை நான் தவறா புரிந்திருந்தால் பதிலளிக்கவும், மாற்றி கொள்கிறேன்.
    • Like
    • Reply
    • 11w
    • நாடக காதல், லவ்ஜிகாத் என்று சொல்லி அதை சமூக மற்றும் அரசியல் தளத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக பிரச்சாரமாக முன்னெடுத்தவர்களுக்கு எதிராக நீண்டகாலமாக ஒரு தரப்பு இங்கே இருக்கிறது. இந்த விவகாரத்தில் அந்த தரப்பு என்ன சொல்கிறது என்பதைதான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிரேன்.
      நேற்று நாடகக் காதல் என்பதை எதிர்த்தவர்கள் இன்று என்ன சொல்கிறார்கள் என்பதில்தான் என் ஆர்வம் இருக்கிறது. நேற்றுவரை அதை தமது அரசியலுக்கான நியாயமாக கொண்டவர்கள், அதை ஒரு பிரட்சாரமா முன்வைத்தவர்கள் இன்று கூட்டத்தில் தாமும் சேர்ந்து தர்ம அடி போடுவது சார்ந்து எனக்கு ஆர்வமில்லை, அது அவர்கள் அரசியலுக்கு உதவுமா இருக்கும் ஆனால் கருத்தியல் தளத்தில் நாம் முன்வைப்பது அரசியலை அல்ல.
      1
      • Like
      • Reply
      • 11w
    • Saravanan Vivekanandan
       இந்த பதிவுல நீங்க வலது சார்பு ஆட்களை ஓட்டறீங்க னு நினைத்தேன், சரி விடுவோம் 🙂
      1
      • Like
      • Reply
      • 11w
  • /நேற்று நாடகக் காதல் என்பதை எதிர்த்தவர்கள் இன்று என்ன சொல்கிறார்கள் என்பதில்தான் என் ஆர்வம் இருக்கிறது./
    "நேற்று" இதை எதிர்த்த வலது சார்பு ஆட்கள் யாராவது இருக்கிறார்களா? இருந்தால் சொல்லு, அவர்கள் கருத்தும் எனக்கு முக்கியம். நிட்சயமாக அதை பொருட்படுத்துவேன்.
    1
    • Like
    • Reply
    • 11w
    • Saravanan Vivekanandan
       நான் சொன்னது கமெண்ட் பதிவு அல்ல, மேல இருந்த பதிவு.
      இதில் ஒன்னு சொல்ல நினைத்திருந்தேன், நாடக காதலை முன்பு எதிர்த்தவர்கள் இப்போது ஏன் ராஜன் குறை கட்டுரை விஷயத்தில் பேச வில்லை என்பது பற்றி.
      ஏனெனில் முதலில் நாடக காதல் - நிலைப்பாட்டில் முழுக்க ஒருபக்க சார்பில் நிலைப்பாடு எடுத்திருந்தனர், அதாவது நாடக காதல் என்பதை முன்வைத்தவர்கள் பக்கத்தை முழுக்க நிராகரித்தது, அப்படி நிராகரித்த பிறகு இப்போது ராஜன்குறையை முழுக்க நிராகரிக்க மட்டுமே இயலும்,
      இப்ப karlmax மட்டும் எழுதியிருந்தார், ஏன் அவரால் எழுத முடிந்தது எனில் அவர் அப்படி முழு ஒரு பக்க சார்பு நிலை முன்பு எடுக்க வில்லை, ஒருவேளை ஒரு வலதுசாரி அறிவுஜீவி இப்படி கட்டுரை எழுதி விவாதத்திற்குள் வந்திருந்தாலும் karlmax இப்படித்தான் எழுதியிருப்பார்,
      மற்றவர்கள்க்கு இருக்கும் பிரச்னை என்பது ஒன்று முழு நிராகரிப்பு அல்லது முழு ஆதரவு, இப்படி நிலைப்பாடு எடுப்பதுதான் இதுமாதிரி சமயங்களில் சிக்கலாகி விடுகிறது என நினைக்கிறன்.
      வலது சார்பில் குறை இல்லை என்று சொல்லவில்லை, காதல் திருமணங்களையும் அவர்கள் நாடக காதல் என்று சொல்லி தாங்கள் வலுவாக இருக்கும் இடங்களில் ஒடுக்குகிறார்கள் என்பதை ஏற்கிறேன், அதே சமயம் திட்டமிட்டு ஆதாயங்களுக்காக நடக்கும் காதல் விஷயங்களையும் கேள்விப்படுகிறேன், அவை உண்மையான தகவல்களாகவும் இருக்கின்றன.
      இவை தாண்டித்தான் தீர்வுகளை நோக்கி செல்லவேண்டும், என்னளவில் கலப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள் இந்துமதற்குள் சாதிய மனமிலையை பெருமளவு தளர்த்தும், இல்லாமல் ஆக்கும் என்று நம்புகிறேன்,
      1
      • Like
      • Reply
      • 11w
  • Radha
     ஆம், கார்ல்மாக்ஸ் எழுதியது எனக்கு முக்கியமானது. அதனால்தான் அதை சுட்டிகாட்டினேன்.
    1
    • Like
    • Reply
    • 11w
  • ராதா, எந்த ஒரு பிரட்சனையையும் அது எதன் அடிப்படையில் பேசுகிறது எதை நோக்கமாக கொள்கிறது என்பதைத்தான் பார்க்கனும். நாடக காதல் என்ற கதையாடலை முன்பு எதிர்த்தவர்கள் அது சமூகத்தில் அறவே இல்லை என்பதால் எதிர்க்கவில்லை, ஆனால் அது ஒரு சமூகத்தின் மீது பிரட்சாரமாக முன்னெடுக்கப்பட்டது, ஒரு கருத்துருவாக்க செயல்பாடாக முன்னெடுக்கப்பட்டது. அதை எதிர்த்தார்கள். அந்த பேச்சுகள் அறிவார்ந்த தளத்தில் நிகழ்ந்தது எனறா நினைக்கிறாய்???, அது அரசியல் தளத்தில் நிகழ்ந்தது. அதை எதிர்த்தார்கள்.
    ஸ்டாலின் “பரியேறும் பெருமாள் படம் பாத்தேன்” என்று அந்த படம் பார்க்கும் போட்டோவுடன் அதை பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். ஹெச். ராஜா திரெளபதி படத்தை புகழ்ந்து டிவிட்டர் மற்றும் பிரஸ்மீட் வைத்து பிரட்சாரம் பண்ணியிருந்தார். இவர்கள் இருவரும் சினிமா சார்ந்து பேசுபவர்கள் அல்ல, இதை இவர்கள் பேசுகிறார்கள் என்றால் இது உணர்த்தும் யார் எதை முன்னெடுக்கிறார்கள் என்று.
    ஒரு பிரட்சாரமாக பெரும் பொருட்செலவில் சினிமாவாக எடுக்கபட்டு, ஒரு தேசிய கட்சியின் பொறுப்பில் இருப்பவரால் பொது சமூகத்தில் பரப்பபட்ட ஒன்று சார்ந்து நமக்கு விமர்சனம் இல்லை, அதில் நாம் பார்க்கதவறும் “உண்மை” சார்ந்து கேள்வி எழுப்புகிறோம், ஆனால் ஆராய்சி தளத்தில் நிகழ்வதை பொது சமூகத்தில் நாம் விமர்சிக்கிறோம். அறிவார்ந்த தளத்தில் எதையும் பேசலாம், எதையும் முன்னெடுக்கலாம், ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் அதர்க்கான இடம் இருக்க வேண்டும். அதனால் பாதிப்பு இருக்கும்தான், மறுக்கவில்லை ஆனால் அதற்க்கான எதிர்வினை என்பது மாற்றுக் கருத்துக்களோடு, தரவுகளோடு அதே அறிவார்ந்த தளத்தில் நிகழவேண்டும்.
    ஜெமோ எப்படி “இலக்கியம் என்பது சரியான, மனிதாபிமானமுள்ள, ஒழுக்கமான, அழகான, சிறந்த விஷயங்களாலானதல்ல, அது உண்மைகளால் ஆனது” என்று சொல்கிறாரோ அதேபோல்தான் அறிவியலும் அல்லது எந்த ஒரு ஆராய்ச்சியும், அது அரசியல் சரிகளால் ஆனாது அல்ல. அது உண்மைகளால் ஆனாது. அது முழு உண்மையா? முழு உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. (ஒருவேளை இந்த ஆசிரியர்கள் இது “முழு உண்மை” என்று கொண்டு இதை பிரட்சாரமாக முன்னெடுத்திருந்தார்கள் என்றால் அல்லது தமது பிரட்சாரத்துக்கு இதை அடிப்படையாக சொல்லி இருந்தார்கள் என்றால் அப்போதுதான் அது எதிர்க்கப்பட வேண்டும்) எந்த ஒரு ஆராய்ச்சியும் ஒரு பகுதி உண்மை மட்டும்தான் அல்லது ஒரு கருதுகோள். அதுவும் அது தன்னை நிராகரிப்பதற்கான எல்லா அலகுகளோடும்தான் தன்னை முன்வைக்கும். இன்னொன்று இதை நிராகரித்து முன் செல்லும், அவ்வளவுதான். அந்த கட்டுரையில் ஆராயச்சி சார்ந்த, sample size சார்ந்த பல பிழைகள் உண்டு. எனவே அதன் தளத்தில் அதை எளிதாக நிராகரிக்கலாம். ஆனால் ஒரு அறிவார்ந்த தளத்தில் இதை சொல்லவே கூடாது என்றோ எப்படி நீ சொல்ல போகலாம் என்பதோ ஏற்புடையது அல்ல.
    2
    • Like
    • Reply
    • 11w
  • இந்துதுத்துவர்கள் விடுதலை சிறுத்தை கட்சியை அதன் இந்து எதிர்ப்பு அரசியலுக்காக எதிர்ப்பதாக இந்த நாடக காதல் விஷயத்தில் அவர்களுக்கு எதிராக நின்றனர், அது தவறுதான், விடுதலை சிறுத்தைகளை எதிர்ப்பதை தாண்டி அவர்களிடம் வேறு எந்த சாதிய நோக்கமும் இல்லை, அதை நிறைய பேரிடம் பேசி அறிந்திருக்கிறேன், இது கண்டிப்பா உண்மை, மற்றபடி காதல் திருமணங்களை அவர்கள் எதிர்க்க வில்லை, ஆனால் சாதிய மனநிலை கொண்ட ஆட்கள், கட்சிகள் நாடக காதல் என்று முன்வைத்ததில் சாதிய மனநிலை இருந்தது, இந்த விஷயத்தில் இந்துத்தவர்கள் சாதிய மனநிலை கட்சிகளை, ஆட்களை ஆதரித்து இருந்திருக்க கூடாது, அது பெரிய தவறு, விடுதலை சிறுத்தை எதிர்பரசியல்க்காக இந்த அபத்தத்தை செய்து விட்டனர்.
    ஆய்வு பற்றி நீங்கள் சொல்வதில் எனக்கு முழு ஒப்புதல் இல்லை, ஆய்வு முடிவுகள் பொதுவில்( epw) வெளியிட படுகின்றன, பகிர படுகின்றன, ஆதாரமாக எடுத்தாள படுகின்றன எனும் போதே அது கண்டடைந்த உண்மை எனும் இடத்தை அடைந்து விடுகிறது, குறைந்த பட்சம் ராஜன் குறை தன் ஆய்வை மறுத்து அதே இதழில் எழுதியிருக்கிறாரா, முந்திய ஆய்வு சரியான அளவு செய்ய படவில்லை, அது முழுமையானதாக இல்லை என்று மறுத்திருக்கிறாரா,அப்படி இருந்தால் ஓகேதான்.
    1
    • Like
    • Reply
    • 11w
  • Radha
     //ஆய்வு பற்றி நீங்கள் சொல்வதில் எனக்கு முழு ஒப்புதல் இல்லை//
    ராதா, இதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை, ஏனேனில் உனக்கு “கருத்து சுதந்திரம்” என்பதின் மீதும் ஒப்புதல் இல்லை. பெருமாள் முருகன் விஷயத்தில் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக எல்லோரும் இருந்தபோது நீ அதற்க்கு எதிராகதான் இருந்தாய். எனவே இது புரிந்து கொள்ளக்கூடியதுதான். இது மாதிரி நிறைய இருக்கு, கருத்து சுதந்திரத்தின் எல்லை, தனி மனித உரிமையின் எல்லை, பேச்சு சுதந்திரத்தின் எல்லை, கருத்துக்களை வெளிப்படுத்துவதின் எல்லை, சென்சார் போர்டின் எல்லை, அரசு அதிகார அமைப்பின் எல்லை, தனிபட்ட தகவல்களின் எல்லை என்று நிறைய இருக்கு. இது எல்லாவற்றைலும் நீயும் நானும் எதிர் நிலையில்தான் நிற்போம். எனவே ஆராய்ச்சி அல்லது அறிவார்ந்த தளத்தின் எல்லை என்பதில் உனக்கு ஒப்புதல் இல்லை என்பதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை. இதில் எதிலும் கருப்பு/வெள்ளையாக எந்த ஒரு இறுதி முடிவையும் யாரும் எடுத்துவிட முடியாது. நிறைய “கிரே ஏரியா” உண்டு. எனவே தொடந்த கற்றலை நீயும் நானும் செய்துகொண்டேதான் இருக்க வேண்டும். அதுவரை நீ நம்புவதற்க்கு நேர்மையாக நீ அதை முன்னெடுப்பதும் நான் நம்புவதற்க்கு நேர்மையாக நான் அதை முன்னெடுப்பதும் மட்டும்தான் நாம் செய்ய முடிவது. ஒரு நாள் நாம் இருவரும் அவர் அவர் நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கும் போகலாம், அதுவரை Cheers 👍

Labels:

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home