சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Sunday, July 05, 2020

கோவிட் - இந்தியா

சரண், இந்த இரண்டாம் கட்ட கொரோனா தாக்குதலில் infection rate is high but the death rate is low, I mean compared to the first wave, இதை எப்படி விளங்கிக்கொள்வது?



1. நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லும் அதே காரணம்தான். கோவிட்டில் இறப்பு என்பது நேரடியாக நோய் சார்ந்தது அல்ல, அது அந்த நாட்டின் சுகாதார மையங்கள் நோயாளிகளின் எண்ணிக்கையை தாங்கும் திறன் சார்ந்தது.
கோவிட் இப்போது 6 மாதங்களுக்கு மேல் இங்கு இருக்கிறது, இந்த 6 மாதத்தில் உருவான ஹாஸ்பிடல் ஃபெசிலிட்டி, வெண்டிலேட்டர், டிரிட்மெண்ட் procedure, இதை ஹாண்டில் பண்ணுவதற்க்கான மருத்துவர்கள் திறன் என்று எல்லாத்தையும் கணக்கில் கொண்டின்னா, ஆரம்பத்தை விட பல பல மடங்கு அதிகம்....
கோவிட் சார்ஸ்/ மெர்ஸ் மாதிரி கொல்லும் திறன் கிடையாது, பரவும் திறன் மட்டும்தான் அதிகம். அது பரவிய மக்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தாலே பெரும்பாலான மக்கள் பிழைத்துக்கொள்வார்கள். இந்த நீண்ட காலம் அப்படி நம்மை தயாரித்துக்கொள்ள உதவி இருக்கிறது. கோவிடிடம் நேரடியா பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அதனிடம் நான் சொல்ல தோனுவது, Don’t fight with your enemy so long, they will learn your art of war....
சிங்கப்பூரையே எடுத்துக்கொள், சிறு நாடு, ஆனால் ஒரு கட்டத்தில் 45,000 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருந்தது. அவ்வளவு பேரையும் தனிமைபடுத்தி, “மருத்துவ” வசதி செய்து கொடுத்து பார்த்துகொண்டார்கள். இப்ப குணமாகி வெளியில் வந்தவர்கள் கிட்டதட்ட 41,000 பேர்கள். (கிட்டதட்ட 90%). மொத்த இறப்பு 26.
2. இரண்டாவது, ஆரம்பத்தில் எல்லா நாடுகளிலும் ஒரு குறிபிட்ட நகரங்களில் பரவி, அந்த இடத்தின் சுகாதார மையங்களின் நோயாளிகள் தாங்கும் திறனை சோதித்தது, இறப்பு அதிகமாகியது. ஆனால் இந்த நீண்ட காலத்தில் அதன் பரவல் மிக பரந்து பட்டதாக ஆகிவிட்டது. எனவே இன்ஃபெக்‌ஷன் ரேட் அதிகமானாலும் அதன் பரந்துபட்ட பரவல் அதை கையாளும் திறனை நமக்கு கொடுத்திருக்கிறது. இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது.
3. மூன்றாவது, ஒரு “திறமையான” வைரஸ் கொல்லுதலில் தீவிரம் காட்டக்கூடாது, அதனுடைய பரிணாமம் என்பது பரவுதலில் தீவிரமாகவும், கொல்லுதலில் குறைவாகவும் இருக்க வேண்டும். எனவே இதே வைரஸில் கொல்லுதலில் தீவிரம் காட்டிய “வெர்சன்கள்” பரவுதலில் தோற்று (obviously) அழிய ஆரம்பித்து அதே சமயத்தில், கொல்லுதல் தீவிரம் குறைந்த வெர்சன்கள் அதிக அளவு பரவும் அனுகூலத்தைக் கொண்டிருக்கலாம்.... பரிணாமத்தில் இதுதான் இயல்பாக நடக்கும். இது ஒரு பார்வைதான், அப்படியா என்று இனிமேலான ஆராய்ச்சிகள்தான் உறுதி செய்ய முடியும்.

Labels:

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home