சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Wednesday, June 24, 2020

சாதி ஆணவக் கொலை - திமுக

சாதி ஆணவக் கொலைகாரன் சின்னசாமி விடுதலை தொடர்பாக திமுகவில் இருந்து அறிக்கை ஏதும் வந்ததா? தீர்ப்பை எதிர்த்து திமுகவை சார்ந்தவர்கள் பலபேரின் உரத்த குரல்களை தொடர்ந்து கேட்க முடிகிறது, ஆனால் திமுகவின் அதிகாரப்பூர்வமான எதிர்ப்பு மிக முக்கியம், அது இந்த சமூகத்துக்கான ஒரு செய்தி சொல்லல், பட்டப்பகலில் நிகழ்ந்த ஒரு கொடூரத்திற்கு பின் யார் பக்கம் நிற்கிறோம் என்று சொல்வது, எதை முன்வைக்கிறோம் என்று சொல்லுவது. ஒரு இயக்கமாக திமுகவின் கடமை இது. கொல்லப்படடவர்களுக்கு நியாயம் வாங்கித்தர எப்படி இந்த அரசு தவறியது என்று சுட்டிக்காட்டுவதும் இதை மேல்முறையீட்டுக்கு கொண்டு சென்று நியாயம் வாங்கித்தர இந்த அரசை வெளிப்படையாக வலியுறுத்துவதும் அதன் கடமை. பாப்போம்.

FB Comments 

  • Exactly
    1
    • Like
    • Reply
    • 13w
  • திமுக அதிமுக அரசு வழக்கை சரியாக நடத்தவில்லை என்று குறை சொல்லி அறிவிப்பை வெளியிடும்.நீங்க திமுகவை ஆதிக்க சாதி அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட கட்சின்னு நினைக்கறது உண்மையிலேயே வியப்பா இருக்கு.மேலவளவு முருகேசனைக் கொன்றவர்கள்,லீலாவதியைக் கொந்றவர்கள் விஷயத்திலெல்லாம் திமுக எப்படி நடந்துகொண்டதுன்னு பாருங்க..
    3
    • Like
    • Reply
    • 13w
  • Suresh Venkatadri
     //ஆதிக்க சாதி அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட கட்சி// என்று நான் நினைக்கவில்லை. ஒன்றிடம் எதை எதிர்பார்ப்பது என்பதில் எனக்கு ஒரு தெளிவு உண்டு. எனக்கான வரையறை உண்டு. ஆதிக்க சாதி அரசியலுக்கு எதிரான ஒற்றை கட்சி கூட இல்லாத, இருக்க முடியாத ஒரு சமூகத்தில் திமுக மட்டும் அப்படி இருக்க வேண்டும் என்று என்னால் எதிர்பார்க்க முடியாது. (திக விடம் அதை நீங்கள் எதிர்பார்க்கலாம்) ஆனால் அதை சமூகத்தில் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும், அதற்காக குரல்கொடுக்கும், அதற்கான மனப்போக்கும் உள்ள முற்போக்காளர்கள் மற்ற எந்த மக்களரசியல் கடசியையும்விட திமுகவில் அதிகம். எனவே இதை திமுகவிடம் என்னால் கேட்கவாவது முடியும்.
    5
    • Like
    • Reply
    • 13w
    Hide 16 Replies
    • Saravanan Vivekanandan
       ...திமுக மேல ரொம்பதான் நம்பிக்கை வைச்சி௫க்க... திமுக அதிமுக இரண்டுமே இடைநிலை ஜாதிகளின் கூட்டுதான்... இந்த விடுதலை வாங்கி தந்து போராடியது தேவர் சங்கம்... எனக்கு ஒரே ஒ௫ அறிக்கை திமுகவிடம் இ௫ந்து தேவர் சங்கத்திற்கு எதிராக வந்தா நீ சொல்றத ஒத்துகிட்டு நானும் திமுக முற்போக்கு கட்சின்னு ஏத்துக்கிறேன்.. ( இதே மாதிரி விடுதலையை பிராமனர் சங்கம் வாங்கி கொடுத்த என்ன ஆகியி௫க்கும்ன்னு நான் கேட்க மாட்டேன்..ஏன்னா அது உனக்கே தெரியும்...)
      1
      • Like
      • Reply
      • 13w
    • இங்கு திமுகவின் அரசியல் கணக்குகளோ திமுகவுக்கு எவ்வளவு ஜாதிக்கு எதிரான தூய்மை இருக்கிறது என்பதோ முக்கியமல்ல. மக்கள் செல்வாக்கு உள்ள எதிர்கட்சி என்ற முறையில் திமுக அரசின் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால் அது மக்களின் கவனத்துக்கு வரும். உண்மையில் இந்தியா என்பது ஒரு ஜாதிய சமூகம் மட்டும்தான். என்றாலும் பெயரளவில் ஒரு ஜனநாயக அமைப்பு இந்த எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம். புகைப்பிடித்தால் கேன்சர் வரும் என்று சிகரெட் டப்பாவில் எழுதுவது மாதிரிதான்.
      1
      • Like
      • Reply
      • 13w
      • Edited
    • Ragu Raman
       ரகு, நான் திமுக மீது எது சார்ந்த நம்பிக்கை உண்டு என்று தெளிவாவே மேலேசொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆதிக்க சாதி அரசியலுக்கெதிரா எல்லாம் ஒரு மக்களரசியல் கட்சி இயங்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் அந்த முற்போக்கு மனப்பாங்கை அந்த கடசியில் வளர்த்தெடுத்த ஒரு பாரம்பரியம் அந்த கடசிக்கு உண்டு, சமரசத்துக்கு உட்பட்டுதான். அதனால் மற்ற எந்த அரசியல் கடசியையும் விட மிகப்பெரும் முற்போக்காளர்கள் எண்ணிக்கை திமுகவில் உண்டு. இன்று திமுக தலைமை இதற்க்கு எதிராக குரல் கொடுத்திருந்தால் அதற்காக உண்மையிலேயே மகிழும், வரவேற்கும் அதை முன்னெடுத்து செல்லும் ஒரு பெரும் கூடடம் திமுகவில் உண்டு. அவர்கள்தான் திமுக சார்ந்த என் நம்பிக்கை.
      2
      • Like
      • Reply
      • 13w
    • அதேபோல் இந்த விடுதலை வாங்கி தந்து போராடியது தேவர் சங்கம்... என்று சொன்ன, இந்த விடுதலையை வாங்கி தந்தது எது என்ற அளவில் எனக்கு கொஞ்சம தெரியும், அந்த அதிமுக அரசியலுக்குள் நான் இப்ப போக விரும்பவில்லை.
      • Like
      • Reply
      • 13w
    • தேவர் சங்கத்தையோ வேறெதாவது ஆதிக்க சாதி சங்கத்தையோ எதிர்த்து வேறெந்த வெகுஜன தேர்தல் அரசியல் கட்சியாவது அறிக்கை விட்டிருக்கிறதா? சங்கர் கொலை வழக்கு தீர்ப்புக்கு திமுக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடாததில் எனக்கும் மிகுந்த கோவமும் வருத்தமும் உண்டு. ஆனால் நாம் திமுக என்று வந்துவிட்டால் அவர்களுக்கு வைக்கும் அளவுகோல்களே வேறு,. மற்ற தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் சலுகைகளை திமுகவுக்கு வழங்க மறுக்கிறோம். ஏன்?
      2
      • Like
      • Reply
      • 13w
    • ஜாதிய வெறுப்பு இல்லாமல்,கொலை செய்ய விரும்பாமல் தாழ்த்தப்பட்ட பெண்ணை அல்லது பையனை தன் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்ட பார்ப்பனர்,உள்ளிட்ட உயர் ஜாதி இந்துக்கள் என்பவர்கள் காங்கிரஸ் சிலும்,பி.ஜே.பி.யிலும்,திமுக,அதிமுக விலும்,கம்யூனிஷ்ட்டிலும்,எல்லா அரசியல் கட்சியிலும் உள்ளார்கள் .அவர்களை பற்றி பேச,பாரட்ட இங்கு யார் இருக்கிறார்கள்?இதற்கும் அறிக்கை ஏதும் விட வேண்டுமா?
      • Like
      • Reply
      • 13w
      • Edited
    • Gopalakrishnan
       கோபால், ஏனெனில் மற்ற கடசிகளுக்கு அந்த முற்போக்கு பாரம்பரியம் இல்லை. பொதுவெளியில் தொடர்ந்து அதை பேசி முன்னெடுக்கும் இந்த அளவு தொண்டர்கள் இல்லை, எனவே இந்த எதிர்பார்ப்பு மற்ற எந்த கடசிகளையும் விட திமுக மேல் அதிகம் உள்ளது. அது ஒருவகையில் சரியானதும் கூட. இவர்களால் இதை திமுகவிடம்தான் கேட்கவாவது முடியும். ஆனால் அதை திமுகவிடம் கேட்க, அவர்களை வலியுறுத்தத்தான் அது எனக்கான காரணமாக இருக்கிறதே தவிர, இதைக் கொண்டு திமுகவை மற்ற பிற்போக்கு கடசிகளுக்கு நிகராக வைக்கவோ, அவர்களும் இவர்களும் ஒன்றுதான் என்று சொல்லி தமது பிற்போக்குத்தனகட்சி ஆதரவுக்கு நியாயம் தேடுவதற்கு அல்ல.
      2
      • Like
      • Reply
      • 13w
    • உங்கள் பார்வையைத்தான் நானும் முன்வைக்கிறேன். முற்போக்காளர்கள் அதிகம் உள்ள கட்சி, பல முக்கிய மாற்றங்களை விளைவித்த கட்சி என்ற மரியாதை/நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படும் எதிர்பார்ப்பினால்தான் அவர்கள் தவறிழைக்கும்போது உரிமையுடன் கேள்வி எழுப்புகிறோம். ஆனால் பலர் அவர்கள் நம்மிடம் அந்த ந்ம்பிக்கை ஏற்படுத்தியவர்கள் என்பதையும் அதற்காக அவர்கள் செய்த முக்கிய மாற்றங்களையும் மறந்துவிடுகிறார்கள். மற்ற பிற்போக்கு கட்சிகளுக்கு இணையாக பேசிவிடுகிறார்கள். அதே நேரம் பிற்போக்கு கட்சிகள் சின்னதாக எதாவது செய்தால் அவர்களுக்கு பல சலுகைகளைத் தரத் தயாராக இருக்கிறார்கள்.
      3
      • Love
      • Reply
      • 13w
    • Gopalakrishnan Sankaranarayanan
       சென்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சாதி பார்த்துத்தானே திமுக, அதிமுக ரெண்டு பேரும் நிறுத்தினாங்க? அப்படி உண்மையிலேயே சமூகநீதிக்காரங்கன்னா தலைமையுடமிருந்து ஒரு சொல்லும் வரவொல்லை என்பதையும் ஏன் எல்லாரும் சுற்றி வளைத்து முட்டுக்கொண்டுக்க்ச் வேண்டும்? கலைஞர் வேறு ஸ்டாலின் வேறு.
      • Like
      • Reply
      • 13w
    • மேடம் நான் முட்டுக்கொடுக்கவில்லை. தலைமையிடமிருந்து கண்டனம் வாராத்தைக் கண்டித்து நேற்றே ஒரு பதிவு எழுதியிருந்தேன். நீங்களும் எதிரிவினை ஆற்றியிருந்தீர்கள். மேலே சிலர் கமெண்ட்டில் திமுகவை அதிமுகவுடன் ஒப்பிட்டு இரண்டும் ஒன்றுதான் திமுக சாதி கட்சி என்று பேசியதற்கான எதிரிவினைதான் என்னுடைய கமெண்டுகள்,மற்றபடி திமுகவும் சாதியுடன் பல சமரசங்களை செய்துகொள்கிறதுதான். அதை நாம் கடுமையாக விமர்சிக்க வேண்டும்தான் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேபோல் கலைஞரும், ஸ்டாலினும் வேறு வேறுதான். ஆனால் ஸ்டாலின் இன்னும் ஆட்சிக்கு வரவேயில்லை. அதற்குள் அவரைப் பற்றிய முழு முடிவை எடுக்க முடியாது.
      2
      • Like
      • Reply
      • 13w
    • Prasanna Ramaswamy
       கலைஞர் இருந்திருந்தாலும் இப்படி தான் இருந்திருக்கம், முக்குலத்தோர் வாக்குகளும் பெரும்பான்மையான தலித் வாக்குகளும் அதிமுகவிற்கு தான் விழுகிறது கடந்த 9 ஆண்டுகளில் சாதி ஆணவ கொலைகலை கணக்கிட்டால் என்னாகும் என தெரியாது. ஆரம்பித்திலிருந்தே திமுகவிற்கு இவர்கலிடத்தில் கணிசமான வாக்குகல் இல்லை.. ஆக திமுக அடக்கி தான் இருக்கும்..
      • Like
      • Reply
      • 13w
    • Vijay Antony
       அய்யா திமுகவை மட்டும் குற்றம் சொல்லமுடியாது சாதி அடிப்படையில் வாக்குகள் விழும் சூழல் இருப்பதும்தான் இதற்குக் காரணம் என்று சொல்வது வேறு. இந்த காரணத்துக்காக திமுக கண்டிக்காமல் இருப்பதை அப்படியே நியாயப்படுத்துவது வேறு. நீங்கள் பேசுவது இரண்டாவதைச் செய்வதுபோல் உள்ளது. எல்லாமே தேர்தல் அரசியல் கணக்குப்படிதான் என்றால் திமுகவை ஏன் ஆதரிக்க வேண்டும்? அப்படி என்றால் பிராமணர்கள் வாக்கு தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்எண்ணிக்கையில் இருந்தால் திமுக பிராமணியத்துக்கு எதிராகவும் எதுவும் செய்யாதா?
      1
      • Like
      • Reply
      • 13w
    • Gopalakrishnan Sankaranarayanan
       ஆனால் இந்த ஒரு காரணத்திற்காக திமுகவை வெறுப்பதில் நியாமில்லை என்பது என் கருத்து.. தேர்தல் அரசியலும் ஒரு முக்கிய புள்ளி.. ஒட்டுமொத்தமாக சாதி ஆணவ கொலைகலை ஆதரிக்கும் கட்சி அல்ல திமுக. அசுரன் படத்தை வெளிப்படையாக பாரட்டியதால் இடைத்தேர்தலில் ஒரங்கட்டப்படது..
      • Like
      • Reply
      • 13w
    • Vijay Antony
       திமுகவை யாரும் வெறுக்கவில்லை நண்பரே. அவர்களை நம்புவதால்தான் அக்கறையுடன் விமர்சிக்கிறோம்.
      1
      • Like
      • Reply
      • 13w
    • Gopalakrishnan Sankaranarayanan
       நானும் அதே மனநிலை தான். அவதூறுகளை சமாளிப்பதற்காகவே திமுக நிறைய நெரம் செலவிட உள்ளது.. கண்டித்து அறிக்கை விட்டால் ஒட்டுமொத்தமாக போட்டு தள்ள தமிழ் தேசியவாதிவலும் பாஜகவுடன் சேர்ந்து கொள்வார்கள்.
      • Like
      • Reply
      • 13w
    • Gopalakrishnan Sankaranarayanan
       ஒரு வழியாக..
      Image may contain: 2 people, text that says 'NEWS 7 � 24 JUNE 2020 JUSTIN கவுசல்யாவுக்கு உரிய நீதி கிடைக்குமா?" ஸ்டாலின் 'உடுமலை சங்கர் வழக்கில் சாட்சியங்கள் நிரூபிக்க காவல்துறை கடமையிலிருந்து தவறிவிட்டது; காவல் அதிகாரிகளே, சட்ட நெறிமுறைகளின் வழிநின்று கடமையை சரியாக செய்யுங்கள்!" TCCL. 207 036 191 071 105 082 026 19 783 051 JUSTIN CORONAVIRUS வருமுன் காப்போம் FOLLOWU ON'
      2
      • Like
      • Reply
      • 13w
  • இந்தியாவில் தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்த அரசியல் கட்சியுமே இது போன்ற நிகழ்வுகளில் கருத்து சொல்வதில் நிதானம் தான் காட்டும்.வடக்கில் இப்பொது என்ன நடக்கிறது மனித உரிமை என்பதே ஒன்று இல்லை எனும் அளவிற்கு வன்கொடுமைகளும்,படு கொலைகளும் நடக்கின்றன மாமிசம் வைத்திருந்ததாகக்கூட படுகொலை நடந்தது.அதற்காக இந்தியாவே ஆதிக்க சாதி அரசியலுக்கு துணை போகிறது என்று சொன்னால் பொருத்தமாக இருக்குமா?நாட்டில் பொது பிரச்சனை,தனிநபர் தகராறுகள் என வந்து கொண்டே இருக்கும்.இந்த படுகொலைக்கு காரணம் யார் தமிழக அரசா? இல்லை திமுகவா? வேறு அரசியல் கட்சிகளா? யாருமே இல்லை எனினும் தார்மீக ரீதியில் இந்த படுகொலை அநியாயமானது என நாம் கண்டிக்கிறோம்.இது போன்ற குடும்ப தகராறுகள்,கொலைகள்,சட்ட ஒழுங்கு கேடுகள் ஆங்காங்கே நடைபெறும் இதற்கான சூழலும் காரணிகளும் ஒன்று போல் இருக்காது.இவை எல்லாவற்றுக்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைமை பதில் சொல்ல வேண்டும் என எப்படி எதிர் பார்க்க முடியும்?கவுசல்யா மறு மணத்தில் தலையிட்ட வர்களுக்கு என்ன நேர்ந்தது?சமீபத்தில் ஒரு காதல்ஜோடி விசயத்தில் இப்படி கொந்தளித்து அந்த பெண் எல்லோர் கருத்திலும் செயலிலும் மண்ணை தூவி பெற்றோருடன் செல்ல வில்லையா?ஆக, எல்லா விசயத்திலும் எல்லோரையும் போல எல்லா தரப்பு மக்களையும் தொண்டராக கொண்ட அரசியல் கட்சிகள் அப்படி நடந்து கொள்ள முடியாது.சிலர் சொல்வது போல்நாட்டில் நடக்கும இது போன்ற அனைத்துக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்,கருத்து சொல்ல வேண்டும் என நினைத்தால் வடக்கே நடக்கும் ஜாதிய,ஆதிக்க அக்கிரமங்களுக்குமட்டுமின்றி காதல் விவகார கொலைகளுக்கும் சேர்த்தே பி.ஜே.பி.யும்,பிரதமர் மோடியும்தான் ஜவாப் தாரிகள் என்றாகும்.
    • Like
    • Reply
    • 13w
    • Edited
  • //ஆனால் அதை சமூகத்தில் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும், அதற்காக குரல்கொடுக்கும், அதற்கான மனப்போக்கும் உள்ள முற்போக்காளர்கள் மற்ற எந்த மக்களரசியல் கட்சியையும்விட திமுகவில் அதிகம்//
    இதற்கு என்ன ஆதாரம், எதை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்? இருக்கிற தேர்தல் அரசியல் கட்சிகளிலேயே அதிகம் இனவாதம் பேசி மக்களிடைடையே இன மொழி ரீதியான பிரிவுகளை அதிகமும் தூண்டிய கட்சி திமுகதான் (பாமக போன்றவை பின்னால வந்தன).'வடவர்கள் நம்மவர்களும் அல்ல நல்லவர்களும் அல்ல' என்றார் அண்ணா.அரசியல் ரீதியாக எம்ஜியாரை எதிர்கொள்ள முடியாத போதெல்லாம், அவரை மலையாளி என்றும் தமிழ்நாடு இரண்டாவது கேரளம் ஆக வேண்டுமா என்றும் பேசியவர் கருணாநிதி.(1972ல் அதிமுக ஆரம்பிக்கு வரை எம்ஜியார் பச்சை தமிழராகத்தான் இருந்தார்).எம்ஜியார் தனிக்கட்சி ஆரம்பித்த அந்த காலகட்டத்தில் மலையாளிகள் தாக்கப்பட்டதை அறிவீர்களா நீங்கள்.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிராமணர்களை அவாள் இவாள் என்று பேசியதும் திமுகவும் அதன் தலைவரும்தான்.திகவிலிருந்து பிரிந்த சிறு சிறு குழுக்கள், மார்வாடிகளுக்கு எதிராக கன்னடர்களுக்கு எதிராக அறிக்கை விட்ட போதெல்லாம் அதை மௌனமாக ஆதரித்தும் திமுக தான்.தமிழ் நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற குறுக்கல் வாதத்தை அதிகமும் பேசியதும் திமுகதான்.
    ஒப்புநோக்க தமிழ்நாட்டில் யாரையும், எந்த சாதியினரையும் சாதி சொல்லித் திட்டாத மொழிவழி சிறுபான்மையினரையும் ஒதுக்காத பெரிய கட்சி அதிமுகதான். அந்த வகையில் அது காங்கிரஸ் பாரம்பரியத்தின் வாரிசான கட்சி.காமராஜருக்குப் பின் தமிழநாட்டில் சாதி இன மொழி பாகுபாடுகளின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் எம்ஜியார்தான் கருணாநிதி அல்ல.திமுகவின் முற்போக்கு முகம் போலியானது.அது எதகனையோ முறை கழன்று விழுந்திருக்கிறது. நீங்கள் வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டீர்கள் போல.
    1
    • Like
    • Reply
    • 13w
    • மிக நீண்ட காலம் அரசியலில் இருந்த எந்த ஒரு கடசியையும் பற்றியம் இதெல்லாம் சொல்லலாம்தான். எம்ஜிஆர் இராமவார தோடடத்தில் ஒரு நிழல் ரவுடி அரசாங்கம் வைத்திருந்தார், எதிர்க்கும் ஒவ்வொருவரையும் அந்த தோட்டத்தில் வைத்து ரவுடிகளால் அடித்து ஒழித்தார், லஞ்சப் பணங்களை குவித்துவைத்திருந்தார் அதில் சிறுபகுதி எடுத்தவர்கள் பிற்காலங்களில் கல்வித்தந்தை ஆனார்கள், தன்னை புகழ்பாடுபவர்கள், திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு அள்ளிக்கொடுத்து கொடுத்து சிவந்த கரம் ஆனார், அணுக்கமான அமைசர்கள் ஏகபோகமாக வாழ்ந்தார்கள், நிர்வாக சீர்கேடுகளுக்கு அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிமன்றங்கள் என்று எல்லாவற்றையும் குற்றம் சாட்னார், தன் தொப்பியின் மீது கைவைத்த தொண்டரை அறைந்தார், ஒரு நடிகைக்காக மேல்சபையை கலைத்தார் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இங்கு என் பதிவு அது சார்ந்தது அல்ல.
      அடிப்படையில் திமுக, அதிமுக என்பது இரு வேறு சிஸ்டம். முற்றிலும் வேறு வேறு. அதேபோல் அதன் தொண்டர்களும். அதிமுக அதன் மொத்த காலமும் எம்ஜிஆர், ஜெயா என்று அதிகாரம் ஒற்றை புள்ளியில் குவிக்கப்படட, அவர்களை மட்டுமே முன்னிறுத்திய ஒன்று. அதற்கான அட்வான்டேஜ் அவர்களுக்கு இருந்தது. ஆனால் ஜனநாயகம் அதற்காக ஏற்படுத்தப்பட்ட்து அல்ல. இதற்க்கு மாறாக திமுகவில் அதன் ஆதிகாலத்தில் இருந்தே அதிகார பரவலாக்கம் இருந்தது. இதனால் விளையும் கெட்டதும் உண்டு. ஜனநாயகத்தின் எல்லா கெடடதுகளோடும் அதுதான் சிறந்ததே தவிர சர்வாதிகாரம் அல்ல. அதன் தொண்டர்களும் இந்த இரு வேறு சிஸ்டத்துக்கு ஏற்ப உருவானவர்கள்தான். அந்த அளவு சர்வாதிகாரத்தை ஏற்று ஒழுகும் அந்த அடிமை மன அமைப்பு திமுகவில் இல்லை. ஜெயலலிதா அதன் உச்சம் தொடடார். இதில் நீங்கள் எம்ஜிஆர் முற்போக்கு என்றும் அதன் தொண்டர்களும் முற்போக்கு என்றும் சொல்லிக்கொள்ளலாம். சொல்லிக்கொள்ளலாம்தான்.... 🙂
      திமுக ஒரு பிராந்திய கடசி, பிராந்தியக்கூறுகள்தான் அதன் அரசியல் தளம். பிராந்தியக்கூறுகளை முன்னிறுத்துவது பிற்போக்கு என்று சொன்னால் அதை ஏற்க முடியாது. ஆனால் அதில் வன்முறை கலந்தால் அதை ஏற்க முடியாது. திமுக தவறு இழைக்காத கட்சி என்று சொல்லவில்லை. அதற்க்கு என் விஸ்வாசத்தை சாசனம் எழுதி கொடுக்க முடியாது. எனது வரையறையில் அதன் எல்லா தவறுகளும் கேள்விகேட்கப்படும்தான். ஆனால் இப்போது இருக்கும் கடசிகளில் மற்ற எந்த கடசியையும்விட முற்போக்கான கட்சி திமுக மற்றும் அதன் தொண்டர்கள்.
      அதிகாரத்தில் இல்லை என்றாலும் எதிர்க்கடசியாக எப்படி அதன் கடமையை மறக்கலாம் என்று திமுகவை கேள்விகேட்க்கும் குரல்களைத்தான் பார்க்கிறேன், அதிகாரத்தில் இருந்தும் தனது கடசி எப்படி இப்படி கொலைகாரர்களை தப்பவிட்ட்து என்று கேட்க்கும் அதிமுக தொண்டர்கள் குரலை இன்னும் நான் கேட்கவில்லை.
      4
      • Like
      • Reply
      • 13w
  • திமுக ஒரு பிராந்திய கட்சி தேசிய கட்சி அல்ல அதிமுக எம்.ஜி.ஆர்.போல அனைத்திந்திய என்றெல்லாம் சொல்லிக்கொள்ள வில்லை.தான் இருக்கும் பிராந்தியத்தின் இனத்திற்க்கும்,மொழிக்கும்,பாடுபடாமல் வேறு யாருக்கு எதற்க்கு போராட முடியும்?இவ்வளவு ஏன் தனி நாடு கூட திமுக கேட்டது அதை இனவாதம் என சிலர் சொல்லலாம் சொல்கிறார்கள் தமிழ் மக்களுக்கான தமிழ் இனவாதம் அந்த தமிழ் மக்களுக்குள் எல்லா மதமும் சாதியும் அடக்கம் அதை ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள்,அந்த இனதுக்குள் நாங்கள் சேர்த்தி இல்லை என நினைப்பவர்கள்தான் திமுக ஒரு இன வாதி கட்சி என்று அன்றும் இன்றும் சொல்லிவருகிறார்கள்.
    1
    • Like
    • Reply
    • 13w
    • Edited
  • ஆர்.எஸ்.எஸ்.,ஜனசங்கம் தொடங்கி இன்று பி.ஜே.பி.யாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்இந்துத்துவம் பேசும் கட்சி எந்த வாத கட்சி?காங்கிரஸ்,கம்யூனிஷ்ட் தவிர்த்து பல தேசிய,மாநில கட்சிகள் எல்லாம் இன,ஜாதிய வாதம் பேசும் கட்சி தான்.ஆனால் பழி திமுக விற்க்கு இது சுத்தமான பக்க வாதம் அல்லவா?
    • Like
    • Reply
    • 13w
  • Image may contain: 2 people, text that says 'NEWS 7 � 24 JUNE 2020 JUSTIN கவுசல்யாவுக்கு உரிய நீதி கிடைக்குமா?" ஸ்டாலின் 'உடுமலை சங்கர் வழக்கில் சாட்சியங்கள் நிரூபிக்க காவல்துறை கடமையிலிருந்து தவறிவிட்டது; காவல் அதிகாரிகளே, சட்ட நெறிமுறைகளின் வழிநின்று கடமையை சரியாக செய்யுங்கள்!" TCCL. 207 036 191 071 105 082 026 19 783 051 JUSTIN CORONAVIRUS வருமுன் காப்போம் FOLLOWU ON'
    3
    • Like
    • Reply
    • 13w
  • காமராஜர் வழி வந்த கட்சி, ஏன் இங்கே தலித் சிறுபான்மையினரை இங்கே காக்கவில்லை? விதிகளுக்கு முரணாக 13 பேரை ஸ்னைப்பர் துப்பாக்கி மூலம் கொன்ற ஆட்சியைப் பற்றி ஒன்றும் பேச மாடடோம். பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் அத்து மீறலை செய்தது யார்? அந்த குற்றவாளிகள் எவ்வாறு தப்ப விடப்பட்டனர்?
    உத்திர பிரதேசத்தில் கற்பழிப்புக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் தந்தை அடித்துக் கொள்ளப் பட்ட போதொ அல்லது கத்துவாவில் குழ்ந்தை ஒன்று பலாத்காரத்தில் கொல்லப்பட்ட போது, ஆளும் கட்சியே குற்றவாளிக்கு ஆதரவாக பேரணி நடத்தியதை பற்றி நாம் பேசமாட்டோம்..
    ஆனால், தி.மு.க பற்றிய ஒரு எதிர்பார்ப்பு வைக்கப்பட்டால் கூட பொறுக்க முடியாது.. பொங்கி எழுவோம்..
    Dravidian Brigade என 70% மக்களைப் பார்த்து சிரிப்போம்..
    இதற்கு ஜாதி அரசியல் தலைவர்கள் மேல். அறிவு ஜீவி முகமூடிகளை அவர்கள் அணிவதில்லை..
    2
    • Like
    • Reply
    • 13w
  • சார், ஸ்டாலின் கண்டிச்சிருக்கார்... ஆனால் நீதி மன்றத்தை கண்டிக்கபில்லை.
    Prosecution failed in Shankar murder case: Stalin
    THEHINDU.COM
    Prosecution failed in Shankar murder case: Stalin
    Prosecution failed in Shankar murder case: Stalin
    1
    • Like
    • Reply
    • 13w
  • Karthick Pandian
     நீதி மன்றத்தை யாரும் கண்டிக்க முடியாது. ஒருவேளை பொறுப்பில் இல்லா தொண்டர்கள் தமது கோபத்தை அப்படி வெளிபடுத்துவார்கள், ஆனால் பொறுப்பில் இருக்கும் எவரொருவரும் அதை செய்யமுடியாது, அது நீதிமன்ற அவமதிப்பு. மேலும் அது எப்போதுமே நீதிமன்றம்தான், நியாயமன்றம் கிடையாது. Court of law. அங்கு சட்டத்தை, ஆதாரங்களை, வாதங்களை முன்வைத்து நீதியை பெறவேண்டியது prosecution தரப்பு மற்றும் ஆதாரங்களை தரவேண்டிய போலீஸ்தான். அவர்களின் “விருப்பமின்மை” தான் இதுபோன்ற வழக்குகளில் இந்த முடிவை நோக்கி தள்ளுகிறது. கண்டிக்கபட வேண்டியது அவர்கள்தான் மற்றும் அதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு.
    • Like
    • Reply
    • 13w
  • இதில் ஸ்டாலின் “Shankar was murdered because of caste arrogance" என்று சொல்லி இருப்பது, கௌவ்சல்யாவுக்கு நியாயம் வாங்கி தரப்படவேண்டும் என்று வலியுறுத்தி இருப்பது இரண்டும் முக்கியமானது.👍
    • Like
    • Reply
    • 13w
  • Balasubramaniam
     பாலா, பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படியெல்லாமா எழுதுவார், போட்டோஷாப் ஆக இருக்கும் என்று செக் பண்ணினால், இப்படியேதான் இந்த அம்மையார் எழுதியிருக்கிறார்.
    Image may contain: 1 person, text that says 'Mylai Rama பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவி, தென்சென்னை 2 mutual friends Add Friend'
    • Like
    • Reply
    • 13w
    • Saravanan Vivekanandan
       saw that too. what a low life. and law n order entities will go silent on them.
      1
      • Like
      • Reply
      • 13w
    • look how smart she is.. she wont do anything. She expects her father to kill her n go to jail.. what a great strategy..
      1
      • Haha
      • Reply
      • 13w
    • and the govt side which has the duty to hv argued the case strongly n got the right punishment to the culprits seems to hv failed miserably n the chief minister does not open his mouth n our intellectuals hail this party as an extension kamarajar ideol… 
      See More
      1
      • Like
      • Reply
      • 13w
  • Image may contain: 2 people, text that says 'Mylai Rama June 22 at 7:03 PM விடும்மா... விடும்மா...... டும்மா. உன்னை எப்படியும் போட்டுதள்ள தான் போறாங்க... அப்ப கண்டிப்பா உன் அப்பா-அம்மாவுக்கு தூக்கு தண்டனை தண்ட கொடுப்பாங்க... கொடுக்காட்டி, நாங்க னக்காக போராடுவோம். சரியா புதிய தலைமுறை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது கவுசல்யா 2/06/2020 1529 784582 218 14252 94 Comments 30 Share'
    • Like
    • Reply
    • 13w
  • Image may contain: 1 person, text that says 'Mylai Rama June 22 at 12:35 PM விடுதலையானது அதிர்ச்சி அளிக்கிறது... கௌசல்யா உன்னை பொளக்கத்தான் வந்து இருக்காரு, உஷாரா இருந்தோக்கோடி ஓடுகாலி!'
    • Like
    • Reply
    • 13w
  • Image may contain: 1 person, text that says 'Mylai Rama June 22 at 3:25 PM … கவுசல்யா முதல் புருஷனோட குடும்பத்த பாத்துக்குறாளா இல்லை ரெண்டாவது புருஷனோட குடும்பத்த பாத்துகிட்டு முதல் புருஷனுக்காக வாதாடுறாளா.'
    • Like
    • Reply
    • 13w
  • Image may contain: 1 person, text that says 'Mylai Rama June 22 at 3:25 PM … கவுசல்யா முதல் புருஷனோட குடும்பத்த பாத்துக்குறாளா இல்லை ரெண்டாவது புருஷனோட குடும்பத்த பாத்துகிட்டு முதல் புருஷனுக்காக வாதாடுறாளா.'
    • Like
    • Reply
    • 13w
  • இந்த அநியாயத்தை எதிர்த்து பொதுவெளியில் எழும் எல்லா குரல்களும் முற்போக்காளர்களின் குரல்கள், அது இந்த சமூகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது, சொரணையற்று போய்விடவில்லை. என்பதற்கான அடையாளம். இது இப்படிதான் இருக்க வேண்டும். இந்த மதவாதிகள் ஒன்று எதுவுமே நடவாதது போல் அமைதியாக இதை கடந்து செல்வார்கள், அல்லது இப்படி ஸ்டேடஸ் போட்டு சொரிந்து கொள்வார்கள்.
    1
    • Like
    • Reply
    • 13w
  • Balasubramaniam
     Yes, progressive voice must be louder, daily defended and conquered anew by strenuous effort... It is the same for democracy too, it is in peril too... Insecure minds always tend to lean towards autocrats and cause erosion of democratic values and practices.....You don't know what you have until it's gone......

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home