சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Tuesday, June 09, 2020

"சிந்தனை" - "தகவல் தளம்"

உங்கள் கருத்துகளை அல்லது நிலைப்பாடுகளை தகவல் தளத்தை அடிப்படையாக கொண்டு அமைத்துக்கொள்ளுங்கள். "சிந்தனை" அந்த "தகவல் தளத்தில்" இருந்துதான் மேலெழுகிறது. அதன் உண்மை மற்றும் பரந்துபடடதன்மைதான் அதை வலிமையாக்குகிறது.
தங்களை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பில் ஒற்றைப்படையான தகவல்கள் மேல் எவ்வளவு பெரிய கருத்துகளை எவ்வளவு காலங்களாக கட்டி கோபுரமாக்கி சென்றாலும், ஒரு செங்கலை உருவினால் எல்லா சிந்தனையும் மொத்தமாக சரிந்துவிடும். பலவருடங்களாக கட்டி எழுப்பிய ஒரு கோபுரம் ஒரு தகவல் பிழையினால் அல்லது புரிதல் பிழையினால் என்று அறியவரும்போது, இவ்வளவு நாள் அதற்கு செலவிடட மனஆற்றல் மற்றும் சிந்தனை விரயம் என்பதை மனம் ஏற்காது, எனவே மனம் அதை பல்வேறு வழிகளில் மீண்டும் மீண்டும் தற்காக்கவே முயலும்... ஒன்றுமே இல்லாததை மனம் விரும்புவதாலேயே தற்காக்க வேண்டிய அபத்தநிலைக்கு உள்ளாகிவிடுவீர்கள், மற்றவர்களுக்கு பார்க்க பரிதாபமாக இருக்கும்.



கோவிட்19 ல் Asymptomatic transmission இல்லை, சமுகப்பரவல் நடக்கவில்லை என்றெல்லாம் இன்றும் சொல்லிக்கொண்டிருப்பவர்களை பார்க்க அப்படிதான் பரிதாபமாக இருக்கிறது. அரசு அதிகார அமைப்புகளை தற்காக்கவேண்டிய உளஅழுத்தம் அவர்களுக்கு இயல்பானதாக இருக்கலாம், அறிவியயலின் வழிமுறை அது அல்ல.
அறிவார்ந்து இல்லாமல் கற்பிதங்கள், மனசாய்வுகள் வழி உருவாக்கி கொண்ட எந்த மன பிம்பத்துக்கும் எந்த மதிப்பும் இல்லை. அது எவ்வளவு காலங்கள் மனதில் கட்டி எழுப்பிய கோபுரமாக இருந்தாலும் சரி.
Beware of COVID19 related false Information, partisan, Psudoscience, sloppy details, Slanted News and Authentic material used in the wrong context. Be alert! Take a closer look, Look beyond the headline, Check other sources, Check the facts and biases.
இன்னும் சொல்லப்போனால், ஒரு அளவுக்கு மேல் எல்லோருக்கும் அதன் எல்லா நுண் தகவல்களும் தெரிய தேவையேயில்லை. இந்த கோவிட் பொறுத்தவரை நோய் அறிகுறிகள் வெளி தெரியாதவர்கள் மூலமும் நோய் பரப்புவதற்கான சாத்தியம் மிக அதிகம். அது நோய் கிருமி தொற்று உள்ளவரின் உடல் சார்ந்தது. எனவே அதை மட்டும் தெரிந்து, வெளியே செல்லுவதை தவிர்ப்பதையும், எப்போதும் மாஸ்க் அணிவதை கடடாயமாகவும் ஆக்கி, உங்களை காத்துக்கொள்ளுங்கள். அதுமட்டும்தான் உங்களுக்கு இப்போது தேவை.
இந்த செய்தி உங்களை பயமுறுத்தினாலும் நல்லதுதான், நமது சமூகத்தில் விழிப்புணர்வு என்பதே ஒருவகையில் பயமுறுத்துதல்தான், அதுதான் பயனளிக்கக்கூடியதும். இந்த கிருமி காற்றின் மூலம் பரவுகிறதா இல்லையா என்பது பொதுமக்கள் அளவில் விவாதிக்கப்பட வேண்டியது அல்ல, அது ஒரு வகையில் தவறு . அது அறிவியளாலர்களுக்கு இடையே மட்டுமான விவாதமாக இருந்தால் போதும்.. ஆனால் அறிகுறிகள் வெளியில் தெரியாதவரும் நோய்தொற்றுக்கு உள்ளாகியிருக்ககூடும் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். வெளினபர்களுடன் தொடர்புகளை குறையுங்கள், சாத்தியமான தூரத்தை கடைபிடியுங்கள், எப்போதும் மாஸ்க் அணியுங்கள். உங்கள் பாதுகாப்பு உங்களை பொறுத்தது.

FB Comments
கோவிட்டை பொருத்தவரை அதை ஒரு கிருமியாக மட்டும் கொண்டு அதன் பரவலை மற்ற நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வரமுடியாது. 0.0002% தான் இறப்பு விகிதம் என்று சொல்லி தற்காப்பது நகைப்புக்குறியது. ஏனேனில் இதன் பாதிப்பு என்பது நோய் சார்ந்தது மட்டுமில்லை. ஒரு நாடு எவ்வளவு பெரியபரப்பளவு கொண்டது, அதில் நோய் பரவுதல் எவ்வாலவு பரந்துபட்டதாக இருக்கிறது என்பதும் முக்கிய காரணி. சீனா பெரிய நாடு, ஆனால் அதில் நோய் பரவியது வூஹான் என்ற சிறு பகுதியில் மட்டுமே. சவுத் கொரியா, இத்தாலி, நியூயார்க் எல்லாமே சிறிய பகுதிகளில் தீவிரமாக பரவியது. எனவே அதன் இறப்பு விகிதம், பரவுதல் தீவிரம் அதிகம். இதையே ரஸ்யாவை எடுத்துக்கொண்டால், இறப்புவிகிதம் குறைவாகவே இருக்கும். இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்து நாடுமுழுவதுமான பரவல் என்பது இறப்புவிகிதத்தை அதிகரிக்காது, இது ஆரம்பத்திலேயே தெரிந்ததுதான்.. முதலில் மஹாரஸ்ட்ரா , தமிழ்நாடு, கேரளாவை அதிகம் பரவிய மாநிலங்களான சொல்லலாம். அதை தவிர்த்து நோய் பரவல் பரந்துபட்டதுதான். ஆனால் ஒரு குறிபிட்ட நகரத்தில் நோய் தொற்று அதிகமாகி மருத்துவமனைகளின் தாங்கும் திறனுக்கு மீறி செல்லும்போது இறப்பு விகிதம் அதிகரிக்கும். சென்னையில் இன்னும் இரண்டு வாரங்களில் அந்த நிலையை கடக்கலாம்.
இந்தியாவில் பரவிய முறை இதை “மெதுவாக” ஆனால் “தொடர்ந்து” பரவும் ஒன்றாகவே வைத்திருக்கும். இன்னும் நாம் பரவுதலின் “பீக்” கை அடையவில்லை. பொதுவாக பீக் கை அடைந்தபின் குறைந்தது ஒருமாதத்திற்க்கு அந்த நிலையிலேயே தக்கவைக்கப்பட்டு பிந்தான் குறைய ஆரம்பிக்கிறது.
இன்றைய நிலையில் மற்ற நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட்டு முடிவுக்கிவருவதில் உள்ள சிக்கல், மற்றனாடுகள் லாக்டவுனை தளர்த்தியது பீக் போய் கிழிறங்கும்போது, நாம் பீக்க்கு போவதற்க்கு முன்பே ரிலாக்ஸ் பண்ணிட்டோம், இதன் தாக்கம் இன்னும் 10 நாட்களில் தெரியவரும்.

மனதில் உள்ளதை அப்படியே சொல்கிறேன்.
மார்ச் 22 முதல் மே 3 வரையான காலகட்டத்தில் ஓரளவு அரசுகளால் காவல் துறையின் உதவியோடு ஓரளவு கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கில் நோய் எண்ணிக்கை பரவாத தாலும் பெரிய அளவில் மரணங்கள் நிகழாததாலும் கொரோனோவை நாம் வென்று விட்டோம் அதாவது இந்தியா வென்று விட்டது என்று கூட நான் நினைத்து விட்டேன்.
இப்போதைய செய்திகளைப் பார்த்தால் அடிவயிறு கலங்குகிறது.
இந்தியா முழுவதும் வெளிவரும் வீடியோக்கள் குறிப்பாக பேருந்திலும் இன்ன பிற பொது இடங்களிலும் மக்கள் எப்போதும் போல கூட்டமாக கூடி கும்மி அடிக்கின்றனர், நிலைமையின் தீவிரம் கீழ்த்தட்டு நடுத்தர இந்திய வர்க்கத்தினரிடம் அறுபது எழுபது கோடி மக்களிடம் சென்று சேரவில்லை.
இயற்கையும் இறைவனுமே நம்மை காக்கவேண்டும்...
நாற்பது ஐம்பது நாட்கள் சற்றேறக்குறைய நாட்டையே முடக்கிய பின்பும் நாட்டின் பெரும்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு சென்று சேரவில்லை என்னும் போது, கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது
1
  • Like
  • Reply
  • 15w
  • Kathirmurugan
     எந்த பெரும் திட்டமும் ஒற்றப்படையானது அல்ல, நோய் பரவலை கட்டுப்படுத்துதல் என்பது அறிவியல் சார்ந்தது மட்டுமல்ல. சமூகம் சார்ந்தது, அவர்களின் பொருளாதாரம் சார்ந்தது. திட்டத்தின் ஆரம்பத்திலேயே சமூகத்தின் பல்வேருதரப்புகளும் நமது எண்ணத்தில் இருதிருந்தால்தான் அதை வெற்றிகரமாக செய்திருக்க முடியும்.
    இந்தியா ஆரம்பத்திலேயே லாக்டவுன் செய்தது, அதுவே மக்களுக்கு ஒரு “செய்தி சொல்லல்தான்”. அப்போதே மக்களுக்கு இதன் சீரியஸ்னஸ் தெரிய ஆரம்பித்துவிட்டது. அது முன்னெப்போதும் நடந்திடாதது என்பதே அதன் தீவிரத்தை சொல்வதுதான். மக்கள் அதை ஆரம்பத்தில் மதித்தும் நடந்தார்கள். ஆனால் அது குறைந்த அளவு எதிர்கால உறுதி உள்ளவர்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும்தான். அன்றாட வாழ்வாதார பிரட்சனை உள்ளவர்களை, எதிர்கால நம்பிக்கையற்றவர்களை ஒற்றை அதிகார குரல் மாதக்கணக்கில் அடைத்துவைத்துவிட முடியும் என்பது சாத்தியமே இல்லை. மாதகணக்கு என்பது பெரிய கால அளவு.
    1
    • Like
    • Reply
    • 15w
  • “ லாக்டவுன்” என்று ஆரம்பத்திலேயே இந்தியா சொன்னபோது நானும் அப்படிதான் நினைத்தேன், இந்தியா வெற்றிகரமாக இதை முறியடிக்கும் என்று. அது ஒரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஒரு திட்டத்தை முன்னெடுப்பதற்க்கு முன்னான பல்வேறு முன்னேற்பாடுகள், (ஹெல்த்கேர் மற்றும் சமூக அளவில்) செய்திருப்பார்கள் என்று. ஆனால் அதற்க்கு பின்னான அரசு ஆவணங்கள் அப்படி எதையும் அவர் யோசித்ததாக கூட தெரியவில்லை. (இது புரிய முக்கியமாக கொள்ள வேண்டியது “டைம்லைன்” ... எப்போது எது நடந்தது என்ற வரிசைகிராமம் படி கருத்துக்களை தொகுத்துக்கொள்ளும்போதுதான், தவறு எங்கே நிகழ்ந்தது என்று தெரியும். மொத்தமாக யோசித்தால் நிறைய தவறவிட்டுவிடுவோம்)
    2
    • Like
    • Reply
    • 15w
  • லாக்டவுன் என்ற ஒன்று மட்டுமே இதை சரிசெய்துவிடும் என்று அரசு ஆரம்பத்தில் நினைத்து செய்யவேண்டி பலவிஷயங்கள் ஆரம்பத்திலேயே செய்யப்படவில்லை. முன்யோசனை இல்லாத மிக தாமதமான முடிவுகள், திட்டங்களை ஒற்றைபடையாக கொள்வது மற்றும் எல்லா அதிகாரத்தையும் தன்னை நோக்கி இழுத்துக்கொள்வது என்று பல தவறுகள். “பொறுப்பேற்ப்பதில்” எனக்கு டாப்டவுன் அப்ரோச்தான். மேலே உள்ளவர்கள் செய்யவேண்டியதை சரியாக செய்துவிட்டு பின் கீழே உள்ளவர்கள் செய்யவேண்டிய கடமையை சரியாக செய்ய எதிர்பார்க்கலாம் என்பது என் மனநிலை. எனவே அது அரசைதான் முதலில் எதிர்பார்க்கும், இப்படிதான் சிந்திக்கும். இதையெல்லாம் பேசுவதை தவிர்தே வந்திருக்கிறேன். அதன் பயன் எதுவும் இல்லை. மனதளவில் இந்தியாவை சிந்தனையில் இருந்து விலக்கிக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது. வேறு எதுவும் இப்போது செய்வதற்கில்லை
    4
    • Like
    • Reply
    • 15w
  • உலக அளவில் மூன்று நல்ல சாத்தியமான வேக்சின்கள் கிலினிக்கல் டிரைலில் உள்ளது, அவை முழுவதும் வெற்றி பெற்றால் அது முதலில் கிடைக்கபெரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். அது ஒன்றுதான் இப்போது ஆறுதளிக்கக்கூடிய விஷயம்.

Labels: , ,

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home