சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Thursday, June 18, 2020

-------------மலரினும் மெல்லிது------------------------
-ரா செந்தில் குமார்
-கனலி


முன்னாள் காதலி அவளது திருமணத்துக்கு பின்னும் எப்படி எல்லாம் தனது காதலை நினைவில் வைத்திருக்க வேண்டும், அதை தான் கொடுக்கும் பரிசு பொருள் மூலம் எப்படி எல்லாம் காலம் முழுவதும் நினைவுறுதிக்கொண்டே இருக்கலாம் என்று தேடி அலையும் மனம் வாய்ந்தவனில் இருந்து, குடும்ப நலனுக்காக கட்டிய மனைவியை பிரிந்து வெளினாடு சென்று சம்பாதித்து, அவளின் பேரில் சொத்துக்கள் வாங்கி, கடைசியில்...
“அதுக என்ன செய்யும்? ஏழுவருஷம் ஒருத்தன் வாழ்கையில் இல்லைனா, எதக் கண்டு அது நிறையும்”
என்று கண்ணாடியில் இருந்து பிம்பம் பிரிவதுபோல் சுவடுகளற்று பிரிந்து மண்டபத்தில் படுத்துகிடக்கும் இன்னொரு மனம் வாய்ந்தவன்....
“என்னமோ நடந்துடுச்சு, எனக்கொண்ணும் குறையில்லை”
பூ தொடுப்பதை இந்த கதை வழி கொண்டு வந்தது மிக அருமை செந்தில்.... மலரினும் மெல்லியதை தொடுப்பதில் இருந்து மொத்த வாழ்க்கையையும்தான் அது சுட்டி நிற்கிறது
“பிடி கிடைச்சிட்டுன்னுதான் கட்டுறோம், அப்படியும் சில பூ உதிர்ந்துடும், அதுக மனசு அப்படி, என்ன செய்றது??”
“தெரியாத மனிதன் என்ன பெரிய தீமையை செஞ்சுடமுடியும்ண்ணே” கதை பயணிக்கும் இன்னொரு தளம்.....

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home