தோழியாய் தொடற்வாயோ? ...
தோழியாய் தொடற்வாயோ?
இல்லை...
தோன்றிய வழி என் மனதில் அழிவாயோ?
உருக்கொண்டுயற என் மனதில்,
உன்மத்தம் உனக்கா... எனக்கா...?
உயிர் வாட செய்தவள் நீ...
நீ இன்றி யாது செய்யும் என் உலகம் ...?
உன் எதிரில் என் மனம் கிழிபடும் வாழையா?
கிழிந்த தென்னை ஓலையா?
உன் உயிரில் நான் இருப்பேன் என்ற நம்பிக்கையில்...
போய் வருகிறேன்...
என்றோ ஒரு நாள் இந்த பூமி பந்தின் ஏகாந்த வேளையில்
நம் சந்திப்பு நிகழும் ...
புதிய அலங்காரங்களோடு நாம்
முகமன் படுத்திக்கொள்வோம்
அன்றும் உனக்கான கேள்விகள்
என்னுள் தொக்கி நிற்க்கும்
நீயும் என்னை காதலித்தாயா?
Singasaran
Count The Moments |
3 Comments:
சிங்கா சீங்கபூர் காதலனே....... காதலின் ஆழம் பார்த்தவனே...
இன்னும் எழுது என் நண்பனே..........
வாழ்த்துக்கள்.......
This comment has been removed by a blog administrator.
தொடர்வாயோ
உருக்கொண்டுயர
- எழுத்துப்பிழைகளை கவனிக்கவும்.
வலைப்பதிவுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment
<< Home