சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Wednesday, May 02, 2007

நடிகர் பார்திபனின் பேட்டி-சன் டிவி




மே 1, உழைப்பாளர்கள் தினம்,

சன் டிவியில் காலையில் நடிகர் பார்திபனின் பேட்டி பார்த்தேன். அவர் பேசியதில் இரண்டு கருத்துக்கள் மனம் தொட்டன. ஒருநாள் தங்கர்பச்சனுடன் காரில் போய்கொண்டு இருந்தபொது தெருஒரத்தில் திருட்டு விசிடி விற்பனையை பார்த்து தங்கர்பச்சன் கோபபட்டபோது, இது போன்ற சிறுவியாபாரிகளை விட இதன் அடிவேரை சாய்ப்பதில்தான் திருட்டு விசிடிக்கு முற்றுபுள்ளி வைக்கலாம் என்றாராம். அது போல அவர் சொன்ன மற்றொரு விஷயம், சமுக சேவைக்கு ஒவ்வொரு மனிதனும் ஒரு ஜோல்னா பையை மாட்டிகொண்டோ அல்லது ஒரு இயக்கத்திலோ சேர வேண்டிய கட்டாயம் இல்லை, மனம் கொண்டு அவர் அவர் விரும்பும் காரியத்தை சமுதாயத்திற்கு செய்தாலே போதும் என்பது தான்.

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் இணையம் மூலமாகவே பல புதிய திரைபடங்களை பார்த்து முடித்துவிடுவது மட்டும் இன்றி அவ்ற்றை சீடிக்களிள் வெறு பதிவு செய்து எப்போது வேண்டும் என்றாலும் பார்த்து ரசிக்கிறார்கள்.

ஆனால் தமி்ழ்நாட்டில் வாழும் ஏழை ரசிகர்கள், பெரும்பாலும் தெருவோரம் வாழ் மக்கள் கூட தங்களாள் முடிந்த விலை கொடுத்து பென்ச் சீட்டாவது வாங்கி பார்க்கிறார்கள். இதில் உண்மையை யோசித்து பார்த்தால் ஹொம் தியேட்டர், இணைய வசதி அல்லது அலுவலகத்தில் பெரிதும் கணினியை பயன்படுத்தும் மேல்தட்டு படித்தவர்களே இது போன்று சட்டவிரோதமாக திரைபடம் பார்க்கிறார்கள்.

எவ்வளவோ செலவு செய்யும் நாம், திரைஉலகம் நல்ல படங்கள் கொடுப்பது இல்லை என்று வருந்தும் நாம், ஏன் மொழி, பருத்திவீரன்,வெயில் போன்ற சில நல்ல படங்களையாவது தியேட்டருக்கு சென்று பார்க்களாமே. தியேட்டருக்கு போக விரும்பாதவர்கள் வீசிடி விலை கொடுத்து வாங்கிபார்க்களாமே. இது போன்ற சில நல்லதுகளை நாம் செய்வதே, நாம் சமுதயதிற்கு செய்யும் சீரிய நன்மை. வாழ்நாளில் ஏதாவது ஒரு நன்மை செய்ய நம் உள்ளம் விரும்பியிருக்கும். அது ஏன் இது போன்ற நம் மனசுக்கு அறிந்த, சில தவறுகளை தவிர்த்து தொடங்ககூடாது.?

யோசித்து பார்த்தால் நாம் ஏல்லோருமே வேலை வாய்ப்பு தேடியதுண்டு. ஏதோ நிதி பற்றாக்குறையால் வேலை கிடைக்காமல் போனால் நாமும் நம் குடும்பமும் எவ்வளவு வருந்துவோம். ஆது போலதான் நாமும் திரைபடங்களை சட்டவிரோதமக பார்ப்பதால் ஏதோ சிலகுடும்பங்களின் நல்வாழ்வை அறிந்தோ அறியாமலோ நாம் பாதிக்கிறோம்.

திரு.பார்த்திபன் கூறியது போல் சமுக சேவை செய்ய பெரிதாக ஒன்றும் செய்ய வெண்டாம். சிறு சிறு முயற்ச்சிகளும் மனமும் இருந்தாலே பொதும்.... சேவை தொடங்கும்.

Count The Moments
Count The Moments

5 Comments:

At 8:13 PM, Blogger தினேஷ் said...

It is true. correct thought rathi.

 
At 9:25 PM, Anonymous Anonymous said...

நல்ல சிந்தனை, சிங்காசிங்கி. ஆனால் செயல் படுத்த தேவை, திடமான மனம். திருட்டு விசிடி வசதியானது. ஆனால் அது "திருட்டு" என்பது வலிக்கும் உண்மை. எல்லா தமிழ் படங்களையும் விலை கொடுத்து வாங்க மனம் துனியாது. ஆனால் நீங்கள் சொல்வது போல் "நல்ல" படங்களை தியேட்டர் சென்று பார்க்கலாம். இன்னும் நிறையா எழுதுங்கள். நன்றி.

 
At 8:18 PM, Anonymous Anonymous said...

hi, unkalaipolave, naanum mr,partheeba nin interview parthen- paartheeban pesuvathe kavithai thaan karuthu serivum irrukkum - avar soonna niray karuthukkal nantaaka irunthathu
about women also - then service
particularly we should appreciate his sypathy towards poor/orphan/oldage people / see, he himself adopted a child - nice perison -

 
At 1:59 PM, Blogger சக்தி said...

இன்னும் நிறைய எழுதுங்கள். நன்றி

 
At 9:44 PM, Blogger தேவன் மாயம் said...

நன்று!!
தொடர்ந்து
எழுதுக!!

 

Post a Comment

<< Home