உலகமே ஏதோ ஒரு புள்ளியில் தோற்றுக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல், நாம் செய்யும் காரியங்கள் நமக்குப் பலன் தருவதற்குப் பதிலாக, அவர்களுக்கு (எதிர்தரப்பிற்கு) சாதகமாகவே முடிகின்றன, we don't know what to do, so we do what we can do but it doesn't help us but help them....
கடந்த காலங்களில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு இடதுசாரிகளே, rationalists தலைமை தாங்கினார்கள். இன்றும் அதே கடமை உணர்வுடன் அவர்கள் களமிறங்குகிறார்கள். ஆனால், இன்றைய அரசியல் சதுரங்கத்தில் விளையாட அவர்கள் தகுதியற்றவர்களாகி விட்டார்கள் என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள். இது காந்தி வாழ்ந்த உலகமல்ல. ஏன், நாம் பதின்பருவத்தில் பார்த்த உலகம் கூட இதுவல்ல. இடைவிடாத பொய்ப் பிரச்சாரங்களிலிருந்தும், தர்க்கமற்ற முழக்கங்களிலிருந்தும் நமது 'மன நலனைப்' (Sanity) பாதுகாப்பதே இன்று பெரும் சவாலாக உள்ளது.
1. உணர்ச்சி Vs தர்க்கம்: சமமற்றப் போர்
மனிதர்கள் அடிப்படையில் உணர்ச்சிமயமானவர்கள், அதன் பிறகே பகுத்தறிவு வேலை செய்கிறது. உண்மையை விடவும் உணர்ச்சிகள் வேகமாகப் பரவுகின்றன.
- அவர்களின் ஆயுதம்: கதைகள், உணர்ச்சிகள் மற்றும் இடைவிடாத சலிக்காத ஒரே பாட்டு, Repetition
- நமது ஆயுதம்: தரவுகள், எண்கள் மற்றும் தர்க்கம்.
ஒரு அறிவியலளானாக என்னால் உண்மையை உணர்ச்சிமயமாக சொல்ல முடியாது, சொல்லக் கூடாது என்பதும் என் எண்ணம். எனது பேச்சுகளில் இருந்து உணர்ச்சிகளை வலுக்கட்டாயமாக வெளியே நிறுத்திவிட்டுதான் பேசுகிறேன். உணர்ச்சிகளை உண்மையில் கலப்பது மக்களைத் திசைதிருப்பும் யுக்தி. அப்படிச் செய்வது ஒருவிதமான குற்றவுணர்வைத் தருகிறது. ஆனால், அவர்களுக்கு அதுதான் பிரதான கருவி.
2. மாறிய ஆட்டமும் மாறாத விதிகளும்
கடந்த காலத்தில் "ஒருவர் தவறு செய்தால், அவரிடம் உண்மையைச் சொன்னால் அவர் தன்னைத் திருத்திக் கொள்வார்" என்ற விதி இருந்தது. இது அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் துறைகளில் வேலை செய்யும். ஆனால் இன்றைய அரசியலில் இது செல்லாது.
நாம் உண்மையை ஆதாரத்துடன் முன்வைக்கும்போது, அவர்கள் அதை தங்கள் மீதான தாக்குதல் என்று எண்ணி தற்காப்பு நிலைக்குச் செல்கிறார்கள். விளைவாக, அவர்கள் திருந்துவதற்குப் பதிலாக, இன்னும் தீவிரமாகத் தங்கள் தவறான நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார்கள். ஒருவகையில், நமது உண்மைகள் அவர்களை இன்னும் பலப்படுத்துகின்றன. இது ஒரு 'Autoimmune Disorder போன்றது. நமது சொந்த ஆயுதமே நம்மை அழிக்கிறது.
3. 'சிறிய உண்மை' என்னும் வலை
எந்தவொரு பெரிய பொய்யிலும் ஒரு சிறு துளி உண்மை கலந்திருக்கும். அந்தச் சிறு உண்மையை வைத்துக்கொண்டு அவர்கள் மொத்தப் பொய்க்கோட்டையையும் நியாயப்படுத்துகிறார்கள்.
உதாரணத்திற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) எடுத்துக் கொள்வோம். "வெளிப்படைத்தன்மை நிர்வாகத்தைச் சற்றுத் தாமதப்படுத்துகிறது" என்ற ஒரு சிறு உண்மையை மட்டும் பிடித்துக்கொண்டு, ஒட்டுமொத்த சட்டத்தையுமே முடக்குவதை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். நாம் அந்தத் தர்க்கப்பிழையைச் சுட்டிக்காட்ட முயலும்போது, பொதுமக்களின் செவிகளில் அவர்களது கதையே 50 முறை ஒலித்திருக்கும். இறுதியில் அவர்கள் வெல்கிறார்கள்.
4. களைப்புறுத்தல் உத்தி (Burnout Strategy)
அவர்களது வியூகம் மிக எளிதானது: ஒரு நாளைக்கு 20 பொய்களைப் பரப்புவார்கள். நாம் ஒவ்வொன்றாக 'Fact-check’ செய்து களைத்துப் போவோம். இறுதியில் நாம் சோர்ந்து விலகிவிடுவோம். ஆனால் அவர்கள் சோர்வடைய மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு அவமானம் என்பது கிடையாது. அவர்களுக்குத் தேவை இடைவிடாத குழப்பமும் சர்ச்சைகளும் மட்டுமே.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர்களும் தர்க்கத்தை அவ்வப்போது பயன்படுத்துவார்கள். ஆனால் அது நம்மைச் சிக்க வைக்க மட்டுமே, they could easily win us with facts and logics… Because thats what we believe in …so it convinces us immediately. We are stunned. We immediatly go to introspective.
Take the case of recent ICE agent killed a citizen, they argue “how come someone come out with loaded gun, If you go approach police with loaded gun they may feel threatened. Why someone carry gun to peaceful protest? These are the arguments of leftwing…. When the same arguments come from right wing… we stunned….
To convince someone about something like global warming might take an hour of explanation. But why do we explain the same thing for years … because our tool fail us…
While we debate for years, with research, facts and figures, they simply keep producing new stories. But they can create one emotional story in 10 seconds.
பகுத்தறிவாளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது: இந்த மேடையை விட்டு வெளியேறுங்கள். ஆட்டம் மாறிவிட்டது. நீங்கள் பழைய விதிகளை வைத்துக்கொண்டு புதிய ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறீர்கள். பலநூறு ஆண்டுகளாக உங்களுக்கு வெற்றியை கொடுத்துக்கொண்டிருந்தது எதுவோ அதுவே உங்களை வீழ்த்திக்கொண்டிருக்கிறது. இது உங்களுக்கான இடம் அல்ல.
Count The Moments |















